February 23, 2009

ஸ்லம்டாக் மில்லினியரின் காரண கர்த்தா!

விருதுகளின் மழையினிடையில் மறக்கப்பட்ட திரு.விகாஸ் ஸ்வரூப் என்ற மின்னலை பலருக்கு இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய Deputy High Commissioner ஆக செயல்பட்டு வரும் விகாஸ் ஸ்வரூப் அவர்கள் 2005 ல் எழுதிய முதல் நாவலான Q&A வினை தழுவி உருவாக்கப்பட்டது தான் 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஸ்லம் டாக் மில்லினியர் என்ற திரைப்படம் என்ற விஷயம் வெகு சிலருக்கே தெரிய வாய்ப்புள்ளது.


Q&A நாவல் தமிழ் உள்பட உலகின் 40 பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் உயரிய Boeke Prize விருதை 2006 ல் வென்றது திரு.விகாஸ் அவர்களின் நாவல்.இதனை தழுவி BBC வானொலியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்திற்கு 2008 ன் சிறந்த நாடகத்திற்கான Sony Radio Academy Award ம் கிடைத்தது.

Film4 நிறுவனத்தினரால் இதன் உரிமை வாங்கப்பட்டு இயக்குனர் டேனி போயலினால் உருவாக்கப்பட்ட ஸ்லம் டாக் மில்லினியர் Critics Choice Awards களில் பரிந்துரைக்கப்பட்ட 6 பிரிவுகளில் 5 விருதுகளையும், Golden Globe Award களில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து 4 விருதுகளையும், BAFTA வில் பரிந்துரைக்கப்பட்ட 11 பிரிவுகளில் 7 விருதுகளையும், இப்போது OSCAR ல் பரிந்துரைக்கப்பட்ட 10 பிரிவுகளில் 8 விருதுகளையும் வென்று சாதனை படைத்திருக்கிறது.

அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பாடல் ஒன்று ஒலிப்பது முன்னெல்லாம் நினைத்து கூட பார்க்கவியலாத ஒன்று,ஆனால் 81 ஆவது ஆஸ்கர் விழாவில் இந்திய பாடலை கேட்க இயன்றதோடு இந்திய உடைகள் அணிந்த நடனக்குழுவினரின் நடனத்தையும் கண்டுகளிக்க நேர்ந்தது.


இந்தியாவின் திறமைகளை உலகம் உற்று நோக்க அடித்தளம் அமைத்து கொடுத்த திரு.விகாஸ் ஸ்வரூப் அவர்களுக்கும்,இயக்குனர் டேனி போயலுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கருதுகிறேன்.

அதோடு ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்கள் திரு.ரஹ்மானிற்கும்,திரு.ரெசூல் பூக்குட்டிக்கும் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆஸ்கர் விருது வென்ற டாக்குமெண்டரி ஸ்மைல் பிங்கி குழுவினருக்கும் ஜெய் ஹோ பாடல் எழுதிய திரு.குல்சார்,பாடல் பாடிய சுக்விந்தர் சிங்,மஹாலட்சுமி ஐயர்,தன்வி ஷா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.


குறிப்பாக ஆஸ்கர் மேடையில் தேச மொழியான ஹிந்தியிலும்,தாய் மொழியான தமிழிலும் பேசின இசைப்புயல் திரு.ரஹ்மான் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன்.உங்களால் இன்று தமிழுக்கும்,தமிழகத்திற்கும்,ஹிந்திக்கும் இந்தியாவிற்கும் பெருமை.

"எல்லா புகழும் இறைவனுக்கே"

நன்றி: wiki

7 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

ஆற்புதமான பதிவு...முதற்கண்...நாம்...கதசிரியருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிருக்கிறோம்...பின்பு...அனைவரும் அறிந்ததுபோல்..."ஆருயிர் தோழர் நெபு அவர்களே"...நலம்...நலமறிய ஆவல்...நீங்கள் அனுப்பியிருந்த மின் அஞ்சல் மிகவும் அருமை...அனைவருக்கும் இந்த மன வலிமையை வழங்கும்படி, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...இதற்கு முன் நீங்கள் அனுப்பிய,விரிவான மின் அஞ்சலையும் வாசித்தேன்....உங்களது பணியில்,நீங்கள் மென்மேலும் அனைத்து வளமும்,உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நீண்ட ஆயுளும், நிம்மதியும் வழங்கும்படி ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...அன்புத்தோழன்...பாலாஜி...திரு அ.ர்.ரெஹ்மான், குல்சார்,அனில் கபூர் மற்றும்...THE ENTIRE SLUMDOG MILLIONAIRE TEAM.... உண்மையிலெயே திரு A.R.REHMAN...கூரீயபடி...."எல்லாப் புகழும் இறைவனுக்கே"...தற்பொது நமது பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொல்ல வார்த்தைகளே இல்லை என்பது எனது கருத்து.......ALL THE INDIANS ARE PROUD OF THIS MULTIPLE OSCAR AWARDS, WHICH ACCORDING TO MY UNDERSTANDING, IS A TEAM EFFORT...AS MENTIONED EARLIER. BUT HOWEVER, I PERSONNELY FEEL THAT, THE ENTIRE MAGIC HAS BEEN DONE BY ONE SINGLE HUMAN BEING WITH GOD'S GRACE...WHO IS NOTHING BUT "A.R.REHMAN:....WE ARE REALLY PROUD TO BE INDIANS FIRST AND TAMILIANS SECOND...I DO NOT HAVE MORE WORDS TO EXPRESS THIS GLORIOUS MOMENT....ஏல்லாம் வல்ல இறைவன் திரு அ.ர்.இரகுமான் மற்றும் அவர்களது குழுவினருக்கு அனைத்து வளமும், நலமும் தரும்படி பிரர்த்திக்கிறோம்.....

Anonymous said...

i read this,,, very use ful,,i came to know more details abot,,S D M...thank u ,,anna ,,,,,charles

Anonymous said...

//தேச மொழியான ஹிந்தியிலும் //
எல்லாம் சரி தான்... இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் எங்கேனும் தேச மொழின்னு சொல்லி இருக்கா சார்...
விவரம் தெரிஞ்சவங்க மாதிரி இருக்கீங்க இப்படி எல்லாம் எழுதலாமா!!!

எட்வின் said...

தேச மொழியோ,தேசிய மொழியோ... National Language ஓ... எனக்கு சரியாக தெரியவில்லை. நீங்களே சொல்லி விடுங்கள்.அரசியலமைப்பு சட்டம் தெரியும் அளவுக்கு விவரம் இல்லீங்கணா.

எட்வின் said...

நன்றி charles...

ஜோ/Joe said...

//தேச மொழியான ஹிந்தியிலும்//
அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுங்க .

எட்வின் said...

வாங்க ஜோ... கருத்திற்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails