November 17, 2008

ஓரினச் சேர்க்கையாளர் எல்டன் ஜானும் அவரின் சாதனைகளும்

ஓரின சேர்க்கையாளரான இங்கிலாந்தின் சர்.எல்டன் ஜானின் பாடல் அமெரிக்காவில் இதுவரை 11 மில்லியன் பதிவுகளுக்கும் அதிகமாக விற்று சாதனை படைத்துள்ளது.இங்கிலாந்து (வேல்ஸ்) இளவரசி டயானா ஸ்பென்சரின் இறுதிமரியாதை சடங்கில் சர் எல்டன் ஜான் பாடிய Candle in the wind என்ற பாடல் தான் அது.இத்தனைக்கும் 5மில்லியன் பதிவுகள் தான் இங்கிலாந்தில் விற்றது.


அமெரிக்காவில் இது வரை வேறு எந்த பாடலும் இத்தனை பதிவுகள் விற்பனை ஆனது இல்லை.சர்வதேச அளவில் 33 மில்லியன் பதிவுகள் இதுவரை விற்றுத் தீர்ந்துள்ளன(நானும் ஒரு பதிவு வைத்துள்ளேன்) அவற்றில் 55 மில்லியன் பவுண்ட் தொகையை டயானா நினைவு நிதிக்காக வழங்கியிருக்கிறார் எல்டன்.எல்டனின் நெருங்கிய நண்பராவார் இளவரசி டயானா.(1973 ல் எல்டனின் நண்பர் Taupin எழுதி எல்டன் இசையமைத்த Candle in the wind பாடலின் வரிகளை டயானாவிற்காக மாற்றி எழுதினார் Taupin.மர்லின் மன்றோவிற்காக எழுதியது தான் 1973 ன் Candle in the wind ) 1997 ஆம் ஆண்டு டயானாவின் இறுதி சடங்கை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த எவரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது அந்த பாடலை.அதன் பின்னர் அந்த அற்புதமான வரிகளை எல்டன் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பாடவில்லை.அவரைக் கேட்டால் அந்த வரிகள் அத்தனைச் சிறப்பு வாய்ந்த என் நண்பிக்காக மட்டுமே பாட முடியும் அதுவும் அந்த ஒரு முறை தான் என்று கண் கலங்குகிறார்.

சர்.எல்டன் ஜான் எப்போதும் பியானோ வாசித்துக் கொண்டு பாடுவது தான் வழக்கம்.அதைப் போன்றே வெஸ்ட் மினிஸ்டர் அபே என அழைக்கப்படும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆலயத்தில் நடந்த இறுதிச் சடங்கிலும் பாடினார். இந்த ஆலயத்தில் தான் இளவரசர் சார்லஸ்-டயானா திருமணமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Someone saved my life tonight,sacrifice, Can you feel the love tonight, Believe,Your song போன்றவை இவரது பாடல்களில் அதிகம் பிரசித்தி பெற்றவை.
அமெரிக்காவில் இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதான கிராமியை இதுவரை ஐந்து முறை வென்றிருக்கிறார்.இங்கிலாந்து கால்பந்து அணிக்காகவும் பாடல்கள் பாடியிருக்கும் இவர் இவரது சிறுவயது ஆசையான watford கால்பந்து கிளப்பின் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.
1976 களிலேயே தான் ஈரினசேர்க்கையாளன் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.என்றாலும் அதன் பின்னர் ஓரினச் சேர்க்கையாளராக(Gay) இருக்கிறார்.


1980 களில் இருந்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.1990 ல் காதல் தோல்வியினாலும் பிற பிரச்சினைகளினாலும் குடி மற்றும் போதைபொருட்கள் உபயோகித்து பின்னர் அதிலிருந்து விடுபட சிக்காகோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


1992 ல் எய்ட்ஸ் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எய்ட்ஸ் தடுப்புக் கல்விக்கும் உதவி வருகிறார்.அவருக்கு குழந்தைகள் ஏதுமில்லையென்றாலும் பத்து குழந்தைகளை தத்து எடுத்திருக்கிறார்.


1998 ல் சர் என்ற பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2006 ல் சமயங்களை/மதங்களை தான் வெறுப்பதாகவும், சமயம் என்பதே உலகில் தேவையில்லை அவை மனிதனை அழிக்கின்றனவே ஒழிய அன்பைக் காட்டுவதில்லை என்று சாடியிருக்கிறார்.


பில்போர்ட் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட 100 சிறந்த பாடகர்களில் எல்டன் ஜானுக்கு மூன்றாவது இடம்.பாப் பாடல்களின் ராணி மடோனா முதலிடத்திலும்.உலக புகழ்பெற்ற பீட்டில்ஸ் (Beatles) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


ஓரினச் சேர்க்கையாளரானால் என்ன ஈரினச் சேர்க்கையாளரானால் என்ன? திறமை இருந்தால் எங்குமே மதிப்பு தான் என்பது இவரது சாதனையிலிருந்து தெரிகிறது.
மேலும் மக்களுக்கு குறிப்பாக எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மனப்பான்மை இவரைப் போன்று சிலருக்கே வரும் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை. டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.அன்று இவரைப் போன்றோரைப் பாராட்டுதலும் தகும்.
நன்றி மற்றும் தகவல் ஆதாரம்


1.Yahoo
2.wikipedia
"Candle in the wind"பாடல் இங்கே அதன் கீழே பாடல் youtube வீடியோவாக.(நானே வீடியோவாக்கியது)
"Candle in the wind" - 1997
Goodbye England's rose
May you ever grow in our hearts
You were the grace that placed itself
Where lives were torn apart
You called out to our country
And you whispered to those in pain
Now you belong to heaven
And the stars spell out your name

And it seems to me you lived your life
Like a candle in the wind
Never fading with the sunset
When the rain set in
And your footsteps will always fall here
Along England's greenest hills
Your candle's burned out long before
Your legend ever will

Loveliness we've lost
These empty days without your smile
This torch we'll always carry
For our nation's golden child
And even though we try
The truth brings us to tears
All our words cannot express
The joy you brought us through the years

Goodbye England's rose
May you ever grow in our hearts
You were the grace that placed itself
Where lives were torn apart
Goodbye England's rose
From a country lost without your soul
Who'll miss the wings of your compassion
More than you'll ever know

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails