November 08, 2009

பிரிவினைகளைத் தூண்டும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவம் என்பது இன்றைய காலகட்டத்தில் அன்பை பறைசாற்றுகிறதோ இல்லையோ, வெறுப்பையும், பிரிவினைகளையும், விரோதங்களையும் வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கிறிஸ்தவத்தை வியாபாரமாக்கியது தான் இந்த நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் செய்த அரும்பெரும் சாதனைகளில் முதலிடம் பிடிப்பது. பணக்கார பேய்களுக்கு ராஜபோக மரியாதை அளிக்கும் கிறிஸ்தவ சபைகள் ஏழை மக்களை ஏளனமாக பார்ப்பதும் உண்மையாகி வருகிறது.

இவைகள் போதாதென்று கல்வி நிறுவனங்களை நிறுவி காசு கறக்கும் மகான்களும் உண்டு; மட்டுமல்லாமல் அவர்களின் நிறுவனங்களில் பிற கிறிஸ்தவ பிரிவினரைச் சேர்த்துக் கொள்ளாமல் பாகுபாடு பார்ப்பதும் சகஜமாகி விட்டது.

இவை அனைத்திற்கும் அச்சாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பது கிறிஸ்தவத்திற்குள்ளேயே காணப்படும் எண்ணிக்கையற்ற பிரிவுகள் தான் என்பது கிறிஸ்தவர்கள் வெட்கப்படவும், வருத்தப்படவும் வேண்டிய விஷயம். சாதிப் பாகுபாடு, இன வெறியைப் போன்றே இதுவும் மகா கேவலமான செயலாகும்.

தற்செயலாக கிறிஸ்தவன் என சொல்லித் திரிகிற எவருடனாவது பேச்சு கொடுத்தால் நீங்கள் என்ன கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்வியோடு தான் ஆரம்பிப்பார்கள் ஆரம்ப அறிமுகத்திலேயே!

கிறிஸ்தவம், ஒரு கருத்தைத் தான் போதிக்கிறது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள், வகுப்புகள், பிரிவினைகள், பாகுபாடுகள் என்ற உண்மை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஒரு பிரிவைச் சார்ந்த ஆலயத்திற்கு போய்விட்டு வந்தால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் முறைப்பதும் இவர்கள் ஆலயத்திற்கு போனால் அவர்கள் முறைப்பதும் இன்னும் நகைச்சுவையான செயல்.

கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே இத்தனை பிரிவினைகள் இருக்க இவர்கள் மற்றவர்களுக்கு நற்செய்தி சொல்வதனால் என்ன பயன்?

மனிதனை மனிதனாக பார்க்கும் மனிதாபிமானம் இல்லாதவரை, இது போன்ற பிரிவினைகள் இருக்கும் வரை மண்ணில் மனிதனுக்கும், மனித உணர்வுகளுக்கும் மரியாதை இல்லை.

7 comments:

செந்தழல் ரவி said...

right said

இளைய கரிகாலன் said...

நீங்கள் சொல்வது மெத்த சரியென்றாலும், அது கிறிஸ்துவத்திலே மட்டிலும் இருக்கின்றது என்று எண்ணவேண்டாம்
முஸ்லீம் மதத்தவரிடம் அவர்கள் ஒரே குரானை பின்பற்றினாலும் குர்ஷித், ஷன்னி, ஷியா என்று பல பிரிவினை இருப்பது மட்டுமன்றீ அதன் பேரில் வன்முறைகளும் நடப்பதற்கு இதுவே காரணமாகிவிடுகிறது. இந்து மதத்தைப் பத்தி பேசவே வேண்டாம்.
இப்படி இருக்கையில் கிறித்துவர்களை மட்டுமே குறை சொல்வதில் பயன் என்ன?

அன்புடன்

எட்வின் said...

அன்பு இளைய கரிகாலன் அவர்கள் அறிவது... எனக்கு தெரிந்ததைத் தானே நான் எழுத முடியும்.

GERSHOM said...

வாஸ்த்தவம் தான் !!!

மத விசுவாசங்கள் இது மாதிரி பிரிவினைகள் மூலம் குறைஞ்சுகிட்டே தான் இருக்கு!

ahaanandham said...

////////////கிறிஸ்தவத்திற்கு உள்ளேயே இத்தனை பிரிவினைகள் இருக்க இவர்கள் மற்றவர்களுக்கு நற்செய்தி சொல்வதனால் என்ன பயன்?
////// பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி,,

Anonymous said...

எல்லாம் போலிகள் தானே தவிர வேறென்ன! இளைய கரிகாலன் பின்னூட்டத்தில் எல்லா மதமும் அப்படி தானே இருக்கிறது என்கிறார். சரியான கருத்து! அது மட்டுமா நம் தமிழ் சமுகத்தில், அரசியலில்,சாதியில், குடும்பங்களில், எல்லா நிலைப்பாடுகளிலும் இருக்கும் போது மதத்தில் இருப்பதில் வியப்பு என்ன இருக்க முடியும். இந்த நாதாரி நாய்கள் தானே அங்கும் கோலோச்சுகிறது அங்கெ வேறு எதை பார்க்க முடியும். மாணவன் மீதும அவனது வளர்ச்சியிலும் பொறுப்புணர்வு இல்லாத ஆசிரியர்கள் போல... குழந்தைலை பற்றி சிந்திக்காத பெற்றோரைப் போல ...தான் இவர்களும். இன்றைய நிலையில் மதத்திலும், ஒட்டு பொருக்கி அரசியலிலும் இதைதவிர வேறு எதையும் எதிர் பார்த்தால் அது எதிர் பார்ப்பவர்களின் தவறே தவிர வேறு என்னவாக இருக்கமுடியும். அதே வேளை தங்களின் ஆதங்கம் நியாய மனது என்பத மறுப்பதற்கில்லை. சமுகத்தை பீடித்திருக்கும் இந்த மத சனியன்கள் தொலைய வேண்டும். விடுங்கள் எட்வின்.....எல்லாம் அந்த கர்த்தர் பார்த்துக் கொ(ள்)ல்வார்.....

Josh said...

dont look at the christians..you'll fall then!!Look at God and be right..it' waste blaming everyone..because every man has been in sin!!!!!

Post a Comment

Related Posts with Thumbnails