April 20, 2009

ICL ற்கு ICC ன் அங்கீகாரம் மறுப்பு


ஒரு புறம் IPL இந்தியாவின் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்க மறுபுறம் ICL-Indian Cricket League மேலும் விவகாரத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

18.04.2009 சனிக்கிழமை ஐ.பி.எல் துவங்கிய அதே நாள் ஐ.சி.எல் ற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.என்றாலும் இந்த முடிவை எதிர்த்து ஐ.சி.எல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடும் என தெரிகிறது.

உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்திய அணித்தலைவரான கபில்தேவ் பல நாடுகளின் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைக் கொண்டு வடிவமைத்த ஐ.சி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் தான் ஐ.பி.எல் துவங்குவதற்கான காரணம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து இன்றும் நிலவுகிறது
.
ஆனால் லலித் மோடி, ICL துவங்குவதற்கு முன்னரே IPL குறித்து கனவு கண்டதாக கூறுகிறார். (உண்மை அவருக்கே வெளிச்சம்)

ஐ.சி.எல் ல் நியூசிலாந்தின் க்ரிஸ் கெய்ன்ஸ்,ஷேன் பான்ட், பாகிஸ்தானின் இன்சமாம்,ஆஸியின் டேமியன் மார்ட்டின், இயன் ஹார்வி போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடும் படியானது

ஏற்கெனவே ஐ.சி.எல் ற்காக ஆடி வரும் ஆட்டக்காரர்களை பி.சி.சி.ஐ தேசிய அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது.இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.

மாறாக நியூசிலாந்து,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை போன்ற கேவலமான செயலை செய்வதில்லை.அதோடு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிக வன்மையாக கண்டிக்கவும் செய்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள இளம் வீரர்களைக் கண்டெடுப்பதற்காக IPL தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது உள்ள IPL ன் அணிகளைப் பார்த்தால் குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து இடம் பெற்றிருப்பது ஒன்று அல்லது இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் மட்டுமே.

உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைச் சொல்லலாம்.பத்ரிநாத்,பாலாஜி மட்டுமே பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்கள்.மும்பை அணிக்கு எதிராக பத்ரியும்,அஷ்வினும் மட்டுமே ஆடினார்கள். இவர்களில் அஷ்வின் மட்டுமே புதியவர்

மாறாக ஐ.சி.எல் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் கடந்த சீசனில் 8தமிழக ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.இதில் பெரும்பாலானோர் புதியவர்களே.ஐ.சி.எல் ன் முதல் சீசனின் சாம்பியனும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தான்.

IPL மூலம் புதிய இளம் வீரர்களை கண்டெடுக்கிறோம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே உள்ளது.பணத்தை மட்டுமே குறி வைத்து அதோடு கவர்ச்சியையும்,அரைகுறை ஆடை அணிந்த மங்கைகளையும் மட்டுமே ஊக்குவிக்கிறது ஐ.பி.எல்.

இளம் ஆட்டக்காரர்களை ஊக்குவிக்கும் ICL ற்கு இனி நீதிமன்றத்திலாவது நீதி கிடைக்குமா என பார்க்கலாம்.ஐ.பி.எல்லை விட சிறந்த நோக்கம் கொண்டது ஐ.சி.எல் என்கிறேன் நான்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

(20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து 20-20 ஆட்டங்களிலிருந்து விலகியிருந்த லிட்டில் மாஸ்டர் சச்சினும் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணமோ?)

4 comments:

Senthil said...

good analysis

Arun said...

///இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.///

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்களே..ம்ம் ம்ம்..

எட்வின் said...

நன்றி திரு.செந்தில்
--------------------------------------
Arun said...

///இந்திய கிரிக்கெட் வாரியத்தை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஐ.சி.எல் ஆட்டக்காரர்களை புறக்கணித்து வருகிறது.///

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்களே..ம்ம் ம்ம்..
//

:) நன்றி திரு.அருண்.

எட்வின் said...

நண்பர் செம்மலர் அவர்களின் கருத்து இங்கே
http://semmalarselvan.blogspot.com/---------------------------------
நல்ல பதிவு நண்பரே.. IPL கிரிக்கெட்டை அழிக்கும் ஒரு முயற்சி தான் என எண்ணுகிறேன்.. ரஞ்சி போட்டிகள் அழிந்து போகலாம்..

மக்களிடம் இருந்து பணம் பறிக்க இது ஒரு குறுகிய வழி தான் .... தேர்தல் முக்கியம் இல்லை,மக்களின் பாதுகாப்பு கூட முக்கியம் இல்லை,எங்கள் போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தால் போதும் என கேட்டார்கள் .. தோனியும்,ஹர்பஜன் சிங் இருவரும் பத்மஸ்ரீ விருது வாங்குவதை புறக்கணித்து விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள் ..

சச்சின்,மக்ரத் ,வார்னே ,கும்ப்ளே ஆடுவதற்கு பணம் தான் முக்கிய காரணம் .. ஒரு விசித்ரம் பாருங்கள், முதல் 4,5 போட்டிகளில் மூத்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. இந்த IPL போட்டிகளுக்காக வீரர்கள் தங்களது தேசிய அணியில் இருந்து வெளியே வர கூட தயாராக இருக்கிறார்கள்.. ஷாருக்கான் , புக்கனன் கூட சேர்ந்துகிட்டு 4 கேப்டன் போடுகின்றார்.. கவாஸ்கரை கிண்டல் பண்ணிட்டு அப்புறம் மன்னிப்பு கேக்கிறார்..போன தடவை மல்லையா டிராவிட் ஒண்ணுக்கும் ஆக மாட்டார்னு சொன்னார்.. இதெல்லாம் ஏன்?நாட்டுக்காக ஆடும் போது ஒண்ணும் பிரச்சனை இல்லை, இப்போ முதலாளிக காசு உள்ள இருக்குல.. ஷாருகான்,ப்ரீத்தி ஜிந்தா
ஷில்பா ஷெட்டி ,அம்பானி , விஜய மல்லையா பணம் கட்டி பணம் சம்பாரிப்பது தப்பு இல்ல, கபில் தேவ் பண்ணினா தப்பா? என்ன பண்றது< நம்ம நாட்டுல அரசியல்வாதி,திரை துறை,கிரிக்கெட்,அண்டர் வேர்ல்ட் மாபியா எல்லாம் ஒண்ணா இருக்காங்க..
கபில் தேவ்க்கு கிரிக்கெட் தெரியும். அதான் விட மாட்டேன்னு சொல்றாங்க.. லலித் மோடி,பவார் , அருண் ஜெட்லி, இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாஸ் நடத்துற கிரிக்கெட் இது.. சினிமா படம் மாதிரி பாருங்க, பெட் கட்டுங்க.. அவ்வளவு தான்..

Post a Comment

Related Posts with Thumbnails