October 19, 2009

தமிழன்-மலையாளி; தொடரும் பிரிவினைகள்

இலங்கை விவகாரம், திரைப்பட தேர்வுக்குழுவில் பாகுபாடு, முல்லைப்பெரியார் அணைப் பிரச்சினை என பல விஷயங்களில் தமிழனின் தார்மீக உரிமைகளில் கை வைக்கும் கேரளத்தவர் பெரும்பாலோனோர் தமிழனை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை போலும்.(அப்படி இல்லை என்று தான் நானும் நினைத்திருந்தேன்)

பதிவர் அப்துல்லா தனது முந்தைய பதிவு ஒன்றில் இலங்கை விவகாரத்தில் தமிழனின் கூக்குரலை மௌனமாக்கிய இந்திய அரசைச் சார்ந்த மலையாளிகளை தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி! என்ற பதிவில் பட்டியலிட்டிருந்தார்.

அதே போன்று இரு மாதங்களுக்கு முன்னர் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தேசிய விருது தேர்வுக்குழுவில் மலையாளிகளின் ஆதிக்கத்தையும் அதனால் தமிழ் திரைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் போவதையும் சாடியிருந்தார்.

பல ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு அணை குறித்த சலசலப்புக்கு குறைவேயில்லை.

பொதுவாக எவராயிருந்தாலும் அவரை இன்ன இன்ன இடத்தைச் சார்ந்தவர் என பிரித்துப்பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை என்றாலும் கடந்த வாரம் குவைத்திற்கு பயணம் செய்யும் முன் கொச்சின் விமானதளத்தில் Emmigration அலுவலர் ஒருவர் கேட்ட கேள்விகள் சற்றே சினம் கொள்ளச் செய்தது.

தமிழ்நாட்டு வழியாக செல்ல வேண்டியது தானே, சென்னையில் விமான தளம் இருக்கும் போது ஏன் கேரளா வழி பயணம் செய்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். (கொச்சின் வழியாகத் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு) அதோடு நில்லாமல் எனது பணியைக் குறித்து மேலும் பல கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டார்.

கடவுச்சீட்டு தமிழனக்குத் தனி, மலையாளிக்கு தனி என்று இந்திய அரசு தருவதில்லை; இந்தியன் என்ற முறையில் தான் தருகிறார்கள் என கேட்டு விடலாமா என்று கூட தோன்றியது. அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கேட்கத் துணியவில்லை.

எல்லைகளையும், மொழிகளையும் மனதில் வைத்து பின்னப்படும் பிரிவினை சக்திகள் இருக்கும் வரை மனித ஜென்மம் மனிதனை மனிதனாக பார்க்காது என்றே அப்போது தோன்றியது.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

//எல்லைகளையும், மொழிகளையும் மனதில் வைத்து பின்னப்படும் பிரிவினை சக்திகள் இருக்கும் வரை மனித ஜென்மம் மனிதனை மனிதனாக பார்க்காது என்றே அப்போது தோன்றியது.//

உண்மை....

கிறிச்சான் said...

இது மாதிரி பல அனுபவம் எனக்கும் இருக்கு .ஒன்டரை வருடம் கட்டாய பணி மற்றதில் கேரளாவில் இருந்த போதும்,மும்பையிலும்,இப்போது வேலை செய்கிற வளைகுடா நாடுகளிலும்...மலையாளிகள்'ங்கற எண்ணம் அவர்களுக்கு ஒரு உயர்வு மனப்பனமையா இருக்கு (தாழ்வு மனப்பான்மையோட பிரதிபலிப்பு)...அதெல்லாம் மலையாள சினிமா மற்றும் பத்திரிக்கை அவங்க மனசில விதைச்சிடிச்சு...இனி ஒன்ணும் செய்ய முடியாது...

ahaanandham said...

2 ஆண்டுகளுக்கு முன் என்னிடமும் இதே கேள்வி ,இதே போன்ற சூழ் நிலையில் கொச்சினில் வைத்து கேட்க ப்பட்டது ,,,நான் பயந்தாலும் ,,எதற்கு என்று கேட்டேன் ,,அதுக்கு அவன்,.,, மன்னிக்கவும் அவர் சொன்னார் ,,,"நிங்கள்ட நாட்டில் புலிகள் நடமாட்டம் உண்டல்லோ " ன்னு ,எங்க போய் சொல்ல..இவுனுக இப்பிடித்தான் திருந்தமாட்டானுக ,,நியாயமான கோபம் .நியாயமான பதிவு ,,

Ashok D said...

மிகவும் சரி

Anonymous said...

அந்த தே.பசங்களால கோவையில் படும் அல்லல் கொஞ்சமில்லை. பட்டிகளை அடிப்பது யார்?

நம்ம ஆட்களுக்கு அறிவில்லைங்க... ஓணம் (பேரப் பாருங்க...முன்னால கோ சேருங்க) கொண்டாட ஒட்டு பொறுக்கிங்க கோவை, சென்னை, குமரியில் லீவுன்னு சொன்னானுங்க... பால்காடுல பொங்கலுக்கு லீவ் தாங்க என்று கேட்டால் முடியாது என்று சொல்லிட்டனுங்க அந்த கஞ்சியானுக....இவனுகளும் மூடிகிட்டானுக...ஆனா கோவணத்துக்கு லீவு விடுறானுக

இப்படி இருந்தா தமிழா வெளங்குவானா.... ஆணை கட்ட சர்வே பண்ண ஆரம்பிச்சதும்...பொள்ளாச்சி, ஊட்டி, குமரி எல்லா பக்கமும் ஒரு வாரம் பாலு, காய், கசாப்பு எதுவும் போக விட்டிருக்கக் கூடாது...
சோத்துக்கு சு..... விட்டிருன்தொம்னா காப்பாத்துங்க அப்படின்னு கெஞ்சி இருப்பானுக அந்த கஞ்சியானுக

அதுக்கெல்லாம் அண்ணன் பிரபாகரன் வழிதான் சரி...இந்த தா.....லிகளை அடக்க.

RAGUNATHAN said...

நம்மதான் ஒருத்தன் மேல போன புடிச்சு கீழ இறகிடுவோமே.. அப்படியே உயர்ந்தாலும் அவன் என்ன சாதி, என்ன பிரிவு என்று பார்த்து ஒன்னு சேர விட மாடோமே...மொதல்ல அதை மாத்தனும்...

ஒற்றுமை இல்லை இல்லை என்று சொல்லிகிடே இருக்காமல் பாசிடிவாக வேறு எதாவது சொல்லி இவர்களை ஒற்றுமை படுத்த வேண்டும்.

Post a Comment

Related Posts with Thumbnails