March 09, 2009

ஆர்குட்டிற்கு நான் அடிமை!

இன்று பதிவுலத்திற்கு மட்டுமல்லாது ஆர்குட், ஃபேஸ்புக், hi5 என பல community இணையங்களுக்கும் அடிமையாய் கிடக்கின்றவர்கள் ஏராளம். இன்றைய தேதியில் பிரேசில் நாட்டவருக்கு அடுத்தபடியாக ஆர்குட் தளத்தில் அதிகம் உலவுவது இந்தியர்கள் தான்.

டேய் மச்சான் இன்னும் ஒரு scrap வந்தா இன்னையோட 1000 ஆயிடும்டா, ரமேஷ் என்னடா 50 பிரண்ட்ஸ் வச்சிருக்கது. நாளைக்கு பாரு நம்ம பிரண்ட்ஸ் லிஸ்ட்ட, சும்மா எகிறும் இல்ல!என்கிற உரக்க தொனிகளும்.

மாமே profile க்கு இந்த ஃபோட்டோ ஓகேவா பாரேன், டேய் பன்னாட இது போதுமானு நீயாவது பாத்து சொல்லேன்.மச்சி அவ என் ப்ரெண்ட் ரெக்வஸ்ட்ட அக்சப்ட் பண்ணுவாளாடா. காலேஜ்ல வேற அவள செமையா திட்டுபுட்டேன் டா போன்ற ஏக்கங்களும்…

என்னடா நம்ம ஒரு ஃபோட்டோ போட்டா ஒருத்தனும் கமெண்டு அடிக்க காணோம், வழக்கமா கமெண்டுற பொண்ணுங்கள கூட காணோமே, சரிடா இன்னைக்கு சன்டே தான! நாளைக்கு பாப்போம் என தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானங்களும்…

நண்பா இந்த அனிமேசன் கிரீட்டிங் அவளுக்கு பிடிக்குமாடா,ஓகே சொல்வாளா. போடா அவ என்ன ஓகே சொல்றது,எத்தன பொண்ணுங்கள நான் பாத்திருப்பேன்,இவ இல்லனா இன்னொருத்தி என கூண்டு விடு கூண்டு பாய்வதும் ஆர்குட் போன்ற இணையங்களில் சர்வசாதாரணமாகி விட்டது.

குறிப்பாக இளவட்டங்கள் அதிக அளவில் இது போன்ற இணையங்களில் அதிக நேரம் செலவிடுவது பெருகி வருகிறது.

பதிவுலகைப் போன்றே இங்கும் குழுக்களும்,நண்பர் வட்டாரங்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் பதிவுலகை விட இது போன்ற தளங்களில் தான் மொக்கைகளும்,அரட்டைகளும் அதிகம்.

அவற்றில் சில ஆரோக்கியமான விவாதங்களாக இருக்கும் சில மகா கும்மிகளாக இருக்கும். சிலர் இது போன்ற இணையங்களில் பிறரை ஏமாற்றும் வகையில் புனைப்பெயர்களிலும் தங்களை பதிவு செய்திருப்பார்கள்.

இன்னும் சிலர் விவரமாக பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை அளிக்காமல் இருப்பார்கள்.

15 வருடங்கள்... இல்லை 10 வருடங்களுக்கு முன்புவரை கடிதம் மற்றும் வாழ்த்து அட்டை பரிமாற்றங்கள் அதிகமாகவே இருந்து வந்தன. அதன் பின்னர் எழுத்துக்கள் குறைந்து மின்னஞ்சல் வழி தகவல் பரிமாற்றமும், வாழ்த்து பகிர்தலும் இருந்து வந்தது.

தற்போது ஓரிரு வருடங்களாக மின்னஞ்சல்களும் குறைந்து Hi, h r u... 5n, Hpy B'Dy Tk Cr போன்ற சுருக்கெழுத்துக்களில் scrap களாக, குறுந்தகவல்களாக தகவல் பரிமாற்றங்கள் குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமானதாக இல்லை.

இன்றைய சமுதாயத்தின் சிலர் இந்த நிலைமைக்கு மாறியிருக்கின்றனர்,பலர் மாற்றப்பட்டிருக்கின்றனர்.ஆர்குட்டிலோ ஃபேஸ்புக்கிலோ தங்களை இணைத்துக் கொள்ளாதாவர்களை ஏளனத்துடன் பார்க்கின்றனர் சக ஜீவிகள்.

