December 31, 2009

'எல்லா புகழும் இறைவனுக்கே' 2009-2010

2009 ஆவது ஆண்டின் இறுதி தினத்தில் இந்த வருடம் வலையுலகிலும், இணையத்திலும் என்னோடு துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களையும் (குறிப்பாக இலங்கை சகோதரர் லோஷன்) நினைவு கூறுவதோடு அனைவருக்கும் என் நன்றிகளையும், புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2009-ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களினாலும், நோபல் நாயகன் ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அவர்களினாலும் தமிழர்களையும், தமிழையும் தலைநிமிரச் செய்த ஆண்டு என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இலங்கை விஷயத்தில் சுமூகமான ஒரு தீர்வு இன்னமும் எட்டப்படாத நிலை வருத்தத்தைத் தான் தருகிறது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்த ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் @ திலீப்குமார் தமிழில் உதிர்த்த " எல்லா புகழும் இறைவனுக்கே " என்ற வாக்கை நேரலையில் கேட்ட தமிழர்கள் அனைவரும் நிச்சயம் புல்லரித்துப் போயிருக்கக்கூடும்.

2010 அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.

" எல்லா புகழும் இறைவனுக்கே "

December 29, 2009

போர் போதும் தோழா! மனிதம் வாழ வைப்போம்

நாகரீகம் வளர வளர அதன் கூடவே வெறுப்பும், விரோதங்களும் தேசங்களிடையேயும், மனித மனங்களிடையேயும் இன்று பெருகி வருவது மனிதத்தை எங்கு கொண்டு செல்லுமோ தெரியவில்லை.

"முன்னெல்லாம் கோபம் என்றால் கல்லெறிவார்கள். இப்போது குண்டுகளை வீசிப் போகிறார்கள்"உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா?சந்தேகமாக இருக்கிறது!என சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியது தான் மீண்டும் நினைவில் வருகிறது

காலங்காலமாக இருந்து வரும் பிரிவினைகளும், சூழ்ச்சிகளும் இன்னமும் தொடர்ந்து வருவதும் வருத்தம் தரும் விஷயம் தான்.

இலங்கையில் தமிழனுக்கு உரிமைகள் மறுக்கப்படுதலும் , இந்தியா-பாக், இஸ்ரேல்-பாலஸ்தீன், சவுதி-ஏமன் உள்ளிட்ட எல்லைப்பிரச்சினைகளும், மதவாதிகளின் தீவிரவாதங்களும் என்று ஓயுமோ.

இவற்றின் தாக்கத்தால், இக்கொடுமைகள் மாற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஹபீப் என்பவர் பாடல் ஒன்றை சென்ற ஆண்டு காணொளியாக வெளியிட்டுள்ளார்

இந்த பாடலில் இடம் பெறும் "இணையங்களால் இணையும் மானிடா! இதயங்களால் இணைவது எப்போது" என்ற அரூர் புதியவன் அவர்களின் வரிகளுக்கு நம்மிடம் நிச்சயம் பதிலில்லை தான். இந்த பாடல் வரிகள் அனைவரையும் நிச்சயம் அந்த ஒரு தருணத்திற்காக ஏங்கச்செய்யக்கூடும்.

இந்த பாடலை பின்னணி பாடகர் திப்பு இன்னும் சில பாடகர்களுடன் பாடியுள்ளார். புஹாரி என்பவர் இயக்கியிருக்கிறார்.

காணொளியை கீழே இணைத்துள்ளேன்.பூ வாசல் திறந்தால்
வாசம் மயக்கும்
வாழ்க்கை இனிக்கும்

போர் வாசல் திறந்தால்
வாழ்க்கை எரிக்கும்
ஜீவன் மரிக்கும்

இதயமெல்லாம்
இணைந்திடும் நாளெல்லாம்
என் பகைமை வீழாதோ

அதிசயமாய் அகிலமும் மாறியே
அமைதியிலே வாழாதோ

ஓ - மனித மனமே
மடியும் இனமே
மயக்கம் தெளிவாய்

போர், உலகில் வெறியும்
எரியும் வரையில்
தினமும் அழிவாய்(முனைவாய்)

ஒரு ஜீவன்
உயிர் வாழ
நீ பாதை காட்டினாய்

முழு உலகம்
உயிர் வாழ
வகை செய்தோன் நீயே

இது உனக்கு
இது எனக்கு
என பிரிக்கும் உலகம்
ஒன்றானால் நன்றாகும்;
நம் துன்பம் நீங்கிடும்

