February 27, 2009

BCCI ன் பிரிவினையும்/இந்திய-பாக் வீரர்களின் ஒற்றுமையும்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சச்சினும்,தினேஷ் கார்த்திக்கும் மாஸ்டர்ஸ் போட்டிகளுக்காக இன்று ஆடவிருந்தார்கள்.இவர்கள் இருவரும் ஆடவிருந்த அணியில் நியூசிலாந்து அணியின் ஹமிஷ் மார்ஷல் ம் உடன் இருந்தார்.

மார்ஷல் ICLன் முதல் இரு சீசன்களில் ராயல் பெங்கால் டைகர்ஸ் அணிக்காக ஆடி வந்தார்,இதனை காரணம் வைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினும்,கார்த்திக்கும் ஆட மாட்டார்கள் என போட்டி துவங்க ஒரு மணி நேரம் முன்னர் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தனைக்கும் அந்த கிரிக்கெட் போட்டி ஒரு நல்லெண்ணத்திற்காக நடத்தப்படுகிற போட்டி.அதற்கு கூட அனுமதிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வாரிய கிருமிகள்.மேலும் மார்ஷல் தற்போது ICL உடனான தனது ஒப்பந்தத்தை நிறுத்தியும் விட்டார்.

நியூசிலாந்தின் மூத்த வீரரகள் சிலரும்,கபில்தேவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்,நல்லெண்ண போட்டிகளில் கூட பிரிவினை பார்க்கும் அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் என வருத்தப்பட்டிருக்கிறார் உலகக் கோப்பையை வென்று வந்த கபில்.

அண்மையில் ICLல் ஆடிய வீரர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதற்காக இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷையருக்காக ஆட வி.வி.எஸ்.லக்ஷ்மணனிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாகவே BCCI ன் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது.

----------------------
இந்திய வீரர்கள் பாகிஸ்தானிற்கும், பாக் வீரர்கள் இந்தியாவிற்கும் வர அனுமதி மறுக்கபட்டுள்ள நிலையில் இந்தியாவின் டென்னிஸ் வீரர் பிரகாஷ் அமிர்தராஜும் பாகிஸ்தானின் குரேஷியும் இணைந்து இரட்டையர் போட்டிகளில் ஆடி வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னர் கூட துபாய் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடினர் இந்த இந்திய-பாக் இணை.

முந்தைய பதிவில் நான் எழுதியபடி விளையாட்டினால் சகோதரத்துவம் குறைந்து இன்று விரோதங்கள் பெருகி வருகின்றது. இதனிடையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்திய-பாக் இணையான அமிர்தராஜ்-குரேஷி க்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails