February 11, 2009

ஆஸ்திரேலியரின் துயரத்தால் கண்கலங்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத்தீ இது வரை 200 க்கும் மேலான உயிரையும் 1000 த்திற்கும் மேலான வீடுகளையும் காவு கொண்டிருக்கும் நிலையில் உதவிக்கரங்கள் பல பகுதிகளிலுமிருந்து வந்த வண்ணமிருக்கின்றன.


குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று தம் பங்கைச் செய்திருக்கின்றனர். அதோடு செஞ்சிலுவை சங்கம் மற்றும் Salvation army, (911 ன் போதும் சேவை செய்தவர்கள்) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

வீடு இழந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய பான்டிங்க்

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை பார்வையிட்டு விட்டு வந்த பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் துக்கம் தாளாமல் கண்கலங்கினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்

மக்களோடு மக்களாக ஒன்றி விடும் இவரைப்போன்ற தலைவர்கள் எங்கே! நம் அரசியல்வாதிகள் எங்கே!! மக்களை அழ வைக்காமலிருந்தால் அதுவே பெரிய விஷயம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் சில புகைப்படங்கள் இங்கே
செயற்கைக்கோள் புகைப்படம்

நன்றி: abc, bbc, smh, & cricinfo

6 comments:

வெண்காட்டான் said...

என்ன நீங்க. எங்க தலைவர் கருணா ஈழத்தமிழருக்காக பாடுபடவில்லையா? எத்தினை கவிதை எழுதியிருப்பார். சும்மா சொல்லவேண்டாம். ஈழத்தமிழருக்காக தீக்குளித்தவர்களை அரசியல் ஆக்க வேண்டாம் தன் பதவிக்கு ஆபத்து என்று சொன்னார். ஏன் அவர் பதவியில் இருநத்தால் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவார்.

எட்வின் said...

சரி தான்... ரொம்பவே சரி தான் வெண்காட்டான் பாஸே. எங்கள வச்சு காமெடி கீமடி பண்ணலியேனு ஈழத்தமிழர்கள் தாய்த்தமிழகத்தை நோக்கி கேட்காத குறை தான் இனி பாக்கி. வருகைக்கு நன்றி

Anonymous said...

Aussies deserve this for their racist attitude towards Asians... Punished by God.. I am one of racial abuse victims recently which costed my life almost..

--- Jamad

எட்வின் said...

நண்பர் ஜமாத் அறிவது... அனைத்து வெளிநாடுகளிலும் சில பேர் இவ்விதம் நடந்து கொள்(ல்)வதுண்டு. நாம் இருக்கும் ஓமனிலும் கூட. அதற்கென்று அனைவரையும் ஒரேயடியாக குறை சொல்லிவிடவும் முடியாது நண்பரே. உங்களின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன். பொதுமக்கள் அழிவது அது எந்த நாடாயினும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதே மனிதனுக்கு அழகு இல்லையா!

Anonymous said...

namakku irukku manithabimaanam...Vellaikkaranukku illiye?? ennai karunthol naay endru thane sonnaan??

எட்வின் said...

உங்கள் வேதனை புரிகிறது ஜமாத் அவர்களே...சிலர் அப்படித் தான். நாம் மனிதரின் குணங்களை மாற்ற முடிவதில்லையே

Post a Comment

Related Posts with Thumbnails