October 26, 2008

தமிழினப் படுகொலை

லங்காவில் இன்று உயிர் துச்சமாகி விட்டது.
சிங்களப் படை,
போர் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்களை
பேயாக அழித்து தனது
பசியாறிக் கொண்டிருக்கிறது
பால சிங்கங்கள்
அப்பாவிகளாய்
அழிவதைக் காண
அய்யகோ!-மனம் கனக்கிறது
சீர்மிகு தமிழகத் தமிழனமோ
சீர் கெட்டத் தனமாய்
சில்லறை வார்த்தைகளால்
சிங்களப் படைகளை இன்னும்
சீண்டி விட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனநாயகப் படுகொலைக்கு
எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய
ஐக்கிய நாடுகள் சபையே
ஐக்கியமாக வாய் மூடி நிற்கின்றது

சார்க் நாடுகளும்
இவற்றைக் கண்டு கொண்டதாக
தெரியவில்லை

இதனிடையில்...

ஆயுதம் ஏந்துவோமென்று
ஆவேச கூச்சலிடுகின்றன சில
அரசியல் ஆதாயக் கட்சிகள்
அவன் குரல் கொடுப்பது புலிகளுக்காகவே
அல்லாமல்
அநியாயமாய் அழிந்துக் கொண்டிருக்கும்
அப்பாவித் தமிழர்களுக்காகவல்ல.
அக்கறை அத்தனையுள்ளவன்
அக்கரைச் சென்று
ஆயுதம் ஏந்தட்டும்.

மலேசியாவில்
தமிழர்கள்
தாக்கப்பட்ட போது
எங்கிருந்தார்கள் இவர்கள்
அன்று எங்கே போனது
இவர்களது மனிதச் சங்கிலி.
அவனும்
தமிழன் தானே
தமிழினம் தானே

(இந்திய தேசத்திற்குள்ளேயே)
தனித் தமிழ்நாடும் வேண்டுமாம் இவர்களுக்கு,
தரங்கெட்ட சில கயவர்களுக்கு

இவர்களைப் போன்றோரினால்-தான்
இன்று இந்திய தேசம்
இங்கொன்றும் அங்கொன்றுமாக
பிளவு பட்டு நிற்கின்றது

மகாராஷ்டிராவிலே
மராத்தியனைத் தவிர
மற்றவனுக்கு வேலை வாய்ப்பு
மறுக்கப் பட வேண்டுமென
பிரச்சாரம் செய்து வரும்
பிரிவினைவாதிகளுக்கும்
தனித் தமிழ்நாடு வேண்டுமென
தரந்தாழ்ந்து
தர்க்கம் செய்யும்-இவர்களுக்கும்
என்ன வேறுபாடுள்ளது

இந்திய இறையாண்மைக்கு
இடையூறு விளைவிக்கும்
எந்த சக்தியையும்-இந்தியன்
ஏற்றுக் கொள்ளமாட்டான்

ஒரு நாட்டின்
உள் விவகாரங்களில்
தலையிடுவதே தவறானது
என்பது எனது கருத்து

எதுவாயினும்
லங்காவில்
ஏதுமறியா
எண்ணற்ற
உயிர்கள் மடிவது
உயிரை உறைய வைக்கிறது.
பலியாகும்
பச்சிளம் குழந்தைகளைக் காண
பதைப் பதைக்கிறது மனம்.

என்று மாறுமோ
இந்த அவலம்


திரு.மணிரத்னம், கவிப்பேரரசு.வைரமுத்து, இசைப்புயல்.ரஹ்மான் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு
சமர்ப்பித்த இப் பாடலை நான் மீண்டும் சமர்ப்பிக்கிறேன்
4 comments:

sivam said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

ஆ! இதழ்கள் said...

கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை. அனைவரும் படிக்கவேண்டிய பதிவு இது.

Suresh said...

ஆக்கமும் எழுத்தும் அருமை.

