March 29, 2009

மதமென்னும் மாயவலையில் சிக்கியிருக்கும் மேனகாவும் மகனும்

பொதுவாக மதம் என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்த விரும்பாதவன் நான்,(சமயம் என கூறுவது தான் வழக்கம்)எனினும் உத்திரப்பிரதேச தேர்தல் தொகுதியான பிலிபித்தில் வருண்காந்தியால் நிகழ்த்தப்பட்ட உரையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களினாலும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மனதில் அவர்களின் சமய வழிபாடு,மதம் கோலோச்சியிருப்பதால் மதமென்று குறிப்பிட வேண்டிய கட்டாயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சமயத்தை/சமயத்தவரை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தாக்குவோம் என முழக்கமிட்டுள்ளார் நேரு வம்சா வழியைச் சார்ந்த வருண்காந்தி.

இவ்வாறு கூறுவதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டைப் பெறுவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென்றால்,வருண் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் முழங்கியிருக்கலாம்;அதுவும் இல்லை,அது அவர்களின் கட்சி கூட்டமென்கிறார்கள்.

கட்சியிலும் கட்சி மேலிடத்திலும் நல்ல பெயரை பெற வேண்டுமென்று அவ்வாறு முழங்கினாரா என்பதும் தெரியவில்லை.அவர் கூறிய கருத்து உண்மை என அறியப்பட்டால் அது 'அவரது தனிப்பட்ட கருத்து' என கட்சியும் அவரிடமிருந்து விலகி நிற்கிறது.

இளம் வயதிலேயே வருண் மத சாயம் கொண்டு முழங்கிய இக்கருத்துக்கள் அவரிடமிருந்து நல்ல அரசியலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே.அதோடு இன்றைய இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமும் ஆகியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் லண்டனில் சட்டமும் பொருளாதாரமும் பயின்றவர்.

அக்கருத்துகள் அவரது சொந்த கருத்துகளா இல்லை கட்சியினரால் உந்தப்பட்டு உரைக்கப்பட்டவையா என்பது யாருக்கும் புலப்படாத ஒன்று.

----------
வருண் கூறிய கருத்துக்களை விட அவர் நேற்று சரணடைவதற்காக சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகள் மேலும் வருந்தத்தக்கவை.அவரது ஆதரவாளர்களுடன் அவர் சென்ற பேரணியும் அதனைத் தொடர்ந்த கலவரங்களும் தடை உத்தரவு(144)அமல் படுத்துமளவிற்கு சென்றிருக்கிறது.அதன் பெயரில் புதிதாக வழக்கு ஒன்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

(சரணடைய சென்றவர் வாகனத்திற்குள் அமர்ந்து செல்லாமல் வாகனத்தின் மேல் அமர்ந்து ஊர்வலம் சென்று பிரச்சினை வலுக்க காரணமானது ஏனோ)

--------
வருண் ஆவேசப்பட்டு முழங்கி விட்டார் சரி, ஆனால் அவரது அன்னை திருமதி.மேனகாவும் அவருக்கு நிகராக பிரிவினையை தூண்ட முயற்சிப்பது தான் மற்றொரு கவலைக்குரிய விஷயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த காவலர் ஒருவர் தான் வருண் சரணடைய சென்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்திருக்கிறார் மேனகா.

இத்தனைக்கும் அந்த காவலர் அன்று பணியிலே இல்லை என மறுத்திருக்கிறார் பிலிபித் பகுதியின் காவல்துறை சூப்பிரண்ட்.

ஒரு காவலரையே காவலராக பார்க்க முடியாமல் அவரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக பார்ப்பது ஏனோ புரியவில்லை.

இவர்கள் கூறிய இக்கருத்துக்கள் இவர்களின் சொந்த கருத்துக்களா இல்லை மதமென்னும் மாய வலையில் சிக்கியமையால் தூண்டப்பட்டு தூவப்பட்ட விஷம கருத்துக்களா என்பது அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!

4 comments:

Joe said...

நல்ல பதிவு, எட்வின்.

சம்பந்தப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள், திருந்தவும் அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் அரசியல்வியாதிகள், அவர்களை எந்த காலத்திலும் காவல் துறையோ, நீதித் துறையோ எதுவும் செய்யாது!

எட்வின் said...

நன்றி திரு.ஜோ... என்ன பண்ணுவது? பணம் எல்லோர் கைகளையும் கட்டிப்போட்டிருக்கிறது

Anonymous said...

If you are so concerned about people, you should speak about the hatred speaches by other religion also. Particularly the muslims who are making this world an hell by their atrocities. Even christians who are doing all sorts of things to convert the downtrodden people from their religion to christianity. So, before pointing out at Hindus, think whether other religion people are correct in their behaviour and speeches.

எட்வின் said...

அனானி அவர்களே,

நான் ஒரு குறிப்பிட்ட சமயத்தை மட்டுமே இழித்து பேசுபவன் அல்ல. நான் சமயங்களிலோ,மதங்களிலோ நம்பிக்கை கொண்டிருப்பவனும் அல்ல.

மனிதனை மனிதனாக பார்க்கிறேன்.

எனது பிற பதிவுகளைப் படித்திருந்தால் புரிந்திருப்பீர்கள். எனது பெயரை மட்டும் வைத்துக் கொண்டு நான் ஒரு குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவன் என தவறாக எண்ண வேண்டாம்.

எனது இந்த பதிவில் எந்த இடத்திலும் எந்த சமயத்தின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா?

ஒபாமா விவிலியத்தின் மீது சத்தியம் செய்து கொண்டு பிற நாடுகளின் மேல் ஏவுகணைகளை ஏவுவதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

இது போன்று இன்னும் பல விஷயங்கள்.அனைத்து சமயத்திலும் ஆன்மீகவாதிகள் என சொல்லித் திரிகின்ற பலர் இன்று போலிகளே.

Post a Comment

Related Posts with Thumbnails