March 18, 2009

பார்ட்டி,டிஸ்கொத்தேக்களின் பகீர் அரங்கேற்றங்கள்

இன்று நகரங்களில் பார்ட்டிகள்,டிஸ்கோத்தேக்கள் என அழைக்கப்படும் கேளிக்கை விருந்துகளில் அரங்கேறி வரும் சம்பவங்கள் முகம் சுளிக்க வைப்பவையாக இருக்கின்றன.

நள்ளிரவுகளில் நடக்கும் இது போன்ற கும்மாளங்களில் பெரும்பாலும் இள வட்டங்களே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி கலந்து கொள்கின்றனர்.

சென்ற வாரத்தில் இந்திய பெருநகர் ஒன்றில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்ளை மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றேன். முகம் சுளிக்க வைக்கும் இந்த புகைப்படங்களில் ஆண் பெண் வேறுபாடு மட்டுமின்றி வயதும் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என புலப்படுகிறது.

ஒரு புகைப்படத்தில் குறைந்தது 45 வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் தன்னை விட 20 வயது குறைவான பெண்ணுடன் சல்லாபிக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இரு ஆண்களும் இரு பெண்களும் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனர்.


என்ன கொடும அய்யா இது! திரை உலகிலும் இது சகஜமே!

பார்ட்டிகள்,டிஸ்கொத்தேக்கள் மட்டுமே தங்களுக்கு உற்சாகம் தருவதாக பெரும்பாலான இளமைப் பட்டாளம் நம்புகிறது.

திங்கள் முதல் சனி வரை ப்ராஜக்ட்,அசைன்மன்ட் என களைத்துப் போயிருக்கும் எங்களுக்கு சேட்டர்டே நைட் பார்ட்டிகள் தான் "சின்ன" ஆறுதல் என புலம்பவும் செய்கின்றனர் இளசுகள்.

இது போன்ற கும்மாளங்களில் ஆட்டம் மற்றும் உணவு பரிமாறுதல் மட்டுமல்லாது,மதுவும்,புகையும் மிக சகஜம். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்கு தான் முதலிடம் அதன் பின்னர் தான் ஆட்டமெல்லாம்.

வரைமுறைகள் pub ற்கு pub மாறவும் செய்கிறது, சில பப் களில் ஜோடியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.சிலவற்றில் மதுவுக்கு தடையும் உண்டு.

பெருநகரங்களில் அரங்கேறி வரும் இது போன்ற கும்மாளங்கள் ஒரு எல்லைக்குள் நிற்பது வரை எவர்க்குமே பிரச்சினை இல்லை.

இது போன்ற கூத்துகளால் இன்று மதுவிற்கும்,புகைக்கும் அடிமையாகி வரும் இளசுகள் ஏராளம்.அதோடு கருக்கலைப்பு வரை இட்டுச் செல்கிறது இவர்களின் எல்லை மீறல்.

இப்படி இருப்பவர்கள் தங்கள் வருங்கால (தற்கால!!!)துணைகளுக்கு எப்படி உண்மையாக,ஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்பது யாரறிவார்?

இதனால் தானோ என்னமோ இன்று இந்திய நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன.

மது மற்றும் புகையினால் வரும் வியாதிகளையும், விளைவுகளையும் பட்டியல் போட வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்!

இவர்களின் இம்மாதிரியான உறவுகள் முறிவடைந்தால் இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றொரு உபரி வியாதி.

வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மாற்ற வழி தேடியோர்க்கு பல நேரங்களில் அதுவே மன அழுத்தமாக மாறி விடுவது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!

11 comments:

Anonymous said...

அட போங்கய்யா. அவனவன் என்னா கஷ்டப்பட்டு பிடிக்கிறானுவ. நீங்க வேற...
அதைப் பதிவா போட்டுக்கிட்டு...ரகளை பன்னுறீங்க...

எட்வின் said...

சரிங்க அய்யா பிடிங்க பிடிங்க நல்லா பிடிங்க...ஓடிர போறாங்க பாத்து

Anonymous said...

என்ன ஒரு அவலம். எங்கே போய் கொண்டிருக்கிறது நமது கலாச்சாரம் ?

Joe said...

You should call up Ravan sene, err... Ram sene and shut down this pub and beat up all the drunkards!

Long live our great Indian culture!
LMAO

எட்வின் said...

//Ravan sene, err... Ram sene // LOL

Anonymous said...

வந்துடாறையா புதிய தமிழ் குடிதாங்கி

GERSHOM said...

நல்ல சிந்தனை...மீதி படங்களை கொஞ்சம் மின்னஞ்சல் செய்ய முடியுமா? :)

ராஜ நடராஜன் said...

யூத்ன்னா அப்படித்தான் இருக்கும்:)
பல்லிருக்கிறவன் முட்டாய் திங்கிறான்.

Anonymous said...

//ராஜ நடராஜன் said...

யூத்ன்னா அப்படித்தான் இருக்கும்:)
பல்லிருக்கிறவன் முட்டாய் திங்கிறான்//

ஆஹா, நல்ல கருத்தா இருக்கே, அண்ணே எந்த மிட்டாய பத்தி சொல்றீங்க, பஞ்சு மிட்டாயா, அதுக்கு பல் இருக்கனும்னு அவசியம் இல்லையே

முரளிகண்ணன் said...

சோதனை தான்

:-)))))

நவநீதன் said...

//வேலைப்பளுவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மாற்ற வழி தேடியோர்க்கு பல நேரங்களில் அதுவே மன அழுத்தமாக மாறி விடுவது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!//
என்ன செய்ய? சில சமயம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிவிடுகிறது :-)))))))

Post a Comment

Related Posts with Thumbnails