January 15, 2009

மோடியை பிரதமராக்குங்கள்!

நேற்று 14.01.2009 அன்று குஜராத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கத்தில் சுவாரஸ்யமான, ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்று பெரும்பாலான தொழிலதிபர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. "நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக்கப்பட வேண்டுமென்பது" தான் அது.

மோடிக்கு சாதகம்
குஜராத், ஜனவரி 2001 ன் நிலநடுக்கத்தினாலும் உள் மாநில பிரச்சினைகளினாலும் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிலையில் அக்டோபர் 2001 ல் பொறுப்பேற்ற இவரது ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவெடுத்தது; அதாவது மோடி பொறுப்பேற்ற முதல் ஆண்டு குஜராத் 10% வளர்ச்சி வீதம் கண்டது. கடந்த ஆண்டில் அது மேலும் உயர்ந்து 11.5% ஆகியுள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

மேற்கு வங்காளம் துரத்தியடித்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலையையும் இருகரம் கூப்பி வரவேற்ற பெருமையும் மோடிக்கு உண்டு.

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வருமெனில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் பாராளுமன்ற தாக்குதலில் பிடிபட்டு திஹார் சிறைச்சாலையிலிருக்கும் அஃப்ஸல் குருவை 2004 ன்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தூக்கிலடவும் தயங்கமாட்டோம் எனவும் சில ஆண்டுகளாகவே பிரச்சாரித்தும் வருகிறார்.

மோடிக்கு பாதகமானவை
பிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்களை தடுக்கத் தவறியதில் தேசிய அளவில் பெரும்பாலான கட்சிகளும், மக்களும் இன்றளவும் மோடி மீது தவறான எண்ணம் கொண்டிருப்பினும்; நானாவதி விசாரணை கமிஷனோ, குஜராத் மாநில மக்களோ அவர் குற்றவாளி என தீர்த்துவிடவில்லை. அதனால் தான் 2007 ல் மோடியை மீண்டும் குஜராத் மக்கள் அமோகமாக வாக்களித்து முதல்வராக தெரிந்தெடுத்தனர்.எனினும் தேசிய அளவில் ஆதரவு கேள்விக்குறியே.

கோத்ரா சம்பவத்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு 2003ல் ஒருமுறையும் ஆகஸ்ட் 2008ல் மறுமுறையுமாக இருமுறை விசா மறுக்கப்பட்டுள்ளார். இச்செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் போது; கமாண்டோ படைகள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அழையா விருந்தாளியாக சம்பவ இடத்திற்கு சென்று பரபரப்பையும்; பொதுமக்களிடையே கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டார் (வேற்று மாநில முதல்வர், பிற மாநிலத்திற்கு செல்ல என்ன அவசியமோ? அதுவும் இக்கட்டான சூழ்நிலையில்)

அத்வானி Vs மோடி
பிரதமர் பதவிக்கு கட்சியினாலும் மூத்த தலைவர்களினாலும் அத்வானி முன்னிறுத்தப்பட்டிருக்கையில், மோடியை முன்னிறுத்த வேண்டுமென்று சில அத்வானி அதிருப்தியாளர்களும் (ஜின்னா கருத்திற்கு எதிர்ப்பாளர்களோ என்னமோ?) அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கூறி வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் என்று தான் பரபரப்பு இல்லை என்கிறீர்களோ! (As a famous quote says there is never a dull day in Indian politics)

அரசியல் காய்கள் எவ்விதம் நகர்த்தப்படுமென்று பொருத்திருந்து பார்ப்போம். ஒருவேளை பிரதமராகியாலும் இருமுறை விசா மறுக்கப்பட்ட அமெரிக்க அரசுடன் இவரது உறவு எப்படியிருக்கும் என்பதும் கேள்விக்குறியே. நீங்கள் மோடிக்கு ஆதரவா? இல்லை எதிர்ப்பா?
நன்றி NDTV மற்றும் wikipedia

12 comments:

Rajaraman said...

மோடி போன்ற ஒருவர் தான் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு பிரதமர் நாற்காலியில் உட்கார மிக தகுதியான தலைவர்.

