February 10, 2009

கிரிக்கெட்டில் இன்று சகோதரர்களின் தினம்

இலங்கையில் இந்தியா-இலங்கை இடையே நடைபெற்ற T20 கிரிக்கெட் ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத நிலையில் 7 முன்வரிசை ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பின்னரும் இந்திய அணி பத்தான் சகோதரர்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர் இலங்கை 171/4 இந்தியா 174/7
ஆஸ்திரேலியாவில் நியுசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி ஹஸி சகோதரர்களின் அற்புத ஆட்டத்தால் வென்றதோடு இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்று தொடரையும் 2-2 என சமன் செய்துள்ளது.

ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவார்களானால் தொடரையும் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. மைக்கேல் ஹஸி ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களும் டேவிட் ஹஸி 79 ஓட்டங்களும் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழி செய்தார்கள்.

சுருக்கமான ஸ்கோர் நியுசிலாந்து 244/8 ஆஸ்திரேலியா 247/4

இந்த தொடரை வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தற்போது தென்னாப்பிரிக்கா 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 120 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.
இவற்றின் சந்தோஷம் ஒரு புறமிருந்தாலும்.இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலைகளால் மடிந்து வரும் உயிர்களும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் இதுவரை மரணமடைந்த 200 உயிர்களும் மனதை கனக்கச் செய்யாமலில்லை. இவை மாற வேண்டும் என பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்வேன் இறைவனே.

3 comments:

நாமக்கல் சிபி said...

அட!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

பொதுவா அண்ணன் தம்பின்னாலே இப்படிதான் அடிச்சிக்குவாங்க. இங்க ஒன்னு செர்ந்து பந்த அடிச்சிட்டாங்களோ! பலே ப்ரதர்ஸ்

எட்வின் said...

சிபி மற்றும் நவநீதன் ஆகியோருக்கும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails