April 27, 2009

ஈழத் தமிழர் நலனுக்கேனும் ஒன்றுபடுங்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறார் என ஊடகங்கள் வழி கேள்விப்பட்டதும் சற்றே ஆச்சரியமாகத் தானிருந்தது.இழக்கப் போகும் வாக்குகளை மீட்பதற்காக அவர் எடுக்கும் அரசியல் ஆதாய முயற்சியா என்ற கோணத்தில் பார்க்கவும் செய்தது உண்ணாவிரத செய்தி.

ஆனாலும் நெடுங்காலமாக ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்ற கோணத்தில் பார்ப்பதானால் முதல்வரின் நிலைப்பாடு சரியெனவேப் படுகிறது.அதோடு உடல்நிலை ஒத்துழைக்காத 86 வயதிலும் அவர் எடுத்த இந்த முடிவு உறுதியானதே.

கருணாநிதி நடத்தும் அரசியல் நாடகம் என பலர் குறிப்பாக எதிர்க்கட்சிகள் கருதக்கூடும்.ஜெயலலிதா அம்மையார் உண்ணாவிரதம் இருந்த போதும் இது அவரது அரசியல் நாடகம்,வாக்குகளை பெற அவர் முன் வைக்கும் உக்தி என்றும் பிற கட்சிகள் அவரை சாடின.

இலங்கை தமிழர் நலனிற்காக இரு பெரும் திராவிட கட்சிகளோ இல்லை பிற கட்சிகளோ எடுக்கும் எந்த முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டியவையும்,வரவேற்கப் பட வேண்டியவைகளுமாகும்.ஓட்டிற்கான நாடகமாகவே தோன்றியாலும் இலங்கை தமிழரின் நலனுக்காக தானே குரல் கொடுக்கிறார்கள் என்ற முறையில் அதனை பிற கட்சிகளும் ஆதரித்திருக்க(ஆதரிக்க) வேண்டும்.

தமிழர் நலனுக்காக தமிழர் பிரிவுபட்டு நிற்பதும் இனியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதும் இலங்கை தமிழர் விஷயத்தில் எந்த வகையிலும் நன்மையை கொண்டு வரப்போவதில்லை.

8 comments:

maduraibabaraj said...

ராஜபக்சே ! சே! இழுக்கு!

மனிதனைத் தின்னும் கழுகுகள் கூட
மனிதனேயப் பண்பின் இரக்கத்தைக் காட்டும்!
மனிதமே இல்லாத ராஜபக்சே அந்தப்
புனிதமண் ஏந்தும் இழுக்கு.

மதுரை பாபாராஜ்

ராஜ நடராஜன் said...

//தமிழர் நலனுக்காக தமிழர் பிரிவுபட்டு நிற்பதும் இனியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதும் இலங்கை தமிழர் விஷயத்தில் எந்த வகையிலும் நன்மையை கொண்டு வரப்போவதில்லை.//

இது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அரசியல் பூனைக்கு மணி கட்டுவது யார்?

ttpian said...

அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

கிறிச்சான் said...

போர் நிறுத்தம் சந்தோசத்தை தந்திருக்கிறது !

எட்வின் said...

//ராஜபக்சே ! சே! இழுக்கு!

மனிதனைத் தின்னும் கழுகுகள் கூட
மனிதனேயப் பண்பின் இரக்கத்தைக் காட்டும்!
மனிதமே இல்லாத ராஜபக்சே அந்தப்
புனிதமண் ஏந்தும் இழுக்கு.

மதுரை பாபாராஜ்//

மதி கெட்டுத் திரியும்
மன நோயாளியிடம்
மனிதத்தன்மை எங்கே இருக்கப் போகிறது?

எட்வின் said...

ராஜ நடராஜன் said...
//இது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அரசியல் பூனைக்கு மணி கட்டுவது யார்?//

நம்மவர்களே பிரிவுபட்டு நின்றால் என்ன செய்வது? யார் கட்டுவதோ மணியை? எனக்கும் தெரியவில்லை !!

எட்வின் said...

ttpian said...

//அவசரம்.....அவசியம்.....//

நன்மையானது நடக்கும் என நம்புவோம். வேறு என்ன செய்வதற்கு ?

எட்வின் said...

// GERSHOM said...
போர் நிறுத்தம் சந்தோசத்தை தந்திருக்கிறது !//

முழுமையான போர் நிறுத்தம் செய்யப்படவில்லை நண்பரே...

Post a Comment

Related Posts with Thumbnails