February 20, 2009

தேசம்,இனம்,மொழிகளைக் கடந்த ரஹ்மானின் இசை.


தேசம்,இனம்,மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை என்ற சொல் உண்டு. அச்சொல்லுக்கு உதாரணமாக நம் இசைப்புயல் ரஹ்மானின் இசையை சொல்லலாம்.

தனது 4 வயதில் கீபோர்டை நேசிக்க தொடங்கின திலீப் குமார் @ ரஹ்மான் தமிழில் ஆரம்பித்து,பின்னர் இந்தியாவின் பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து இப்போது உலக அரங்கில் பெரும்புகழ் பெற்றிருக்கிறார் என்றால் அது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கூறலாம்.

தனது 11 ஆவது வயதிலேயே கீபோர்ட் வாசிப்பவராக இசைஞானியின் குழுவில் இணைந்த ரஹ்மான் 1992 ல் ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.


இதன் முன்னரே பல விளம்பரப்படங்களிலும்,இளையராஜா,எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு உதவியாகவும் செயல்பட்டிருக்கிறார் லண்டன், டிரினிட்டி இசைக்கல்லூரியில் மேற்கத்திய இசையில் பட்டம் பெற்ற இசைப்புயல்.

உலகப்புகழ் பெற்றாலும் அவரிடம் இருக்கும் பணிவு சற்றும் குறையவில்லை.தன்னை உருவாக்கிய இசைஞானி இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் நண்பர் ட்ரம்ஸ் சிவமணி போன்றோரை இன்றும் மறவாமலிருந்து நன்றி தெரிவிப்பது, அவர் மேல் இன்னும் நல்லெண்ணம் கொள்ளச் செய்கிறது தமிழகத்தில் ரோஜாவிற்கு பின்னர் தனது மேற்கத்திய மற்றும் இந்திய இசை கலவையினால்(Fusion) திரைப்படப் பாடல்களில் ஒரு புதிய பரிணாமத்தை,மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இன்று திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது,வந்தே மாதரம்,பாம்பே ட்ரீம்ஸ்,Pray for me brother உள்ளிட்ட தமிழ்,ஆங்கில ஆல்பங்களையும் கொடுத்திருக்கிறார்.

இதில் Pray for me brother 2015 ஆம் ஆண்டிற்குள் உலகில் வறுமையை ஒழிக்க ஐ.நா சபை எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.வந்தே மாதரம் ஆல்பத்தின் தயாரிப்பாளரான பரத்பாலாவே இதனையும் தயாரித்துள்ளார்.
அதோடு எலிசபெத்,லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்,வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்(ஆங்கிலம் மற்றும் ஜப்பானீஸ்)தற்போது ஸ்லம்டாக் மில்லினியர் உள்ளிட்ட ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான பஞ்சதன் ரெக்கார்டிங் ஸ்டுடியோ உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகி லேயே மிக அதிகமாக விற்பனை ஆகியவைகளில் ரஹ்மானின் இசைப்பதிவுகள் ஆறாவது இடம் வகிக்கின்றன.விற்பனையில் பீட்டில்ஸ்,பாப் உலகின் ராணி என அறியப்படும் மடோனா,எல்டன் ஜான்,செலின் டியொன் இவர்களை எல்லாம் விட முந்தியிருக்கிறார்.இந்த தரவரிசையில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியராவார் ரஹ்மான்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய மற்றும் மாநில விருதினை தனது முதல் திரைப்படத்திலேயே வென்றார்.இதுவரை இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பளருக்கும் கிடைக்காத சிறப்பு அது.

11 ஃபிலிம்ஃபேர் விருதுகள்,11 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்,ஆறு மாநில விருதுகள்,நான்கு தேசியவிருதுகள்,கோல்டன் க்ளோப்,Critic's choice விருது,BAFTA,சேட்டிலைட் விருது போன்ற விருதுகளை வென்றிருக்கும் ரஹ்மான் என்ற A.S.திலீப்குமார் உயரிய விருதான ஆஸ்கரையும் பெற்று இந்தியாவிற்கும்,தமிழகத்திற்கும் இன்னும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

நன்றி: wiki UN


4 comments:

அப்பாவி தமிழன் said...

ஜீன்ஸ் படம் ரிலீஸ் ஆகறப்போ நேர்ல பேசி இருக்கேன் என்ன எளிமை , என்ன அடக்கம் அது தான் ரஹ்மான் .

பாண்டி-பரணி said...

ஆஸ்காருக்கு வாழ்த்துக்கள்

எட்வின் said...

நன்றி தமிழன் பாஸ்,
ரஹ்மானின் சிறப்பம்சமே அவரது எளிமையும்,பணிவும் தான்.

நன்றி பாண்டி சார்...
அனைவரின் வாழ்த்துதலும் Mozart of Madras க்கு ஆஸ்கரைப் பெற்றுத் தருமென நம்புவோம்

கிறிச்சான் said...

He made it !!!

Post a Comment

Related Posts with Thumbnails