February 28, 2009

தடுமாறும் இங்கிலாந்து/தடை தாண்டும் ஆஸ்திரேலியா

மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 51 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பரிதாப தோல்வியடைந்த இங்கிலாந்து அணி இன்னமும் அந்த தோல்வியிலிருந்து வெளிவராமல் திணறுகிறது.(இந்திய அணியிடம் அடைந்த தோல்வியிலிருந்தே இன்னும் மீளவில்லையோ என்னமோ)

மறுபுறம் தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ஆட்டங்களில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள தடைகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற மிக அதிக வாய்ப்புகள் காணப்பட்டன.(இரண்டாவது போட்டி ஆடுகளம் சரியில்லாமையால் சமநிலையில் முடிவடைந்தது) இரண்டாவது இன்னிங்சில் 353 ஓட்டங்களுக்கு மே.இ.தீவின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்திற்கு இறுதி ஒரு விக்கெட்டை வீழ்த்த இயலவில்லை.மே.இ.தீவின் பாவெலும்,எட்வர்ட்ஸும் 11ஓவர்கள் தாக்குப்பிடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்தது இங்கிலாந்திற்கு ஏமாற்றமளித்திருக்கும்.

நிச்சயமாக முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அவர்கள் அடைந்த மகா கேவலமான தோல்வி அவர்கள் மனதை உறுத்தி கொண்டு இருந்திருக்க வேண்டும்;அந்த மனநிலை மூன்றாவது போட்டியில் ஆக்ரோஷமாக ஆட இயலாமல் தடுத்திருக்கலாம்.

அதோடு மே.இ.தீவின் மூத்த வீரர்களான சர்வான் மற்றும் சந்தர்பாலின் சிறப்பான ஆட்டமும் இங்கிலாந்திற்கு பேரிடியாக அமைந்தது.தற்பொழுது நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து 600/6 என்று ஓட்டங்களை குவித்திருந்தாலும் அதற்கு சவால் விடும் வகையில் மே.இ.தீவு வீரர்கள் ஆடி வருகின்றனர்.இந்த போட்டியின் சதத்துடன் சர்வான் இந்த தொடரில் தொடர்ந்து மூன்று சதங்களை எடுத்திருக்கிறார்
இங்கிலாந்து இந்த போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யலாம்.
---------------------
ஆஸ்திரேலியா தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பிந்தைய வீரர்கள் உதவியுடன் 466 ஓட்டங்களைக் குவித்துள்ளது, தென்னாப்பிரிக்க தரப்பில் டிவில்லியர்சின் சதத்தை தவிர முதல் இன்னிங்சில் வேறு யாரும் சொல்லும் கொள்ளும் படி ஆடவில்லை. தெ.ஆ 220 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது

மார்கஸ் நார்த்

ஆஸ்திரேலியாவிற்காக தனது அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே புதிய வீரர் நார்த் சதம் எடுத்துள்ளார்.(இந்தியாவிற்காக அசாருதீன் தனது முதல் மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும்,கங்குலி தனது முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் அடித்த சதங்களும் மறக்கவியலாது)

காலிஸ் - 10,000 ஓட்டங்கள்

தெ.ஆப்பிரிக்க வீரர் காலிஸ் டெஸ்ட் ஆட்டங்களில் 10,000 ஓட்டங்களை குவித்தவர்களில் எட்டாவதாக சேர்ந்திருக்கிறார். தனது 129 ஆவது ஆட்டத்தில் இந்த சாதனையை செய்திருக்கிறார். சச்சின் 156 போட்டிகளில் 12429 ஓட்டங்கள் குவித்து முதலிடம் வகிக்கிறார்.

ஆஸி-தெ.ஆ இடையேயான டெஸ்ட்டில் விக்கெட்டிற்கு களநடுவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதிலும் பல பிரச்சினைகள் காணப்பட்டன.மெக்கென்சியின் விக்கெட்டிற்காக பாண்டிங் முறையீடு செய்த போது அந்த நிகழ்வு கேமராவில் பதிவாகவில்லை. கேமரா பழுதடைந்திருக்கிறது... என்ன கொடும அய்யா இது. பவுச்சரின் விக்கெட்டும் மூன்றாவது நடுவரால் சர்ச்சைக்குரிய முறையில் கொடுக்கப்பட்டது

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் அவர்கள் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.அதோடு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த பெயரை காப்பாற்றவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்

February 27, 2009

BCCI ன் பிரிவினையும்/இந்திய-பாக் வீரர்களின் ஒற்றுமையும்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சச்சினும்,தினேஷ் கார்த்திக்கும் மாஸ்டர்ஸ் போட்டிகளுக்காக இன்று ஆடவிருந்தார்கள்.இவர்கள் இருவரும் ஆடவிருந்த அணியில் நியூசிலாந்து அணியின் ஹமிஷ் மார்ஷல் ம் உடன் இருந்தார்.

மார்ஷல் ICLன் முதல் இரு சீசன்களில் ராயல் பெங்கால் டைகர்ஸ் அணிக்காக ஆடி வந்தார்,இதனை காரணம் வைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினும்,கார்த்திக்கும் ஆட மாட்டார்கள் என போட்டி துவங்க ஒரு மணி நேரம் முன்னர் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தனைக்கும் அந்த கிரிக்கெட் போட்டி ஒரு நல்லெண்ணத்திற்காக நடத்தப்படுகிற போட்டி.அதற்கு கூட அனுமதிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வாரிய கிருமிகள்.மேலும் மார்ஷல் தற்போது ICL உடனான தனது ஒப்பந்தத்தை நிறுத்தியும் விட்டார்.

நியூசிலாந்தின் மூத்த வீரரகள் சிலரும்,கபில்தேவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்,நல்லெண்ண போட்டிகளில் கூட பிரிவினை பார்க்கும் அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் என வருத்தப்பட்டிருக்கிறார் உலகக் கோப்பையை வென்று வந்த கபில்.

அண்மையில் ICLல் ஆடிய வீரர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதற்காக இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷையருக்காக ஆட வி.வி.எஸ்.லக்ஷ்மணனிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாகவே BCCI ன் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.

----------------------
இந்திய வீரர்கள் பாகிஸ்தானிற்கும், பாக் வீரர்கள் இந்தியாவிற்கும் வர அனுமதி மறுக்கபட்டுள்ள நிலையில் இந்தியாவின் டென்னிஸ் வீரர் பிரகாஷ் அமிர்தராஜும் பாகிஸ்தானின் குரேஷியும் இணைந்து இரட்டையர் போட்டிகளில் ஆடி வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னர் கூட துபாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடினர் இந்த இந்திய-பாக் இணை.

முந்தைய பதிவில் நான் எழுதியபடி விளையாட்டினால் சகோதரத்துவம் குறைந்து இன்று விரோதங்கள் பெருகி வருகின்றது. இதனிடையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்திய-பாக் இணையான அமிர்தராஜ்-குரேஷி க்கு வாழ்த்துக்கள்.

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத இந்திய அணி


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி இன்று மீண்டும் தோல்வியடைந்துள்ளது.கிரைஸ்ட் சர்ச் முதல் T20 போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளாத இந்திய வீரர்கள் இந்த தொடரின் மீதமுள்ள ஆட்டங்களை எப்படி அணுகப் போகிறார்கள் என தெரியவில்லை.

முதல் T20 ஆட்டத்தில் அடித்து ஆடி ஓட்டங்கள் குவிக்க முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்கள் குவிக்கவியலாமல் போனது இந்திய அணிக்கு.இன்றும் அதே நிலைமை தான்.பந்து வீச்சும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை முதல் ஆட்டத்தில்.

நியூசிலாந்தின் சூழல் இந்தியருக்கு புதிதாக இருக்கலாம்; குளிர்ந்த தட்பவெப்பநிலையும்,மிதமான காற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்;அது இந்திய வீரர்களுக்கு பாதகம் என நம்பப்பட்டாலும்.நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சொல்லும் படியாக பந்தை ஸ்விங்க்(Swing) செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.

மாறாக அவர்களின் சீரான,விக்கெட்டில் நின்று சற்றும் விலகாத பந்து வீச்சு இந்திய மட்டையாளர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தது,ஓட்டங்கள் பெற முடியவில்லையே என மட்டையை வீணாக வீசத் தொடங்கிவிக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இன்றைய போட்டியில் ஒரே ஒரு அகலப்பந்து(wide)மட்டுமே நியூசிலாந்து வீரர்களால் வீசப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களது பந்து வீச்சின் ஒழுங்கை.ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் கொடுத்த உதிரி ஓட்டங்கள் அவற்றை விட அதிகம்.

முதல் ஆட்டத்தைப் போன்றே இன்றும் நல்ல துவக்கத்திற்கு பின்னர் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அதோடு நியூசிலாந்து வீரர்களின் களத்தடுப்பும் (Fielding) ஓட்டக்குவிப்பிற்கு வினை வைத்தது.

இன்று பத்தான் சகோதரர்கள் ஒருபுறம் சொதப்ப மறுபுறம் மெக்குலம் சகோதரர்கள் சாதித்திருக்கிறார்கள்.இர்ஃபான் பத்தான் இன்று இரு விக்கெட்டுகள் எடுத்தாலும் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.கடந்த போட்டியிலும் பத்தான் சரியாக பந்து வீசவில்லை.

இனியும் இந்தியர்கள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளவில்லையென்றால் தொடர்ந்து வெற்றிகள் பெறுவதற்கு அது பாதகமாக அமையும்.

இன்றைய ஆட்டத்தின் ஸ்கோர்:
இந்தியா-149/6
நியூசிலாந்து-150/5

சில குண்டக்க மண்டக்க தத்துவங்கள்

(மின்னஞ்சலில் வந்தவை...
நீங்களும் கொஞ்சம் சிரிச்சு வைச்சிட்டு போங்க)

நாய்க்கு 4 கால் இருக்கலாம்..
ஆனா அதால லோக்கல் கால்,எஸ்.டி.டி கால்,ஐ.எஸ்.டி கால்
இல்ல ஒரு மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது! :(

உக்காய்ந்து யோசிப்பாய்ங்களோ.

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்-ஆனா
"அய்யர் ஆத்து"ல மீன் பிடிக்க முடியுமா? :)

ஆஹா...

மீன் பிடிக்கிறவன "மீனவன்"னு சொல்லலாம்-ஆனா
நாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா!! :)

என்ன தான் ஒருத்தன் "குண்டா" இருந்தாலும்
அவன துப்பாக்கி உள்ள போட முடியாது!

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்,
காலேஜ் டெஸ்ட்ல கூட பிட் அடிக்கலாம்-ஆனா
பிளட்(Blood) டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

என்ன கொடும சரவணன்!!

பொங்கலுக்கு கவர்ன்மென்ட்ல லீவு குடுப்பாங்க-ஆனா
இட்லி,தோசைக்கு குடுப்பாங்களா?

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. அய்யோ அய்யோ... தலைல அடிச்சுக்க வேண்டியது தான்.

கோல மாவுல கோலம் போடலாம்-ஆனா
கடல மாவுல கடல போட முடியுமா?

எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா எஞ்சினியர் ஆக முடியும்-ஆனா
பிரசிடென்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்-ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது :))

ஹேண்ட் வாஷ் னா கை கழுவுறது,
பேஸ் வாஷ் னா முகம் கழுவுறது-அப்போ
பிரெயின் வாஷ் னா மூளைய கழுவுறதா!!!

பால்கோவா பால்ல இருந்து பண்ணலாம்-ஆனா
ரசகுல்லாவ ரசத்தில இருந்து பண்ணமுடியுமா?

கடைசியாக சன் மியூசிக் சிங்கங்கள் சொன்ன ஒரு கொடும...

சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும் ஆனா மண்டே அன்னைக்கு
மண்டய போட முடியுமா...

நல்லா கேக்கிறாய்ங்க கேள்விய..


வார இறுதியும்,புதிய மாதமும் இணைய நண்பர்களுக்கு இனிதாக அமைய வாழ்த்துக்கள்.




February 25, 2009

ஆங்கிலத்தில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய் ஹோ பாடல்

ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ரஹ்மானின் ஸ்லம் டாக் மில்லினியர்,ஜெய் ஹோ பாடல் Pussycat Dolls என்ற ஆங்கில பாப் குழுவினால் You are my Destiny என்று ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதனை Pussycat Dolls ன் Nicole Scherzinger பாடியுள்ளார்.அவர்களது Official video விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆங்கில பாடலுடனான ஸ்லம்டாக் மில்லினியரின் காணொளியை கீழே இணைத்துள்ளேன்.
ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய்ஹோ வரிகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.இந்தியரின் திறமை உலகெங்கும் அறியப்பட அடித்தளம் அமைத்துக் கொடுத்த இயக்குனர் டேனி போயலுக்கு நன்றி.

மேலும் தகவல்களுக்கு:

http://www.pcdmusic.com/jaiho/



விமான விபத்துகள் சகஜமாகி விடுமா?

கடந்த இரண்டு மாதங்களினுள் இன்றோடு மூன்றாவது முறையாக விமான விபத்தை செய்திகளின் வழியே கேட்க நேரிடுகிறது.விமானப் பயணம் என்றாலே பலருக்கு கிலியை ஏற்படுத்தும். (குறிப்பாக முதல் பயணம்) இன்றைய விபத்துச் செய்தி இந்த பயத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன்.

ஜனவரி 15 அன்று அமெரிக்க விமானம் US Airways Airbus A320 விண்ணேறிய சில நிமிடங்களில் பறவைகள் மோதியதால் எஞ்சின் பழுதடைந்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.விமானியின் சாதுர்யத்தால் ஹட்சன் ஆற்றில் இறக்கப்பட்டு பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிப்ரவரி 12,2009 ல் அமெரிக்க விமானம் Continetnal Express-3407 ஒன்று தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க்,பஃபல்லோ என்ற நகரின் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.அதில் விமானி உட்பட பயணம் செய்த 48பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர்.

விமானத்தின் பைலட் விமானத்தை குறிப்பிட்ட வரையறைக்கும் தாழ்வாக விமானத்தை இறக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.பனிமூட்டம் காரணமாக அது ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் முன்னர் Good night என்பது வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்ட விமானி, விமானம் விபத்துக்குள்ளாகும் என கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்(விமானியின் இறுதி உரையாடல் இங்கே)

இன்று Turkish விமானம் Flight TK 1951 நெதர்லாந்,ஆம்ஸ்டர்டமில் தரையிறங்க சில வினாடிகளுக்கு முன்னர் மூன்றாக உடைந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 9பேர் மரணமடைந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இப்படியாக விபத்துகள் தொடர்ந்து நிகழுமேயானால்,பேருந்து விபத்துகளை போன்று விமான விபத்துகளும் சர்வ சாதாரணமாகி விடும் என்றே தெரிகிறது.

ஹட்சன் விபத்தை பார்த்ததுமே எனக்கு விமானத்தில் பயணம் செய்ய கிலி ஏற்பட்டது.அதன் பின்னரும் இருமுறை பிரயாணம் செய்தாகிவிட்டது உயிரை கையில் பிடித்துக் கொண்டு.

என்ன செய்வது எதிர்பாராததை எதிர்பார்த்து தானே ஆக வேண்டும்!

புகைப்படங்கள் நன்றி: bbc

February 24, 2009

5 மணிக்கு 555/5,5 சிக்சர்கள்,50 பவுண்டரிகள் உடன்

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கராச்சியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் அணித்தலைவர் யூனிஸ்கான் அற்புதமாக ஆடி தனது முதல் முச்சதத்தை எடுத்துள்ளார்.300 ஓட்டங்களை கட்ந்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 ஓட்டங்களை கடந்த வீரர்கள் வரிசையில் 23 ஆவதாக இணைந்துள்ளார்.இந்த வரிசையில் உள்ள ஒரே இந்திய வீரர் சேவாக்(இருமுறை).உலகின் சிறந்த முதல் 8அணிகளில் 300ஓட்டங்கள் வரிசையில் இல்லாதது நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் மட்டுமே.

இலங்கை அணியின் அணித்தலைவர் ஜெயவர்தனேவும்,சமரவீராவும் இரட்டை சதம் எடுத்த நிலையில் யூனிஸின் முச்சதமும் ஆடுகளத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது,என்றாலும் அத்தகைய ஆடுகளத்தில் ஓட்டங்கள் குவிக்கவும் ஒரு தனிப்பட்ட திறமை வேண்டும் தான்.

