April 11, 2009

தேர்தல் வாக்குறுதிகள் இப்படியும் இருக்கலாமோ!

தேர்தலும் நெருங்கி விட்டது.இந்த முறை கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகள் முன் வைப்பார்கள் என்ற ஒரு சிந்தனை.

திராவிட முதியவர் கழகம்

1.எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் வாரம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் கழக கடிதம்/இரங்கற் பா கலரில் அனுப்பி வைக்கப்படும்.

2.தமிழக நலன் கருதி எம்.பிக்கள் பதவியேற்றதுமே ராஜினாமா செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்படும்(நன்கு கவனிக்க... தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படும்)

3.குடும்பங்களில் சண்டை போட்டு சொத்திற்காக மீண்டும் இணைபவர்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும்

அம்மா திராவிடம் முன்னேற்றும் கழகம்

1.ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவிகளின் பெயருக்கு கீழ் தான் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டம் அமுலாக்கப்படும்.

2.பெண்கள் அனைவரையும் அம்மா என்றழைக்கவும் அவர்கள் காலில் ஆண்கள் விழவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இதயமில்லா தேசிய காங்கிரேசு

1.தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு முறையாவது இல்லையென்றால் ஒரு நிமிடமாவது கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க பரிந்துரைக்கப்படும்.

2.அவதியுறும் தமிழினத்தை காக்க நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் (அதே நாளில் டில்லியில் இருந்து ரணம் ஏற்படுத்தும் வெடிபொருட்களும் அனுப்பப்படும்)

3.2011 ல் மாநிலத்தில் காமராஜி ஆட்சி அமைத்து திராவிட முதிய கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.(மன்னிக்கனும் வாக்காளர்களே... 2111 என வாசிக்கவும்)

பாட்டாளி மகன் கட்சி

1.முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2.மகனை மத்திய மந்திரி ஆக்கி அவதியுறும் தமிழ் உடன்பிறப்புகளின் அல்லல் உடனே துடைக்கப்படும்

3.திட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் சார்பாக அறிக்கை விடப்படும்.

மறுபுரட்சி திராவிட முனங்கலேற்ற கழகம்

1.உலகமே உற்றுநோக்கும் விதம் தமிழக நலன் காக்க! உணர்ச்சிப்பூர்வ கருத்துகள் முனங்கப்படும்.

2.சிறைச்சாலையில் மக்கள் குறை தீர்க்கும் கவுண்டர் ஒன்று திறக்கப்படும்.

3.தமிழின எதிரிகள் தமிழகத்திலிருந்து துரத்தப்பட ஆயுதம் ஏந்தப்படும்

இடவலசாரி கட்சி

1.மக்கள் நலனிற்காக குரல் கொடுத்து ஆட்சியின் இடையிலேயே மக்கள் நலன் கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவும் விலக்கப்படும்

2.தமிழர் பண்பாட்டிற்காக சிவப்பேறிய எங்கள் கொள்கைகளையும் விட தயாராக இருக்கிறோம்.

எந்த தேர்தலிலும் இல்லாத படி இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் வாக்குறுதி:பொதுமக்களின் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல,மலர்கள் மீது. அதனால் காலணிகளுக்கு குறிப்பாக ஷூக்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படும்.

-------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

10 comments:

சுல்தான் said...

ராமதாசும் வைகோவும் மிக அருமை.

ராஜ்குமார். said...

//முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.//
முற்றிலும் உண்மை

விஜயகாந்த் ஏன் அறிக்கை விடவில்லை..
அவர் மட்டும் என்ன பாவம் செய்தார்

எட்வின் said...

எல்லாவற்றையும் நானே எழுதி விட்டால்... அப்புறம் உங்களுக்கு பகிர ஏதுமிருக்காதே என தான் எழுதவில்லை. (அப்படி ஒருவர் கட்சி இருக்கிறதா?) :)

ஜீவா said...

தம்பி எட்வின் தங்களின் தேர்தல் பற்றிய கருத்தை படித்துவிட்டு சிரித்தேன், அதுபோல கருத்துகளின் பின்னூட்டமும் அருமையாக எழுதுகிறீர்கள், பாராட்டுகள்
அன்புடன்
ஜீவா

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

GERSHOM said...

You are dared to write it !!!!!

So funnuy !

செம்மலர் செல்வன் said...

சிரிப்பாத் தான் இருக்கு நம்ம தமிழ் நாட்டு நிலைமை....

தமிழ்நெஞ்சம் said...

vow. wonderful comedy

Anonymous said...

தமிழனின் தலை எழுத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி

paalaiyaththaan said...

தமிழனின் தலை எழுத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails