November 10, 2008

இந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா?

அமெரிக்க தேர்தல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாக 2012 அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி இப்போதே செய்தி ஊடகங்களும், அரசியல் ஆய்வாளர்களும் அலச ஆரம்பித்து விட்டன.


அதில் அதிகம் பேசப்பட்டு வருபவர் குடியரசு கட்சியைச் சார்ந்த இந்திய-அமெரிக்கர் பியுஷ் பாபி ஜின்டால் (Piyush "Bobby" Jindal ) இவர் லூசியானாவின் 55 ஆவது கவர்னராக இருந்து வருகிறார். அக்டோபர் 20, 2007 அன்று தனது 36 ஆவது வயதிலேயே அமெரிக்காவின் மிக இள வயது கவர்னராக பதவியேற்ற பெருமைக்குரியவர்.


மேலும் ஒரு இந்திய-அமெரிக்கர் என்ற முறையில் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் சிறப்பையும் பெற்றவர். இவருக்கு Supriya Jolly Jindal என்ற மனைவியும் Selia Elizabeth,Shaan Robert,Slade Ryan என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

ரோமன் கத்தோலிக்கத்தைப் பின்பற்றுகிறார் இவர்.அமெரிக்க மருத்துவ சங்கத்திற்காக சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

2008, ஆகஸ்ட்டில் லூசியானா மாகாணத்தில் உருவான கஸ்டாவ் எனும் சூறாவளியின் போது வெகு வேகமாக,மிக நுணுக்கமாக செயல்பட்டு கடலை ஒட்டியிருப்போரை 3000 தேசிய பாதுகாப்பு படையினரோடு விரைந்து இடம் மாற்றியிருக்கிறார்.இதனால் ஏற்படவிருந்த பெருத்த மக்கள் சேதம் வெறும் 16 பலியோடு நிறுத்தப்பட்டது. 2005 ல் கட்ரினா சூறாவளியின் போது ஏற்பட்ட பாதிப்பை விட (கிட்டத் தட்ட 1836 மரணம்) பெருமளவில் இது குறைவாகும்.இதனால் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் அதிக நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் சூறாவளியின் சமயத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்காக நடக்கவிருந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கிறார்.(நம்மவர்கள் எங்கே?)

இந்த 2008 தேர்தலின் போதே துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப் பட வேண்டி பரிசீலிக்கப் பட்டவராம் "ஜின்டால்".ஆனாலும் 2012 அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறித்து இவரைக் கேட்டால் நான் அதைப் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை 2011 ல் மீண்டும் லூசியானா கவர்னர் ஆகுவதையே விரும்புகிறேன் என்கிறாராமாம்.

ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் அமெரிக்க அதிபர் ஆகியுள்ள நிலையில் ஒரு இந்திய-அமெரிக்கர் அதிபராவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.

நன்றி & தகவல் ஆதாரம்

1.Yahoo
2.Wikipedia

11 comments:

Renga said...

In India, Indians won't accept Sonia Gandhi to became prime minister, at the same time Indians expect other countries to accept them for the top posts. Wow what a repugnance in Indians attitude..

MK said...

well said renga!!

TAMIZHAN said...

Ranga! Your opinion is absolutely correct. Mr.McCain who ran against Mr. Obama had served US as a Prisoner of war and his limbs were broken. Eventhough his father was a commander in the Navy, he refused to get any special treatment. Unfortunately, he chose an intellectually challenged vice-president as running mate. But in India, political gains are based on hereditory achievements. People vote for those whose parents are victors in politics. Lousiana Governor do not have any popular or powerful Indian parents, but he has good education and intelligence to become a President.

Unknown said...

//In India, Indians won't accept Sonia Gandhi to became prime minister, at the same time Indians expect other countries to accept them for the top posts. Wow what a repugnance in Indians attitude..//

அடசாமிகளா, சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும். ஜின்டால் இந்தியரல்ல. அவரது பெற்றோர்கள்தான் (முன்னாள்)இந்தியர்கள்.ஜின்டால் அமெரிக்காவில் பிறந்தவர்.

Arnold Schwarzenegger கலிபோர்னியாவின் கவர்னர் ஆனதோடு சரி. அவர் அமெரிக்க பிரசிடென்ட் ஆக முடியாது.தெரியுமோ? ஏன்னா அவரு பொறந்தது ஆஸ்திரியாவில் அதனால் அவரு naturalized citizen.

எட்வின் said...

// சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும்//
சரியாக சொன்னீர்கள் தெனாலி அவர்களே.
எல்லோர் வருகைக்கும் நன்றி.

Renga said...

I have really regretted to leave a comment on so called "INTELLECTUAL" blog. Mr. Edwin & Mr. Thenali try to understand the comments in right context...

