April 04, 2009

பலசரக்கு-இந்த வாரம் நிகழ்ந்ததும்,புரிந்ததும்

மார்ச் 30 அன்று ஐவரி கோஸ்ட் மற்றும் மலாவி இடையே நடக்கவிருந்த 2010ன் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியை காண முண்டியடித்த ரசிகர்கள் 22 பேர் பலியானார்கள்.

போட்டியை டிக்கெட் இன்றி காணலாம் என்ற அறிவிப்பினால் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளலால் நிகழ்ந்ததே இந்த சம்பவம்.எனினும் ஆட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை.

ஆப்பிரிக்கர்களின் கால்பந்து மோகம் இப்படியிருக்கிறது.

-----------------------------------மலாவியிலிருந்து மீண்டும் ஒரு குழந்தையை(மெர்சி ஜேம்ஸ்) தத்து எடுக்கவிருந்த பாப் பாடகி மடோனாவிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம்,தத்து எடுக்கிறவர்கள் அவர்களது நாட்டில் குறைந்தது 18 மாதங்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென்று காரணம் காட்டி03.04.009 அன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

வாழ்வு கொடுக்கிறோம் என்கிறவர்களையும் இப்படியா துரத்துவது.

----------------------------------------------

இங்கிலாந்தில் ஜேட் கூடியின் அடக்க ஆராதனை சனிக்கிழமை 4.4.9 அன்று நடந்தது.ஜேட்டின் மரணம் உலகம் முழுவதும் கர்ப்பப்பை புற்று நோயைக் குறித்த விழிப்புணர்வை பல பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஜேடின் மகன்கள் பாபி,ஃப்ரெடி இருவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து தாயாருக்கு Bottle ஒன்றில் நெஞ்சம் நெகிழும் செய்தியை அனுப்பியிருக்கின்றனர்.ஊடகங்களின் பார்வையிலிருந்து சிறுவர்களை விலக்கவே ஆஸ்திரேலியாவில் அவர்களது தந்தையின் கவனிப்பில் விடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

-------------------

ஃபார்முலா ஒன் சீசனின் முதல் ஆஸ்திரேலிய பந்தயத்தில் மூன்றாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்ட லூயிஸ் ஹாமில்டனின் புள்ளிகள் அனைத்தும் 2.4.09 அன்று பறிக்கப்பட்டன. பந்தயத்தில் யானோ ட்ரூலி என்பவர் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னை முந்திச் சென்றதாக சொன்ன தவறான தகவலினிமித்தம் இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


எனது வாழ்க்கையின் மிக மோசமான தினம் இது எனவும்,அவரது மெக்லாரன் அணியிலிருந்து கிடைத்த தவறான தகவலால் நானும் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று எனவும் மனம் நொந்திருக்கிறார் ஹாமில்டன்.

-----------------------

வருண் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டிருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.இந்த விஷயத்தில் மேனகாவும் மாயாவும் குடுமிப்புடி சண்டை போடாத குறை தான்.
-------------------

சஞ்சய் தத் தேர்தலில் நிற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது சரியான முடிவாகவே படுகிறது.ஆனால் டைட்லர் அவர்கள் 1984 கலவர வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்துகிறது.

--------------------

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் மற்றும் T20 போட்டிகளை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளில் 3-2 என்று ஆறுதல் வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் ஃப்ளின்டாப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

---------------------

03.04.09அமெரிக்கா,மயாமியில் நடந்து வரும் சோனி எரிக்சன் ஓபன் அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோக்கோவிக் உடனான போட்டியில் தோல்வியுறும் தருவாயிலிருந்த ரோஜர் ஃபெடரர் கோபத்தில் டென்னிஸ் மட்டையை தரையில் அடித்தே உடைத்து விட்டார். டென்னிஸ் ஆட்டங்களில் இது ஒன்றும் புதிதல்ல என்றாலும் ஃபெடரர் இப்படி நடந்து கொள்வது அபூர்வம்.-----------------

பாகிஸ்தானில் தினமும் தொடரும் குண்டு வெடிப்புகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.அதோடு பாக்கின் பாதுகாப்பு முறைகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளன.

இதனிடையில் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் செய்திகள் தேர்தல் சமயத்தில் என்னென்ன இழுத்து வைக்கப் போகிறதோ!!
----------------

அரபியில் அரைகுறை ஆதலால் அரபி படிக்கலாமென அரபி நண்பர் ஒருவர் வாங்கி தந்த English-Arabic புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.புத்தகத்தின் பின்புறம்! நண்பர் எனது பெயரை எழுதியிருந்தார்.ஏனாக இருக்கும் என அப்போது புரியவில்லை.

சரி இருக்கட்டும் என படிக்கத் தொடங்கினேன்,ஆரம்பத்திலேயே வழக்கமான மொழி புத்தகங்களில் இருக்கும் எழுத்து வரிசையும்,எண் வரிசையும் இன்றி உரையாடல் இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.கொஞ்சம் கடினமாகவே இருந்தது.இரு பக்கங்கள் முடித்ததும் பக்க எண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆயிற்று;186 என (அரபியில்) இருந்தது.(அரபியிலிருந்த அந்த நம்பரை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதே பெரிய விஷயம்)

அப்புறம் தான் புரிந்தது நான் கடைசிப் பக்கத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று.அரபி வழக்கமாக வலமிருந்து இடமாக அல்லவா படிப்பார்கள் என அப்போது தான் நினைவு வந்தது.இதை அறியாமல் நான் அரபி நண்பர் எனது பெயரை பின்புறம் எழுதியிருக்கிறார் என்றெல்லாம் தவறாக நினைக்க வேண்டியதாயிற்று. சு நா பா நா... யாரும் பாக்கலடா அப்பிடின்னு(வடிவேலு பாணியில்)நினைத்துக் கொண்டு வலமிருந்து இடமாக படிக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails