March 19, 2009

சொந்த மகள்களை கற்பழித்த தகப்பன்களின் கொடூரம்

கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் வழி கேள்விப்படும் செய்திகளை கேட்கவே அதிர்ச்சியாயிருக்கிறது.

ஆஸ்டிரியாவில் 72 வயதான ஜோசஃப் பிரிட்ஸ்ல் என்றவர் தனது சொந்த மகளுடன்(எலிசபெத் தற்போது 42 வயது) 25 வருடம் குடும்பம் நடத்தி 7 குழந்தைகள் (மன்னிக்கனும் பேரக்குழந்தைகள்) பிறக்கவும் காரணமாகியிருக்கிறார்.

அவற்றில் ஒரு குழந்தையை கொலையும் செய்திருக்கிறான் இந்த கொடியவன். விசாரணையின் போது நீதிமன்றத்தில், அவள் என்னுடைய குழந்தைகளை பெற்றால் என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் நெருங்கி பழகாமலிருப்பாள் என கருதியே இதைச் செய்ததாக தெரிவித்துள்ளார் !!

கடந்த 25 வருடங்களாக மகளை எவரும் அறியாவண்ணம் பாழ்கிடங்கு ஒன்றில் ஒளித்து வைத்திருக்கிறார். என்ன கொடுமை!

-----------------
இன்று காலை கேள்விப்பட்ட இதே போன்ற மற்றொரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளிநாட்டில் அல்ல இந்திய மண்ணில் (மும்பையில்) நடந்திருக்கிறது.

செல்வச்சீமான் ஆவதற்கு இதுவே வழி என்ற சாமியார் ஒருவரின் அறிவுரைக்கு இணங்கி 9 வருடம் தனது மூத்த மகளின் 15வயது முதல் கற்பழித்து வந்திருக்கிறார் ஒரு தகப்பன்(தொழிலதிபர்).

இரண்டாவது மகளிற்கு 11வயதிருக்கும் போதே காம விளையாட்டிறகாக சாமியாருக்கு படைத்திருக்கிறார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் தந்தையின் இச்செயலுக்கு தாயாரும் உடந்தையாம்.

கொடுமை தாங்காத பெண்கள் இருவரும் தங்கள் தாத்தா மற்றும் மாமனாரிடம் இரு தினங்களுக்கு முன்னர் தான் (காலந்தாழ்ந்து?)தெரிவித்துள்ளனர்.தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கேட்கவே அதிர்ச்சியளிக்கும் இந்த கொடூரங்களை அனுபவித்த இப்பெண்கள் எவ்விதமான மனநிலையிலிருப்பார்கள், எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார்கள் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

கொடுமைப்பா...

மற்றொரு செய்தி. ஷிம்லாவில் காது கேளாதவர்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆசிரியர்களும் ஒரு பிரின்சிபாலும் இணைந்து மாணவிகளை தங்கள் காம இச்சைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான பள்ளிகளில் இது போன்ற அவதிக்கு ஆளாகி வருகிறார்கள் மாணவிகள்.

என்ன உலகமய்யா இது!
நன்றி: skynews ndtv

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கு ஒரு சம்பவம் தன் தாய்வழிப் பாட்டாவால் 7 வயதிலிருந்து ஒரு பெண் கெடுக்கப்பட்டுள்ளார். இப்பெண்ணைப் பெற்ற தாய் ,எப்படி இதை எடுப்பது எனக் கண்ணீர் விட்டார். ஓய்வுக்குப் பின் மனைவி இறந்ததும் தன் வீட்டில் வாழட்டுமே என அரவணைத்த தந்தை.
தன் பேரப்பிள்ளையைப் பசியாறிவிட்டார்.
மனிதன் என்பவனும் அடிப்படையில் ஒரு மிருகமே என்பதன் வெளிப்பாடு இது!; காலம் காலமாக உலகம் பூரா இச்சிக்கல் உள்ளது. இப்போ இணையத்தால் உடனுக்குடன் அறியக் கூடியதாக உள்ளது.
ஆனால்...வாழ்க்கை நெறி..ஒன்று மனிதனுக்குப் சொல்லப்பட்டுள்ளது. அதை லட்சத்தில் ஒருவரே மீறுகிறார்கள் என்பதே ஆறுதல்.
எனினும் வயது வந்த பிள்ளைகளுடன் பழகுவதில் கட்டாயம் பெற்றோரும்; உற்றோரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுக் கெல்லாம் இன்றைய பொழுது போக்கு அம்சங்களான திரைப்படங்கள்; நாடகங்கள்; தொ.கா நிகழ்ச்சிகளின் அமைப்புகளும்
காரணமெனில் மிகையில்லை.
குறிப்பாக மானாட மயி(ரா)லாட நிகழ்ச்சியின்.. கெமிஸ்ரி;பிசிக்ஸ் பார்த்தால் ,குடுகுடு கிழடுகளையும் உசுப்பிவிடும். (அது முதல்வர் கலைஞகுக்குப் பிடித்த நிகழ்ச்சி அவர் தான் பிழைதிருத்தம் செய்து வடித்தனுப்புகிறார் என்பது வேறு)
இன்றைய திரைப்படப் பாடல் காட்சிகள்...சொவ்ற் போர்னோ என ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டார்.அதையே பார்த்துக் கொண்டு இருப்போர் எப்படி ஆவார்கள்..
அத்துடன் ஆத்மீகம்; ஆசிரியர்; வைத்தியர் என எல்லாத் துறையிலும்...நெறி குறையத் தொடங்கிவிட்டது.
உண்மை கசக்கும்!!
நாம் நம்மைச் சீர்தூக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

Asfar said...

அவ்வளவே!மற்றபடி இலக்கியம்,தமிழெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்.
Dont worry about, you can do this work.. very good.
have a nice day with regards..

எட்வின் said...

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் யோகன். இன்றைய இந்தியாவின் மாற்றத்தில் தொலைக்காட்சிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. நிச்சயமாகவே நாம் நம்மை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.

நன்றி Asfar உங்களது ஊக்குவிப்புக்கு.

nila said...

உலகில் நடப்பவற்றுள் நமக்குத் தெரிபவை இவை...
தெரியாமல் இன்னும் எத்தனையோ...
வளர்ந்து நிற்கும் தன் மகளை குறு குறு எனப் பார்க்கும் எத்தனையோ கேடு கெட்ட தகப்பன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....
யோகன் கூறியது போல் இந்த சீரழிவுகளுக்கெல்லாம் தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களும் காரணமாய் இருந்துதான் வருகின்றன..
இனி வரப்போகும் இளைஞர் சமூகம் எப்படி இருக்குமோ? நம் பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்கப்போகிறோமோ? என்ற பயம் எப்போதும் மனதின் ஒரு மூலையில் இருந்துகொண்டேதான் இருக்கிறது....
இதற்கெல்லாம் பதில் சொல்லுமா இந்த சமுதாயம்?

Post a Comment

Related Posts with Thumbnails