March 29, 2009

தவறுக்கு வழிகாட்டும் தொலைக்காட்சி விளம்பரங்கள்

இன்று விளம்பர இடைவேளை இல்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.30 நிமிட நிகழ்ச்சி என்றால் அதில் பாதி நேரம் விளம்பரங்களின் ஆதிக்கம் தான்.

சந்தையில் இறங்கியுள்ள புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவதில் பத்திரிக்கை விளம்பரங்களைக் காட்டிலும் தொலைக்காட்சிகள் முன்னணி வகிக்கின்றன.

அதோடு தொலைக்காட்சி விளம்பரங்கள் மிக எளிதில் மக்களை சென்று சேரவும் செய்கின்றன.


பல தொலைக்காட்சி விளம்பரங்கள் பயனுள்ளவையாகவும்,ரசிக்கும் படியாகவும் இருந்தாலும் சில விளம்பரங்கள் பொதுமக்களை குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தை தவறு செய்ய தூண்டுவதாக உள்ளன.

அவற்றில் ஒன்று ipill என்ற கருத்தடை மருந்தின் விளம்பரம்.இன்று மருந்தகங்களில் மிக எளிதில் கிடைக்கும் அளவிற்கு ipillற்கு அனுமதியளிக்கப் பட்டிருப்பதும் வருந்தத்தக்க விஷயம்.

இதனை தயாரிக்கும் சிப்லா நிறுவனமே மருந்தகங்களிலிருந்து ipill ஐ பெறுவதற்கு மருத்துவர்களின் சீட்டு தேவையில்லை என விளம்பரம் செய்திருக்கிறது.

புதிதாக திருமணமானவர்கள் தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க ipill எடுத்துக் கொள்ளுங்கள் என சில வரிகளில் இந்த விளம்பரம் சொல்லிப் போனாலும் அது ஏற்கெனவே எக்குத்தப்பாக போய் கொண்டிருக்கும் சில இளைஞர்களுக்கு பல வழிகளில் பாதிப்பையே அளிக்கிறது.

1.ipill இருக்கிறதே என்ற நம்பிக்கையில் துணிந்து தவறான உறவுகளில் ஈடுபட தூண்டுகிறது
2.ipill போன்ற கருத்தடை மாத்திரைகளால் மட்டும் பெரும்பாலும் கருத்தரிப்பை தடுக்க முடிவதில்லை.இதனால் மேலும் பிரச்சினைக்குள்ளாக ஆக வேண்டிய நிலைமை.
3.சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் பெண்களின் உதிரப்போக்கில் மாறுதல்கள் ஏற்படுத்தலாம்.


இணையத்தில் ehealthforum என்ற விவாத தளத்திற்குள் சென்ற போது 18 வயது பெண் ipill எடுத்ததாக கேள்வி ஒன்று எழுப்புகிறாள், இது போன்று இன்னும் எத்தனை இளைஞிகளோ?

ipod ற்கு பின்னர் இன்றைய இளைஞர்களிடம் பிரபலம் இந்த ipill தான் என Mid day பத்திரிக்கையின் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இது போன்ற விளம்பரங்களுக்கு அரசு எவ்விதம் அனுமதியளிக்கின்றது என்பது தான் புலப்படாத விஷயம்.

------------


இது ஒருபுறமிருக்க புதியதாக வந்திருக்கும் fanta விளம்பரம் சொல்லும் "ஃபேன்டா குடி ஸ்கூல் கட் அடி" கருத்து சிறியவர்களின் மனதை அதிகம் கவருவதாக உள்ளது.

அதிகம் கவர காரணம்?? ஃபேன்டாவின் அந்த விளம்பரத்தில் வரும் இளசுகள் ஃபேன்டாவைக் குடிப்பதற்காகவே "வகுப்பை புறக்கணிப்பது" தான். அதோடு ஃபேன்டாவிற்காக பெற்றோர்களின் கண்ணில் கூட மண்ணைத் தூவி விட்டு மாய்ந்து விடுகிறார்கள் நண்பர்களுடன்.

இவற்றை பார்க்கும் வாண்டுகள் மனமும் ஓஹோ இப்படிக் கூட செய்யலாமோ என இவர்களை தூண்டாமலிருக்குமா?

ஃபேன்டா,பெப்சி,கோக் போன்ற குளிர்பானங்களின் விளம்பர உக்திகள் இப்படியிருந்தாலும் இவை அளிக்கும் பற்களின் தேய்மானம்,பற்சொத்தை,வயிற்றுப்புண் போன்ற உடல்நல தீமைகள் ஏராளம்.

ஆனாலும் இவற்றின் விளம்பரங்களில் வருபவர்கள் நாட்டுக்கு நல்லது செய்வோம் என வாக்கு தரும் 'ஏய் சைலன்ஸ்' ரகங்கள் தான்.


இரு வருடங்களுக்கு முன்னர் இக்குளிர்பானங்களின் விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை என அமீர்கான்,அமிதாப்,ஷாரூக் போன்றோர் கூறியிருந்ததாக ஞாபகம்.இப்போது எப்படியோ தெரியவில்லை.

"மாம்பழத்தை தின்பவன் மடையன்" போன்ற தரந்தாழ்ந்த கருத்துக்களை முன் வைப்பதும் இது போன்ற குளிர்பானங்கள் தான்.

இதனைக் குறித்தும் நாம் இழந்து வரும் நமது பாரம்பரிய உணவுகளைக் குறித்தும் பதிவர் செந்தில் இரு வாரங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார் அதனை இங்கே படிக்கலாம்.

4 comments:

Technologies Unlimited said...

Hi.. Your post is too good to read.

Please keep posting..

I enjoyed with your post..

ஜீவா said...

அன்பு எட்வின், அமா, குமா, சம ஸ்ட்ராங்கா ஒரு பதிவு கொடுத்துவிடீர்கள், இதில் வேறு ஒரு பிரச்சனை என்னவென்றால், சில ஏழை குழந்தைகள் ஹார்லிக்ஸ் விளம்பரத்தை பார்த்து விட்டு அது போல எனக்கும் வாங்கி கொடு என்று அடம்பிடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், நல்ல பதிவு
அன்புடன்
ஜீவா

எட்வின் said...

http://www.tamilish.com/ ல் நண்பர் கிலுக்கு அவர்கள் இட்ட பின்னூட்டம் இங்கே

kilukku commented
'அதிர்ச்சியாகத்தான் உள்ளது . இங்கே ஒரு பெண்ணின் கேள்வியை பாருங்கள் http://in.answers.yahoo.com/question/index?qid=20081031033546AAmgN4x/

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Good Post Edwin.. My article's link in ur post wud give readers a continuity..

Senthil..

Post a Comment

Related Posts with Thumbnails