Though foreigners have inherited the citizenship in India and as per Constitution of India, they are entitled to hold top posts, but Indians are reluctant to accept the foreigners in their politics. In repugnant to this practice, Indians are expecting other countries to accept PIOs (person of Indian origin) in their political stream. This is what I have quoted as "CONTRAST / REPUGNANACE".

Being a Law Graduate (Trichy Law College 1992 - 1997), I know the Indian constitution and American Constitution very well and not the supporter of X,Y, Z. I am a balanced political observer and would like to highlight the need for change of attitude among our Indian community.

Note: I don't want to discuss further about Natural-Born Citizen under Article II of American Constitution. I hope I didn’t hurt anyone, if so, my sincere apologize & sorry.

எட்வின் said...

ரங்கா அவர்களே,
எனது வலைப்பூவை "INTELLECTUAL" என நானும் நினைப்பதில்லை, யாரும் கூறினாலும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.எனக்கு சரியென்று பட்ட சில கருத்துக்களை முன் வைக்கிறேன் அவ்வளவுதான்.உங்கள் மனது புண்படும் படியும் கருத்துகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
தங்கள் கருத்துக்கள் சரி தான், நான் மறுக்கவில்லை.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில கட்சிகள் தான் பிறப்பால் இந்தியரல்லாத ஒருவர் பிரதமராக வருவதை எதிர்க்கிறார்கள்(எல்லோருமில்லை) என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தங்கள் கருத்துகளுக்கு நன்றி

Unknown said...

அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு, தங்களை போன்ற இன்டலக்சுவலகளை புரிந்து கொள்ள போதுமான அளவுக்கு எமக்கு பத்தவில்லை போல.மன்னிக்கவும்.

இந்தியரின் மனோபாவத்தில் என்ன குறை என்பது இன்னமும் புரியவில்லை. ஒரு PIO வேறு நாட்டில் பதவிக்கு வந்தால் ஒரு சின்ன சந்தோசம் அவ்வளவுதான். அதற்காக குடியேறிகளின் தேசமான அமெரிக்காகூட அனுமதிக்காத ஒன்றினை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்தியாவில அந்த மாதிரி சட்டம் இல்லாதற்கு காரணம் தேவையின்மையே(இதுவரை).

"நம்ம கிரிக்கெட் டீம் வெளிநாட்டுக்குப் போய் ஜெயித்தால் சந்தோசப்படும் நீ, நம்மூருக்கு வந்து வெளிநாட்டு டீம் நம்ம டீமை ஜெயித்தால் சந்தோசப்பட மாட்டங்குற...உன் attitude யை மாத்து"ன்னு சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா!

benza said...

சிவாஜி கணேசன் வடிவத்தில் அமெரிக்காவில் வதியும் தெனாலி அவர்களே, வணக்கம்
ஒருவருடைய கருத்தை எதிர்ப்பதற்காகவே கங்கணம் கட்டி தங்களது கருத்துக்களை முன் வைத்தால் அது எவருக்குமே பிரயோஜனமில்லாது போய் விடுமே ஐயா !
உங்களது அறிவை பகிருங்கள் >>> சந்தோசம் >>>

''அடசாமிகளா'' >>> இந்த சொற் பிரயோகம் பண்பான உங்களுக்கு பொருந்தாதே !

''அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு'' >>> றங்கா தனது பட்டபடிப்பை இங்கு சொல்லத்தேவை இல்லைதான் >>> இருந்தும் தங்களது உள்ளக்கிடைக்கை இப்படியா வெளியிடுவது?

''நம்ம கிரிக்கெட் டீம்'' எனதொடங்கி, ''சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா!'' என முடித்துள்ளீர்கள் >>> இது ஆக்க பூர்வமான இடுகை என உங்களது விசால அறிவிற்கு படுகின்றதா?

ரங்கா வினது லாஜிக் புரியிலைன, விட்டுருன்களே நைனா !

நம்ம தமிழுக்கு வசன நடை தந்தே இத்தாலி கிறிஸ்துவ குருவரே !!

இந்திய கிறிஸ்துவ வம்சாவளி >>> அமெரிக்கா ஜனாதிபதி >>> இதில் பெருமை சேர்க்கும் எமக்கு >>> கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா !!!

கொஞ்சம் அறிவை பகிர ஒத்துழையுங்கள் என வேண்டிக்கொள்கின்றேன்.

எட்வின் said...

நன்றி திரு.பென்சா அவர்களே...
//கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா !!!
// நிச்சயமாக சிறுமை தான்

benza said...

Why silent for so long?

Post a Comment

Related Posts with Thumbnails