April 19, 2009

பள்ளிகளின் குரூர தண்டனைகளும்;பின்விளைவும்


டெல்லி அரசுப்பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 'ஷன்னு' என்ற மாணவி மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவிழந்த நிலையில் இரு நாட்களாக சிகிச்சையில் இருந்தவர் 17.04.09 வெள்ளிக்கிழமை அன்று பரிதாபமாக மரணமடைந்தது பலரும் அறிந்ததே.

மரணத்திற்கான காரணம் இதுவரை சரிவர கண்டறியப்படவில்லை என்றாலும் அச்சிறுமியின் வகுப்பில் உடன் பயின்ற மற்றுமொரு மாணவன் ஊடகங்களுக்கு அளித்த தகவல்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அவளின் வகுப்பு ஆசிரியை மூலம் தண்டனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள் என தெரிய வருகிறது.

தண்டனைக்கான காரணம்,வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதும்,கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதுமே.ஷன்னுவைத் தவிர மேலும் சில வீட்டுப்பாடம் செய்யாத மாணவியரை அந்த ஆசிரியை அடித்ததாகவும்;பெஞ்சில் தலையை வைத்து மோதியதாகவும்;பின்னர் வகுப்பிற்கு வெளியே இரண்டு மணி நேரம் சுடும் வெயிலில் நிற்க வைத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான்(சிறுவன் பொய் சொல்லியிருக்க மாட்டான் என நம்பலாம்!!)

மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் வருதலையோ;படிப்பில் ஆர்வமின்றி இருப்பதையோ;பள்ளிகளில் செய்யும் தவறுகளையோ ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வார்களே என்றால் அதற்கான தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.(சில வீடுகளில் இதை விட கொடிய தண்டனைகளையும் காண நேரிடுவது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது)

அதை விடுத்து இது போன்று குரூரமான தண்டனைக்கு மாணவர்களை குறிப்பாக சிறுவர்களை உட்படுத்துதல் மிகப்பெரிய அளவில் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
(உடல் ரீதியான பாதிப்பு ஒருபுறமிருந்தாலும்)

சில பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் பிற பள்ளிகளை விட அதிகம் வர வேண்டும்;கடந்த ஆண்டை விட குறைந்து விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் மாணவர்களுக்கு அதிக சுமைகளைக் கொடுப்பதும்,சுமைகளை சுமக்காத மாணவர்கள் மீது தண்டனைகள் சுமத்துவதும் இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது.

இந்த விஷயத்திலோ நிலைமையே வேறு,இத்தனைக்கும் ஷன்னு பயின்று வந்தது அரசுப்பள்ளி.ஷன்னுவிற்கு 11 வயது ஆகியிருக்கிறது, அப்படியென்றால் ஷன்னு ஐந்தாவது அல்லது ஆறாவது வகுப்பு படிக்க வேண்டிய வயது,எனவே ஷன்னு திறமையான மாணவியாக இருந்திருக்க வாய்ப்புகள் குறைவே;இந்த காரணத்தால் கூட அந்த ஆசிரியை மூர்க்கம் கொண்டிருக்கலாம்;இத்தனை வயதாகிறதே இன்னும் புத்தி வரவில்லையா என.

அன்பாக எடுத்துக் கூறியிருக்கலாம்... அடித்தால் மாணவர்கள் படிப்பார்கள் என்ற எழுதாத சட்டம் எல்லா மாணவர்களுக்கும் பொருந்தும் என சொல்ல முடியாது.சிலர் அடிக்கு பயந்து படிப்பதுண்டு;சிலர் பயந்து பள்ளிக்கே மட்டமிடுவதும் உண்டு.வேறு சில மாணவரோ என்ன தான் அடித்தாலும் படிக்காமலேயே வருவதுமுண்டு.

ஆசிரியர்களானாலும்,பெற்றோர்களானாலும் மாணவர்களை மனோரீதியாக அணுகுதல் வெகு அவசியம்,அல்லாமல் இப்படி மூர்க்கம் கொண்டு அடிப்பதும்,வெயிலில் நிறுத்துவதுமான குரூர அணுகுமுறைகள் பெரும்பாலும் அவஸ்தைகளிலும்,மன உளைச்சல்களிலும் தான் முடிய வாய்ப்புள்ளது.

(ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியான தண்டனைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உருவாக்கப்படும் வரை இவை போன்ற சோகங்களும் தொடரவே வாய்ப்புள்ளது)

9 comments:

ஹேமா said...

உங்கள் பதிவைப் பார்க்கவே கவலையா இருக்கு.நாங்கள் வேற்று நாடுகளில் இருப்பதால் எவ்வளவு வித்தியாசங்களைக் காண்கிறோம்.
இங்கானால் அந்த மாணவியே சட்ட உதவி கேட்டுப் போலீசாருக்குப் போன் பண்ணியிருப்பாள்.

Anonymous said...

//ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியான தண்டனைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உருவாக்கப்படும் வரை இவை போன்ற சோகங்களும் தொடரவே வாய்ப்புள்ளது.//

அப்படியே வழிமொழிகிறேன்.

துளசி கோபால் said...

அடப்பாவமே(-:

பள்ளிகளிலும் வீடுகளிலும் குழந்தைகளை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது?

சைல்ட் அப்யூஸ் கூடவே கூடாது. அது எந்தவகையில் ஆனாலுமே.

பிஸிகல், மெண்டல், எமோஷனல் அப்யூஸ், இப்படி நிறைய வகைகளில் கொடுமை நடக்குதுன்னு இங்கே சொல்றாங்க.

பெற்றோர்களே பிள்ளைகளை அடிச்சாலும் அவர்களுக்கு ஜெயில் தண்டனை உண்டு

எட்வின் said...

ஊடகங்கள் இது போன்ற செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை(IPL ல் அரைகுறை ஆடை அம்மணிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கூட பெரும்பாலான ஊடகங்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு அளிப்பதில்லை).பதிவர்களும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.வருந்துகிறேன்.
------------------------------------------------
கடந்த மாதத்தில் திருச்சியில் கூட புனித மரியா அன்னைஆரம்ப பள்ளியில் 6 வயது மாணவி ஆசிரியை ஒருவர் தலையில் அடித்ததால் காலமானார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவின் பள்ளிகளில் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்களை இங்கே படிக்கலாம்.http://timesofindia.indiatimes.com/India/Cant-book-teacher-for-murder-/articleshow/4415584.cms-------------------------------
NCPC-National Commission for the Protection of Child Rights என்ற ஒரு அமைப்பு சில வருடத்திற்கு முன்னர் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் வரையறையின் படி கீழ்காணும் தண்டனைகள் கூடாது As per guidelines laid down by the commission, corporal punishment includes slapping, rap on the knuckles, kneeling down for hours, running in the school grounds, hitting with a scale, pinching and being locked in a classroom for hours.

இவற்றிற்கு யாரும் செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

எட்வின் said...

வெயிலில் நிறுத்தியதால் ஷன்னு'விற்கு ஏற்கெனவே இருந்த வியாதி ஒன்று மேலும் பின்விளைவுகளை ஏற்படுத்திய காரணத்தால் தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது என இறுதி மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி said...

வழிமொழிகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தண்டனைகள் என்பதன் வரையறை தெரியவில்லை..


இருந்தாலும் எந்த தண்டனை கொடுத்தாலும் குழந்தைகளின் தாங்கும் சக்தியை உணருவது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவசியம்..


தண்டனைகளில் கொடுமையானது பேசாமல் இருப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான்

நூறுமுறை ஒரே கேள்விக்கு பதில் எழுதுமாறு சொல்வது கூட தண்டனைதான்.

வீட்டுப் பாடம் செய்து வா என்பது கூட தண்டனைதான் என்றால் என்ன செய்வது.

இரவு முழுவதும் கண் விழித்தால் கூட உடல்நலம் கெட வாய்ப்பிருக்கிறது.....

எட்வின் said...

SUREஷ் said...

//எந்த தண்டனை கொடுத்தாலும் குழந்தைகளின் தாங்கும் சக்தியை உணருவது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவசியம்.. //

சரியா சொல்லியிருக்கீங்க

//வீட்டுப் பாடம் செய்து வா என்பது கூட தண்டனைதான் என்றால் என்ன செய்வது.//

எனக்கு பதில் தெரியலையே :(

//இரவு முழுவதும் கண் விழித்தால் கூட உடல்நலம் கெட வாய்ப்பிருக்கிறது.....
//

சரிதான் மருத்துவர் அய்யா

சாஷீ said...

சங்கடப்பட வேண்டிய விஷயம் ,,,அவ்வபோது ஆசிரியர் பெருமக்களுக்கும் ,,கவுன்சிலிங் ,கொடுப்பது அவசியம் ,,,{ இப்பவும் நம்ம ஊர் வாத்தியார்கள் வீட்டம்மாகளிடம் சண்டை போட்டு hang over ல நம்ம பசங்கள பின்னுறாங்க }

Post a Comment

Related Posts with Thumbnails