ஆட்ட முடிவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்,இன்னும் 40 ஓவர்கள் விளையாட பாகிஸ்தான் தீர்மானித்திருப்பதாக கூறியதில் இருந்து மேற்கு இந்திய தீவு வீரரான பிரையன் லாராவின் சாதனையான 400 ஓட்டங்களை முறியடிக்க யூனிஸ் தீவிரமாக உள்ளார் என்றே தெரிகிறது .

இன்றைய ஆட்டத்தில் குறிப்பிடும் படியாக இந்திய நேரப்படி ஏறக்குறைய மாலை 5 மணி இருக்கும் போது பாகிஸ்தான் அணியின் ஓட்டங்களை கவனிக்கையில் ஆச்சரியப்படும் படி இருந்தது.அதாவது ஓட்டங்கள்,விக்கெட்டுகள்,பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அனைத்தும் இலக்கம் 5 ஐ கொண்டதாக இருந்தது தான். 191 ஆவது ஓவரில் எடுத்த 5 ஓட்டங்களுடன், 50 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட பாகிஸ்தான் அணியின் ஓட்டங்கள் 555/5.

இரு அணிகளும் 500 க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ள நிலையில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதால் ஆட்டம் சமநிலையில் முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமான ஸ்கோர்: இலங்கை முதல் இன்னிங்ஸ்-644/7 பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்-574/5

நன்றி: cricinfo

81-ஆவது ஆஸ்கர் சில நினைவுகள்

Actors Madhur Mittal (bottom) and Dev Patel of Slumdog Millionaire
Child Artists of Slumdog Millionaire
Dev Patel, Madhur Mittal, Freida Pinto, Irrfan Khan and Anil Kapoor

Dev Patel and Freida Pinto at the Red Carpet
Freida Pinto with the Child Artist from Slumdog Millionaire

Best Picture-Slumdog Millionaire,Producer Christian Colson (L) with Steven Spielberg

Best Director-Danny Boyle for Slumdog Millionaire
Best Music Score and Best Song-AR Rahman for Slumdog Millionaire alongside Gulzar
Best Sound Mixing-Ian Tapp, Richard Pryke and Resul Pookutty For Slumdog Millionaire

Best Film Editing-Chris Dickens for Slumdog Millionaire

Best Director of Photography-Anthony Dod Mantle for Slumdog Millionaire
Best Adapted Screenplay-Simon Beaufoy for Slumdog Millionaire

Best Short Documentary-Megan Mylan for Smile Pinky
Best Actress-Kate Winslet for The Reader

ARR
2 Time Academy Award winner Meryl Streep Nominated for Best Actress for the film Doubt
Mickey Rourke,Nominated for Best Actor for The Wrestler
Maria Halle Berry-The only African-American woman to win an Academy (OSCAR)Award-(2001)
Best supporting Actress-Spain's Penelope Cruz for Vicky Cristina Barcelona

Best Actor-Sean Penn for Milk
Best Supporting Actor-An emotional Heath Ledger's Family Receiving the award for DarkKnight
Academy Award Winner(2002) Nicole Kidman
Best Sound Editing-(War of the worlds fame) Richard King for DarkKnight
Daniel Craig
Best Makeup-Greg Cannom for
The Curious Case of Benjamin Button
Brad Pitt and Academy Award winner(2000) Angelina Jolie at the Red Carpet.Angie Nominated for Best Actress for the film Changeling
Musician,Singer,Pianist and 5 Time Grammy winner Alicia Keys
Sean Penn With Best Leading Actress Kate and Best Supporting Actress Penelope
Singer,Musician Beyonce Knowles at the Red Carpet
Best original Screenplay-Dustin Lance Black For Milk
Best Leading Actor Sean Penn with his wife Robin Wright Penn Best Visual Effects Eric Barba, Steve Preeg, Burt Dalton and Craig Barron for
The Curious Case Of Benjamin Button
Bradd Pitt,Nominated for Best Actor for The Curious Case Of Benjamin Button
Musician John Legend who performed Wall-e song along side ARR as Medley
Kate Winslet with Husband
Best Art-Donald Graham Burt (Art Direction); Victor J. Zolfo (Set Decoration) For
The Curious Case Of Benjamin Button
Best Costume Design-Michael O'Connor for The Duchess

நன்றி:oscar yahoo
Related Posts with Thumbnails