ஆர்குட்டில நீ இல்லயா மச்சான், சே என்னடா நீ இது கூட தெரியாதா என கல்லூரிகளில் ஏளனமாய் பார்க்கின்ற நிகழ்வுகளும் உண்டு.

இந்த நிலை தொடருமானால் பாசம் நிறைந்த கடித கருத்துப் பரிமாற்றங்களை, அன்பானவர்களின் அன்பு கையெழுத்துக்களை,கைவண்ணங்ளை நாம் இழக்க நேரிடும். அதோடு சிந்தனைகளும், எண்ண ஓட்டங்களும் இன்னும் மழுங்கிப் போகவும் வாய்ப்புள்ளது.

(வழக்கமாக காகிதத்தில் எழுதும் என்னையும் இந்த இணையமும், கணினியும்,கீ போர்டும், கட்டிப்போட்டிருக்கின்றன. கையெழுத்தே மறந்து விடும் போல!)

வருங்காலங்களில் "மம்மி என் name ரமேஷ் னு சொல்ற" அப்போ என் பாஸ்வேர்ட் என்னமா என கேட்கிற சந்ததி வந்தாலும் வரும்!!

"அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி அனைத்து விஷயங்களுக்கும் பொருந்துவது போல ஆர்குட்,ஃபேஸ்புக் போன்ற இணைய உலவிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற இணையதளங்களில் குழுக்களுக்கும் (community)பஞ்சமில்லை, சாதி வாரியாக, சமய வாரியாக மொழிவாரியாக என பல குழுக்கள் உள்ளன.விளையாட்டு அணிகள், உடல்நலம், அரசியல், நடிக நடிகைகள், இசை,பலான விஷயங்கள் என குழுக்கள் பரந்து விரிந்துள்ளன.

இவற்றில் நன்மையும் தீமையும் ஒரு சேரவே காணப்படுகின்றன.

சமீபத்தில் கூட அஜித் என்றவர் ஆர்குட்டில் ஆரம்பித்த குழுவில் சிவசேனாவை குறித்து தவறான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததற்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே குறைவாக கும்மியடித்து, அளவோடு மொக்கை போட்டு ... வளமாக வாழ வாழ்த்துக்கள்.

6 comments:

கிறிச்சான் said...

அருமையான கருத்துகள் .... குறைவாக கும்மியடித்து, அளவோடு மொக்கை போடா முயற்சி பண்றோம்...நன்றி அத்தான் !

ahaanandham said...

நல்ல பதிவு,,ஏற்று கொள்ள கூடிய கருத்துக்கள்,,இருந்தும்,என்னால் ஒரு கருத்தை மறுக்க இயலாது,,எனது ஆர்குட்,,நண்பர்களில்,ரெண்டுபேர்,சுமார் பதினைந்து,வருடங்களுக்கு,பிறகு,,இதன் மூலமாக இணைந்தோம்,,மகிழ்ச்சிக்குரியது,,பாராட்டுக்குரியது,,இதில் தவறுகளும்,,இருக்கிறதுஎன்பதை மிக மெதுவாகவே, தெரிந்துகொண்டேன்,,களைகள் இல்லாத இடம்தான் எது ???விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்,,,ஆசிரியரின்அறிவுரைகள் மிக்க பயனுள்ளதே """முற்சிக்கிறோம் குறைவாக மொக்கை,போட ,,,,,,ஆசிரியர்க்கு ஆர்குட்,இன் வாழ்த்துக்கள்,,,

Anonymous said...

நல்ல பதிவு...மறுபக்கம் இதோ...
ஆர்குட்டில் ‘ஒபாமா’வில் ஆரம்பித்து ‘ஓசி டீ’ வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு ‘கம்யூனிட்டி’கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!

இது ஆனந்த விகடன் கட்டுரை...

http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339

அன்புடன் அருணா said...

//விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்//

என் எண்ணமும் இதுவே...
அன்புடன் அருணா

எட்வின் said...

நன்றி கெர்ஷோம்,சார்லஸ்

Charles Pravin said...
//விஞ்ஞானம் படைத்த விந்தைகளை,நாம் கைகொள்ளுவதை பொறுத்து,நமக்கு பயன் அளிக்கும் ,,,,நல்லவற்றிற்கு பயன்படுத்துவோம்//

சரியாக கூறியிருக்கிறீர்கள்.
------
ஆர்குட்டின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான குழு குறித்த உங்கள் தகவலுக்கும் விகடன் குறித்த தகவலுக்கும் நன்றி ராம் மோகன்.

நன்றி அருணா.

கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க எட்வின்

Post a Comment

Related Posts with Thumbnails