February 22, 2009

மரணத்தின் விளிம்பில் நிற்கும் Jade க்கு இன்று திரு(மறு)மணம்


பிரிட்டனில் சானல் 4 ன் Big Brother தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரிட்டனைச் சேர்ந்த Jade Cerisa Lorraine Goody இப்போது மரணத்தின் விளிம்பில் நிற்கிறார். 2007 ஜனவரியில் அதே நிகழ்ச்சியின் போது இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறி கொண்டு பப்படம் எனவும்; F*******r,A******e போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவரும் இதே ஜேட் தான்.இதனால் ஷில்பா தொலைக்காட்சி ஒளிபரப்பின் போதே கண்ணீர் விடவும் நேர்ந்தது.
இதனை ஷில்பா ஆரம்பத்தில் இன வெறி தாக்குதல் என்றாலும் பின்னர் இல்லை என மறுத்தார்.இந்த பிரச்சினை பிரிட்டன் மற்றும் இந்திய அரசாங்கங்கள் தலையீடு வரை சென்றது. இதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து Jade வெளியேற்றப்பட்டு பின்னர் பலமுறை ஊடகங்கள் வழி தான் செய்தது தவறு தான் ஒப்புக்கொண்டார்; மன்னிப்பும் பலமுறை கோரினார்.
2008,ஆகஸ்ட்டில் 27 வயதே ஆன அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.(Cervical Cancer;பெண் இனப்பெருக்க உறுப்பில் ஒருபகுதி).புற்றுநோய் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியதன் விளைவாக இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாக மருத்துவர்கள் இந்த மாதம் கண்டறிந்துள்ளனர்.


எனவே அவர் இனி உயிர் வாழப்போவது சில மாதங்கள் தான் எனவும் தெரிவித்து விட்டார்கள்(நிச்சயமாகவே புற்றுநோய் ஒரு கொடிய வியாதி தான்)தற்போது தலைமுடியை இழந்து,மிகவும் சோர்வுற்ற நிலையில் காணப்படுகிறார்


Big Brother தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது படு கேவலமாக குடித்தும்,நிர்வாணமாகவும் Jade நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.இன்னும் ஒரு படி மேலே போய் தனது பெண் குறியை Kabab க்கு (Fried meat) ஒப்பனை செய்து பேசினார் என்ற முகம்சுளிக்க வைக்கும் நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான Jade விவாகரத்திற்கு பின்னர் Big brother நிகழ்ச்சியில் தன்னுடன் பணியாற்றிய Jack Tweed ஐ காதலித்து வந்தார்.இருவரும் இன்று (பிப்ரவரி 22) திருமணம் செய்வதாக முடிவெடுத்துள்ளனர்.

சில மாதங்களே உயிர் வாழப்போகின்ற நிலையில் Jade செய்யப்போகின்ற திருமணம் தான் பிரிட்டனில் இந்த வார ஹாட் நியூஸ். ஐந்தும் ஆறும் வயதான அவரது குழந்தைகளின் எதிர்காலம் இனி கேள்விக்குறியாக உள்ளது.குழந்தைகளுக்கு உயில் பத்திரம் தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"
என்ற திருக்குறள் இவரது வாழ்க்கையில் நிஜமாகியிருப்பதாகவே தோன்றுகிறது.ஆனாலும் பல ஆண்களுடன் இவர் கொண்டிருந்த தொடர்பும் இவரின் இன்றைய நிலைமைக்கு காரணமாகியிருக்கலாம்.
நன்றி: sky wiki ehealth

5 comments:

Rajeswari said...

So sad!!

எட்வின் said...

கொடுமை தான்... என்ன செய்வது!! காலத்தின் கட்டாயம்!
வருகைக்கு நன்றிங்க ராஜேஸ்வரி

kailash,hyderabad said...

"pala angaludan kodiruntha thodarbe indha nilaikku karanam"
- I cant understand.if thats true more pross should have die by cancer.but its not seems like that.pls clarify.

எட்வின் said...

பல ஆண்களுடன் கொண்ட தொடர்பும் கூட காரணமாகயிருந்திருக்கலாம் என்றே சொல்ல நினைத்தது தான் அந்த வரிகள்.அது மட்டுமே காரணமும் அல்ல.I'm not justifying that alone be the cause for cervical cancer. Here we go... here's the link for what i tried to say from those line. http://www.ehealthmd.com/library/cervicalcancer/cc_causes.html
thanks for your visit Mr.Kailash

எட்வின் said...

Jade... I'm really moved by the Funeral Held today

My heart goes out to your 2 little sweet boys.

May your soul rest in peace.

Post a Comment

Related Posts with Thumbnails