செம்மலர் செல்வன் said...

அர்னோல்ட், எப்படி இருக்கீங்க? உங்கள் கருத்துக்கள் அருமை.. ஆனால் மலேசியா தமிழ் மக்களின் நிலைமையும், இலங்கை மக்களின் நிலைமையும் ஒன்றா? மலேசிய தமிழர்கள் இந்து கோவில்கள் இடிக்கப்பட்ட பின்னரும், வேலை வாய்ப்பில் உரிமை கேட்டும் போராடுகின்றனர்.. அவர்களுக்காக கருணாநிதி குரல் கொடுத்தார்.. அதற்க்கு மலேசியா பிரதமர் எதிரிப்பு தெரிவித்தார்.. இது எங்கள் நாட்டின் உள் விவகாரம் என்றார்.. அங்கு இங்கு போல தினமும் மக்கள் கொள்ளப்படவில்லை,உணவு,இருப்பிடம்,குடி உரிமை இன்றி இலங்கை அகதிகள் போல இல்லை.. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாடு , நம் இந்திய நாடு.. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் தனி நாடு கேக்கும் போது தமிழன் , அவன் இனம் இலங்கை ராணுவத்தால் அழிந்து வீழும் போது கேட்க கூடாதா? அப்புறம் நாடு என்பது எதற்கு? தமிழ் நாடும் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே? இலங்கை , அடுத்த நாடு என்றால் இந்தியா ஏன் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கிறது? நீங்களும் , நானும் இலங்கையில் அடிபடுகிறவன் தமிழன் என்பதற்காக கவலைபடுகிறோமோ? இல்லை சக மனிதன் என்றா? இப்படி ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் ஓட்டுக்காக எந்த முடிவும் எடுக்காமல் சும்மா வல்லரசு என்று நாம் கூறி கொள்வதில் அர்த்தம் இல்லை.. தமிழ்நாடு பாராளு மன்ற உறுப்பினர் எண்ணிக்கை தேவை பட்டதால் தமிழுக்கு செம்மொழி இப்போது ஆந்திர தேர்தலை ஒட்டியும், தேவ கௌடவககும் அந்த மொழிகளுக்கும் செம்மொழி.. கேரளா,ஆந்திர,கேரளா யாரும் தண்ணி கேட்டா தர மாட்டேன் சொல்றாங்க.. அப்போ இவங்க இறையாண்மை எங்கே போனது? ஜெயலலிதா,இந்து ராம்,காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்காமல் மற்றவர்களை கூறியது எனக்கு வருத்தமாக உள்ளது... கமல் சொன்ன மாதிரி " அடிப்படை உரிமை மறுக்க படும்போது தீவிரவாதம் " தோன்ற தான் செய்யும்..
எங்கெங்கு எல்லைகள் பிரிக்கபடுகிறதோ , அந்த எல்லைகள் என்றும் நிரந்தரம் இல்லை.. காலம் மாறும்போது , எதுவும் நடக்கலாம்.. சேர,சோழன்,பாண்டியன் என இருந்தவன் தமிழ் நாடு ஆனான்.. அது போல இந்தியா முழுவதும் உள்ளது.. " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் " என கூறிய பாரதி வாழ்ந்த பூமி இது.. இந்தியா ராணுவ வீரகளை இலங்கைக்கு அனுப்பும் போது இங்கு இருப்பவன் சென்றால் என்ன தவறு? கோவத்தில் இருப்பவன், அடிப்பட்டவன் பேச தான் செய்வான்.. இந்தியா ஜனநாயக நாடு தானே? காந்தியை கொன்றவனை மன்னித்த பூமி இது , இன்றும் எத்தனையோ தீவிரவாதிகள், தேச விரோத கருத்துக்களை கூறும் இயக்கங்கள் இங்கு உண்டு.. இது என் பார்வை மட்டுமே... நன்றி.. செம்மலர் செல்வன்..

Post a Comment

Related Posts with Thumbnails