November 13, 2008

சென்னைச் செந்தமிழ் மறந்தேன்!அப்போ நீங்க?

தமிழ் படும் பாடு.

சில வாரங்களுக்கு முன்னர் கூட நண்பரொருவர் தமிழைக் குறித்த ஒரு பதிவு இட்டிருந்தார்.

இருந்தாலும் பல வருடங்களாக நானும் கவனித்து வரும் விஷயங்களை எனக்கு தெரிந்த விதத்தில் எழுத விளைகிறேன்.

இந்த கால இளசுகளுக்கு இந்த நுனி நாக்கு ஆங்கிலம் எங்கிருந்து தான் வருகிறது எனத் தெரியவில்லை.

ஊட்டி விட்டால் - மம்மி

கூட்டிப் போனால்-டாடி

பல்லை இளித்தால்-லவ்வு

சாப்பிடுவது-பிளேட்டில்

நடப்பது-ரோட்டில்

ஓட்டுவது-காரை/பைக்கை

எழுதுவது-பென்னால் (நன்றி : குமுதம் 16.01.2008 இதழ்)

திரைப்படங்களிலும் திரைப்பட பாடல்களிலும் கூட ஆங்கில மோகம் தான் கொடிக் கட்டிப் பறக்கின்றது.இன்று தமிழ் சினிமா உலகம் டப்பிங்கையே நம்பியிருக்கிறது.தமிழ் நடிக நடிகைகள் தமிழைப் பேச தயங்குகையிலே பிற மாநில நடிக நடிகைகள் குறிப்பாக கேரளத்தவர்கள் தமிழ் திரைப்படங்களில்(ஜெயராம், கலாபவன் மணி, மனோஜ் k ஜெயின், மீரா ஜாஸ்மின்) அவர்கள் சொந்த குரலிலேயே பேசுகிறார்கள்.

Take it easy ஊர்வசி,வருகிறான் Remo, எனக்கொரு Girl friend, Dating, suppose உன்னை, Telephone மணிபோல், உனக்கும் எனக்கும் something something, Shivaji the boss,ஒரு கூடை sunlight என பாடல்கள் வேறு ஆங்கில சொற்களையே பெரும்பாலும் கொண்டிருக்கின்றன.
சென்னை செந்தமிழ் மறந்தேன் என பாடல் வேறு வருகிறது. கேவலம் ஒரு பெண்ணுக்காக தமிழையே மறக்க தோன்றுகிறதா இவர்களுக்கு!!! (நாங்க காதலிக்கும் போது மட்டும் தான் இப்படியெல்லாம்னு சொல்லுவார்களோ...அப்படின்னா சரிதானுங்கோ :))

நம்மவர்கள் ஐரோப்பா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணி மற்றும் கல்வி விஷயமாக செல்ல வேண்டுமானால் ஆங்கில தேர்வு எழுத வேண்டிய அவசியமிருக்கிறது(IELTS, TOEFL என) ஆனால் அங்கிருந்து வரும் எவர்க்கும் நாம் தமிழ் தேர்வோ அல்லது இந்திய மொழியான இந்தித் தேர்வோ வைப்பதில்லை.ஏனென்றால் ஆங்கிலம் போதுமென்று நாம் நினைப்பதால் தான்.MNC(Multi National Company) களினாலும் ஆங்கில ஆதிக்கம் இன்னும் தொடரத் தான் செய்கிறது.

இதே ஜப்பான், சீனா, ரஷ்யா, போன்ற நாடுகளைப் பார்ப்போமானால் அவர்கள் தாய் மொழிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.இருந்தும் அவர்கள் அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் அச்சுறத்தலாக இருக்கிறார்கள்.அவர்கள் யாரையும் சார்ந்திருப்பதாக தெரியவில்லை.நாம் தான் ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து இன்னும் விடுபடுவதாக இல்லை.இன்னமும் கூட திருந்துவதாக இல்லை.

புதிய அமெரிக்க அதிபர் இன்னும் பொறுப்பேற்கவே இல்லை அதற்குள்ளாக அவர் இந்தியாவைக் கண்டுகொள்ளவில்லை பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் அழைக்கவில்லை என கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் தான் இப்படி என்றால் பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சிகளும் அதைத் தான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கின்றன.

அவர் பேச முயற்சித்தார் ஆனால் எனக்கு தான் நேரமில்லை என பிரதமரின் பேட்டி வேறு இதற்கு.நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க இதைப்பற்றிக் கவலைப்பட்டு எதற்கோ தெரியவில்லை!!! (வெளிநாட்டு உறவு தேவை தான்...அதற்கென்று பொறுப்பே ஏற்காத ஒருவர் நம்மை அழைக்கவில்லை என்று கவலைப்பட்டு எதற்கு?) இது ஒன்று போதாதா நமது ஆங்கில,அமெரிக்க அடிமைத்தனத்தைப் பறைசாற்ற.

இப்படியே போனால் ஆங்கில பற்று வராமல் வேறு என்ன வரும்? ஆங்கிலம் வளராமல் தாய்மொழியோ இல்லை இந்திய மொழி "இந்தி"யா வளரும்? நமது தலைமுறையிலேயே இப்படியென்றால் இனி வரும் தலைமுறைகள் தமிழை எப்படிக் காப்பாற்ற போகின்றனவோ தெரியவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்..ஆமாம்;இல்லையென்று சொல்லவில்லை அதோடு வந்த மொழியையும் வாழ வைக்கும் எங்கள் தமிழகம்...இது எப்படி இருக்கு?

தமிழர்களுக்குள் எப்போதாவது ஆங்கிலம் பேசுவது தப்பென்று நான் நினைக்கவில்லை ஆனால் எப்போதாவது தமிழில் பேசுவது சரியல்லவே!

வாழ்க தமிழ்!வளர்க ஆங்கிலம்!...ஆம் அப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழின் நிலை.

1 comment:

கிறிச்சான் said...

கொடுமை...கொடுமையே !!!

Post a Comment

Related Posts with Thumbnails