நிச்சயமாக மிக குறுகிய காலத்தில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று வறுமையை ஒழிப்பார்.

மேலும் முக்கியமாக ஒட்டு பொறுக்கி அரசியல் செய்ய மாட்டார்.

எட்வின் said...

நன்றி ராஜாராமன்; இந்தியா முன்னேறினால் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.

சாணக்கியன் said...

குஜராத் மக்களுக்கு தெரியாத ஒன்றை (மோடி மத மோதலை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் என்று) பிற மாநிலத்தவர் அனைவரும் தெரிந்து கொண்டுவிட்டது போல பேசுவது ஊடகங்களின் விசமப்பிரச்சாரம் தவிர வேறில்லை. இது எப்படி என்றால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த ஊழலும் செய்யவில்லை என ஒரு டெல்லிக்காரன் கண்டுபிடித்துவிட்டதாக தமிழனிடம் கூறுவதைப் போன்றது! :-)

Anonymous said...

எதிர்ப்பு.

எட்வின் said...

//ஊடகங்களின் விசமப்பிரச்சாரம்// உண்மையே திரு சாணக்கியன்

RAMASUBRAMANIA SHARMA said...

Hon.Narendra Modi,Gujarath C.M....according to the sources,news channels...must be a good administrator...political manipulator...commanding officer...Mr Modi has got all the LEADERSHIP QUALITIES...rest of the other painful incidents happened there, are politically motivated....Lots of rumors are not favorable to Mr Modi....but anything can happen in politics...let us wait and see...

ஷாஜி said...

ஒருவேளை மோடி பிரதமரானால், இந்தியாவில் முச்லிம்கள் நிலை ??????????

கொத்ரா ஒன்ரே போதும் அவரின் மதவாத அரசியலுக்கு...

ஷாஜி said...

//குஜராத் மக்களுக்கு தெரியாத ஒன்றை (மோடி மத மோதலை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் என்று) பிற மாநிலத்தவர் அனைவரும் தெரிந்து கொண்டுவிட்டது போல பேசுவது ஊடகங்களின் விசமப்பிரச்சாரம் தவிர வேறில்லை. இது எப்படி என்றால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த ஊழலும் செய்யவில்லை என ஒரு டெல்லிக்காரன் கண்டுபிடித்துவிட்டதாக தமிழனிடம் கூறுவதைப் போன்றது!//

ஊழல் செய்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி செய்வதால், அவர்கள் நல்லவர்கள் என்று அர்த்தமா? அதேபோல்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் 'மோடி' நல்லவர் என்று நீங்கள் கூறுவது..

எட்வின் said...

//கொத்ரா ஒன்ரே போதும் அவரின் மதவாத அரசியலுக்கு...// உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம்.நானாவதி கமிஷனில் மீடியாவின் பல ஆதாரங்கள் மறுக்கப்பட்டன; மறைக்கப்பட்டன

karthik said...

Modi meethu ulla kutrachatrukal unamiyou poiyo innum nirubikapadavillai... aanal avarathu thiramai Gujarath maanila makkalidam ketal therium.. ulagame recessionil irukum bothu Gujarathil mattum athan vadaiye theiriavillai.. naan sila Gujarath makkalidam pesiullen...ennal solla mudiyum.. "THEY ARE PROUD TO HAVE MODI AS THEIR CHIEF MINISTER". tharpothu ulla nilamaiku modi pol oru PM irunthal indiavil recessione theriyamal irukum!!! naam Americavidam pithcai eduka thevaillai!!!!


nanbar ஷாஜி avargaluku...

MODI illai entha komban indiavin PM aanalum Indiavil ulla Muslims allathu matra sirubanmairuko entha thollaium varathu.. NANGAL ungaludan irukirom...

ராஜ்குமார் said...

நல்லதொரு அலசல் திரு எட்வின் அவர்களே..ஆரோக்கியமான கருத்துகளை ,உண்மைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

எட்வின் said...

ராஜ்குமார் அவர்களுக்கு... காலந்தாழ்ந்த நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails