November 30, 2009

மன அழுத்தம் தரும் நாகரீக வாழ்க்கை'கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன், அன்று தூக்கம் வந்ததே அது அந்த காலமே' 'மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கமில்லையே அது இந்த காலமே' என்ற கவிஞ்ர் வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் இன்று எத்தனை பேரின் வாழ்க்கையில் நிஜமாயிருக்கிறது என கேட்டால் பலர் ஆம் எனவே சொல்வார்கள்.

மனித வாழ்க்கை இன்று எத்தனை மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது என்பதற்கு பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும், பொறாமைகளுமே சாட்சி.

இரு வாரங்களுக்கு முன்னர் வேலை நிரந்தரமாகாத காரணத்தால் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேரிட்டது.

இரு தினங்கள் முன்பு கூட திருமணமான அன்று இரவே முதலிரவு சரியாக அமையாத காரணத்தால் மாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தியை காண நேரிட்டது.

சிறிய விஷயங்களில் கூட மன நிறைவு அடையவில்லை என்றாலோ, தோல்வியடைந்து விட்டாலோ மீண்டும் அதனை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தற்கொலை, பழிவாங்குதல் என திசைமாறுவது சமூகத்தில் இன்று பெருகி வருவதும் நல்லதல்லவே.

பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பணம் பெருக தனி மனித தேவைகளும், குடும்பத் தேவைகளும் இன்றைய இயந்திர உலகத்தில் பெருகவே செய்கின்றன.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ஒரு சராசரி மனிதனுக்குத் தான் இன்று எத்தனை commitments,எத்தனை deadlines.

நகரத்தில் பணி செய்பவர்களுக்கு ... சரியான சமயத்தில் பேருந்தையோ, மெட்ரோ ரயிலையோ பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்,போக்குவரத்து நெரிசல் என இன்னும் மேலதிக நெருக்கடிகள்.

சம்பள நாளிலும் அதற்கு அடுத்த சில நாட்களிலும் மட்டுமே நண்பர்களானாலும் உறவினர்களானாலும் சிரித்துப் பேசுவார்கள் என எத்தனை பேர் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கார்கள் என்பதும் உண்மையே.

அயல் நாட்டில் இருப்பவர்களை கேட்டால்... மாதத்தின் முதல் வாரம் மட்டும் (பணம் கேட்டு)வரும் தொலைபேசி அழைப்புகள் எண்ணற்றவையாக இருக்கும் என சொல்வார்கள்

இன்று மனிதம் என்னும் புனிதம் மறைந்து பணம் பெரிதாகிப் போனது மனிதத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என தெரியவில்லை.

உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா? சந்தேகமாயிருக்கிறது! என இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், அவரின் வரிகளில் தான் எத்தனை உண்மை !

12 comments:

TamilNenjam said...

Classic Post.
என்றைக்கும் பொருந்தக் கூடிய எவர்க்ரீன் போஸ்ட்.
கலக்கிட்டீங்க எட்வின்.

Meenthulliyaan said...

உண்மை தான் .. இதற்கு எல்லாம் காரணம் நம் எண்ணம்தான் .
தோல்வியை தாங்கி கொள்ளதா நம் எண்ணம் தான்
தோல்விக்கு பயந்து நம்மை நாமே நொந்து கொள்கிறோம்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

TamilNenjam said...

திருமணமான அன்றே சரியாக வந்தால் அதன்பெயர் முதலிரவா?
எதில் அரியர்ஸ் வைக்கிறோமோ இல்லையோ இதில் அரியர்ஸ் வைத்துப் பாஸ் செய்தவர்கள் அதிகமே!

சில நாட்கள் விட்டுப்பிடித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள் அய்யா (:-
வாழ்வு இனிக்கும்.

உயிர் முக்கியம் இல்லையா. திருமணம் ஆன அன்றே முதலிரவு வைக்கணும்னு எந்த நாதாரி ( மன்னிக்கவும் ) சொன்னான் (:-
அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள். புரிஞ்சுக்கோங்க.

புரிஞ்சுக்கோங்க மீன்ஸ் 2 மனமும் இணையும் திருமண வாழ்வில் இருபக்கமும் புரிஞ்சு, புரிந்து பிறகு நடந்துக்கோங்க (இது எப்படி இருக்கு)
//
இரு தினங்கள் முன்பு கூட திருமணமான அன்று இரவே முதலிரவு சரியாக அமையாத காரணத்தால் மாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தியை காண நேரிட்டது.


இந்த வேலை இல்லாட்டி அடுத்த வேலை. அதுவும் இல்லாட்டி அடுத்தது. அதுவும் இல்லாட்டி அதற்கு அடுத்தது.

நிரந்தரமானது என்று உலகில் என்ன உள்ளது?

வாழும் வாழ்வே நிரந்தரமில்லை.
அரசியல்வாதிக்கு நாற்காலி நிரந்தரமில்லை.
100 படங்கள் நடித்த நடிகர் மோஹனுக்கு நடிப்பே நிரந்தரமில்லை.
ஆசையாய் காதல் திருமணம் செய்தவர்களுக்குத் திருமணமும் நிரந்தரமில்லை.

இதற்காக தற்கொலை செஞ்சுகிட்டா... (:-

//இரு வாரங்களுக்கு முன்னர் வேலை நிரந்தரமாகாத காரணத்தால் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேரிட்டது.

fundoo said...

//////////////
பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
/////////////

நல்லா சொன்னீங்க. என்ன மனுஷங்க. வேஷம் துவேஷம் பொறாமை கோபம் பொய் பிரட்டு பித்தலாட்டம்.. படிக்க படிக்க இதெல்லாம் அதிகமாயிடுது.

கற்க, நிற்க அதற்குத் தக!

Dominic RajaSeelan said...

அருமையான உண்மையான கருத்துக்கள் , ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த கருத்தக்களை சொல்லும் நாமும் நாகரீக பிடியில் சிக்கி தவிக்கின்றோம்

ரோஸ்விக் said...

முற்றிலும் உண்மை நண்பா...இந்த வியாதி இப்பொழுது கிராமங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவித் தொலைக்கிறது :-)

நல்ல எழுதி இருக்கீங்க...வாழ்த்துகள்.

இது பற்றிய விரிவான இடுகை இடுவதாக உள்ளேன்.

எட்வின் said...

@ TamilNenjam

நன்றி தமிழ்நெஞ்சம் அவர்களே

//நிரந்தரமானது என்று உலகில் என்ன உள்ளது?//

நிச்சயமாக எதுவுமில்லை தான்

எட்வின் said...

@ மீன்துள்ளி செந்தில்
@ fundoo

நன்றி.

எட்வின் said...

@ Dominic Raja Seelan //ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த கருத்தக்களை சொல்லும் நாமும் நாகரீக பிடியில் சிக்கி தவிக்கின்றோம்//

மறுக்கமுடியாத உண்மை தான் அன்பரே

எட்வின் said...

@ரோஸ்விக்

நன்றி நண்பரே

//இது பற்றிய விரிவான இடுகை இடுவதாக உள்ளேன்.//

வாழ்த்துக்கள்.

GERSHOM said...

இன்று மனிதம் என்னும் புனிதம் மறைந்தே விட்டது ...///நல்ல கருத்துக்கள் எட்வின் .பாராட்டுக்கள்!!!

GERSHOM said...

பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.///////////////////////நல்ல பஞ்ச் டயலாக் !

Post a Comment

Related Posts with Thumbnails