November 29, 2009

தங்லீஷ் பாடல்களும்-பிறைசூடன்,எஸ்.பி.பி யின் கருத்துக்களும்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "வானம் பாடி" என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் கந்தசாமி திரைப்படத்திலிருந்து அலேக்ரா என்ற பாடலை ஒரு பெண் போட்டியாளர் பாடியிருந்தார்.

பாடலை அறிவிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடல்: அலேக்ரா, படம்:கந்தசாமி, எழுதியவர்:கவிஞ்ர்.விவேகா என அருமையாகத் தான் ஆரம்பித்தார்; ஆனால் பாடல் பாடப்படுகையில் பாடலின் மீது அத்தனை ஈடுபாடு காண்பிக்கவில்லை.

அது, பாடல் சுருதியில்லாமல் பாடப்பட்டதாலா இல்லை பாடல் வரிகள் பாடும் நிலா பாலுவிற்கு பிடிக்காததாலா என தெரியவில்லை.

எனினும் போட்டியாளர் பாடிய விதத்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே பாடலைக்குறித்தும் சில வரிகள் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாலுவிற்கு.... என்னவெல்லாமோ பாடல் எழுதுகிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என நிறுத்திக் கொண்டார்.

கவிஞர். பிறைசூடன் விமர்சிக்கையில் இந்திய பொண்ணுக்கு இத்தாலிய கண் ஒத்து வருமா என்றார். இணையத்தில் இருந்து என்னவெல்லாமோ வார்த்தைகளைக் கோர்த்து தங்கிலீஸ் பாடல்களை எழுதுகிறார்கள். வெகு நாட்கள் இவை நிலைக்காது என்றார்.

இது மாதிரியான தமிழையே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போனால் அது தவறு என்றார். மேலும், இறைவனுக்கும், நான் நேசிக்கும் தமிழுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றைச் சொல்கிறேனேயன்றி பாடல் எழுதிய கவிஞரைக் குறை கூறுவதற்காக அல்ல எனவும் கூறினார்.

முன்னொரு வார வானம் பாடி நிகழ்ச்சியில் வில்லு திரைப்படத்தின் பாடல் குறித்து... 'டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை' என்றெல்லாம் பாடல் எழுதிகிறார்கள் இவற்றையும் இன்றைய சின்னஞ்சிறுசுகள் (புரியாமலேயே) முணங்கிக் கொண்டிருக்கின்றன, இவை எங்கே போய் முடியுமோ என அங்கலாய்த்தார்.

இவை... நிச்சயமாகவே வருங்கால சந்ததிக்கு நாம் விட்டுப் போகிற நல்ல சங்கதிகள் இல்லை தான்.


வானம்பாடி நிகழ்ச்சியின் காணொளி கீழே... சுட்டியை அளித்த பதிவர் சாஷீக்கு நன்றி


@ Yahoo! Video

3 comments:

Tech Shankar said...

இவருமே இப்படிப்பட்ட தங்க்லீஷ் பாடல்களை பாடாமலா இருந்திருப்பார்?

அது குறித்த தகவல்களையும் தாருங்களேன். நண்பரே

எட்வின் said...

@ Tamilnenjam... பதிவிடும் முன்னரே தேடிப்பார்த்தேன் இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். பிற பதிவர்கள் ஏதும் கூறுகிறார்களா என பார்ப்போம்.

வானம்பாடி நிகழ்ச்சியின் காணொளியும் கிடைக்கவில்லை. கிடைத்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

Azhagan said...

The film industry of today has no scruples, no moral values. With the advent of TV, the effect of these degenerating songs and movies affect each and every individual in the society to a greater extent. Our people also dont care about these things, otherwise will they allow their children hardly 10year olds to sing and dance to these song sequences?.

Post a Comment

Related Posts with Thumbnails