ஒரு நாட்டை ஒரு நாடு
களவாடும் பிழை தான்
இதனாலே மண்மேலே
தினம் கண்ணீர் அலை தான்

எது புனிதம்
எதில் புனிதம்
என தேடும் மானிடா
இவ்வுலகில் மனிதனைப் போல்
ஒரு புனிதம் ஏதடா

இணையங்களால் இணைந்திடும் மானிடா
இதயங்களால் இணைவோம்-வா

எரிந்திடுதே அனுதினம் உலகமே
அன்பினில் நீ நனைவாயா

போர் போதும் தோழா
மனிதம் வாழ வைப்போம்
ஓர் தாயின் மக்கள்
ஒன்று சேர்ந்து நிற்போம்
ஒன்றாவோம்.

மனிதன் என்று தன் மிருகத்தனத்திலிருந்து மாறி மனிதத்தை மதிக்கிறானோ அன்று தான் இம்மண்ணில் மகிழ்ச்சி பிறக்கும்.

December 26, 2009

விழாக்காலம் விற்பனைக்கு !

இன்றைய கணினி யுக விழாக்களும் பண்டிகைகளும் நேசத்தையும், நட்பையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டுகின்றனவோ இல்லையோ பல வடிவில் பகட்டையும், பண்பற்ற செலவுகளையும் செய்ய வெகுவாகவே தூண்டுகின்றன.

நிறைவான பணமிருந்தால் மட்டுமே அது முழுமையான பண்டிகை என்ற எண்ணம் நம்மிடையே நிலவி வருவது வருத்தம் கலந்த உண்மை.

நம்மில் இருப்பதை கொண்டே மனநிறைவாக விழாக்காலத்தை செலவிடுவதை பலர் மனம் ஏற்பதில்லை. விழாக்காலங்கள் இன்று மெகா மகா விற்பனைக் காலங்களாகிப் போனது காலத்தின் கட்டாயமோ!!!

பண்டிகைத் தினங்களில் கடன் வாங்கியாவது, தங்கள் வரம்பிற்கும் மீறிய கொண்டாட்டங்களை செய்யத் துணிவது மற்றுமொரு அபத்தம்.

அந்த வீட்டார் அதிகம் செலவிடுகிறார்களே! அவர்களுக்கு ஈடாக நாமும் செலவிட வேண்டுமே! அண்டை வீட்டார் புதிய நகை அணிந்திருக்கிறார்களே! அதே போன்று நாமும் வாங்கினால் என்ன! என்பவை போன்ற வார்த்தைகள் ஒலிக்காத வீடுகள் இன்று வெகு சிலவே.

நம்மை விட செல்வ செழிப்பாக இருப்பவர்களை பாராமல், நம்மை விடவும் மிக ஏழ்மையான நிலையில் இருப்பவர்களைக் குறித்து சிந்திப்போமானால் அவர்களிடம் இருப்பவைகளை விட நம்மிடம் இருப்பவை எத்தனையோ மடங்கு அதிகம் என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.


அர்த்தமுள்ள கொண்டாட்டம் என்பது நம்மிடம் இருப்பவற்றிற்காக மனநிறைவடைந்து அவற்றைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தானேயல்லாமல் வீண் விரய செலவுகள் அல்ல.

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது"

நண்பர் ஒருவரின் ஆர்குட் பக்கத்தில் இருந்த இந்த பொன் வாக்குகள் என்னை வெகுவாக கவர்ந்தது; யோசிக்கவும் வைத்தது... உங்களையும் யோசிக்க வைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

மனிதம் வாழ்க.

December 17, 2009

கிரிக்கெட்டிலுமா மொள்ளமாரித்தனம் !

SCG-Sydney

கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிறுக்கு பிடித்து திரிந்தது ஒரு காலம். இப்போது அதனை குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. அதிகமாக ஆடப்படும் ஆட்டங்கள் ஒரு காரணமென்றால் மறுபுறம் வியாபாரமாகி வரும் கிரிக்கெட்டும் அதன் மீதுள்ள விருப்பத்தைக் குறைக்கவே செய்திருக்கிறது

வீரர்கள் தேர்வும், அதில் அரங்கேறி வரும் அரசியல் ஆட்டங்களும் மேலும் வெறுப்பைத் தான் விதைக்கின்றன.

இது போதாதென்று ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் இருந்தால் தான் கிரிக்கெட்டை ரசிப்பார்கள் என்பதற்காக சமீபகாலமாக கிரிக்கெட் மைதானங்கள் அதன் வழக்கமான சுற்றளவில் இருந்து குறைக்கப்பட்டு ஆட்டங்கள் நடத்தப்படுவது இன்னும் வேடிக்கையைத் தருகிறது.

உதாரணமாக இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா-இலங்கை ஆட்டம் நடைபெற்ற ராஜ்கோட் மைதானத்தைக் கூறலாம். ஐ.பி.எல் T20 ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.

கிரிக்கெட் மைதானங்களுக்கென்று ஒரு வரையறை இல்லாததே இதற்கு காரணம். இத்தகைய மொள்ளமாரித்தனம் வேறு எந்த விளையாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

பதிவரும், தோழருமான லோஷன் அவர்கள் கூட தனது பதிவில் கடந்த இந்திய-இலங்கை ஆட்டத்தின் அதிக ஓட்டக்குவிப்பிற்கு காரணம், தட்டையான மைதானம் (flat pitch) என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பின்னே என்னத்திற்கு அனைத்து ஆட்டங்களுக்கும் ஒரே மாதிரியான புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்களோ! சிறிய மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிக ஓட்டம் இது எனவும் பெரிய மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிக ஓட்டம் இது எனவும் வெளியிடலாம் தானே!!?

நடத்துங்கய்யா நடத்துங்க

December 07, 2009

இந்தியா மாற வேண்டியது கோப்பன்ஹேகனில் இல்லை இந்தியாவில்

உலக பருவநிலை மாற்றங்களைக் குறித்து விவாதிக்க கோப்பன்ஹேகனில் இன்று நடைபெறவிருக்கும் ஐக்கியநாடுகளின் கூடுகையில் என்ன விதமான முடிவுகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.

இந்தியா ஏற்கெனவே உலக நாடுகளின் பொருளாதார ஆதரவும், நவீன கருவிகளின் உதவியும் இல்லையென்றால் எங்களால் மாசுபடுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்துதலையும், சுற்றுசூசல் மாசுபடுதலை தவிர்க்கின்ற முறைகளையும் சரியாக செயல்படுத்தவியலது என தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டது.

இந்தியா,சீனா,அமெரிக்கா ஆகிய நாடுகளே அதிக அளவில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த நாடுகளின் மீது மற்ற நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தாலும் ஒவ்வொரு நாடும் மாசுபடுதலை குறைக்க தங்களது பங்கை அளிக்க வேண்டியது கட்டாயமே.

ஒவ்வொரு இந்தியனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்கை அளிக்க முன்வர வேண்டும். இந்தியாவில் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும்.

இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டியது இந்தியாவில் தானே அல்லாமல் கோப்பன்ஹேகனில் அல்ல என்பதற்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சி.

நம்மவர்கள் முனைவார்களா...!!!

புகைப்படங்கள் நன்றி: http://beta.thehindu.com/news/international/article60523.ece


மும்பைகங்கை


ஜம்முவின் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் புகை

December 05, 2009

ஆர்குட்டர்களின் அட்டகாசம்

ஆர்குட்டர்களின் அட்டகாசத்திற்கும், அலம்பலுக்கும் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஆர்குட் பக்கங்களே சாட்சி... என்ன கொடுமை அய்யா இது.

1999 ஆம் வருடம் கல்லூரியில் இருந்து குன்னூருக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு ஆர்குட்டர்கள் நூற்றிற்கு மேலாக கொட்டியிருக்கும் கருத்துக்களை நீங்களே பாருங்கள்.

இது எங்கே சென்று முடியுமோ... எங்கே செல்லும் இந்த பாதை என பாட வேண்டியது தான் போல.

Comments (110)

10/09/2008

Paul:

Hay .....Nice Job Dear....
21 Apr

☆ GÉRSHÕM:

எல்லாரும் தண்ணில இருக்கீங்க...அத்தான் மலர போறமாதிரி இருக்கீரு ...இது எங்க மக்கள் கொடைக்கானலுக்கு போனத விட மோசமா இருக்கும் போல இருக்கே?
21 Apr

CHARLEZZ,:

அண்ணனுக்க சட்டை நல்லாருக்கு,இன்னும் ஒரு மடக்கு மேல மடக்கி இருக்கலாம்
21 Apr

Arnold எட்வின்:

ஆமா...ஆமா... தண்ணில தான் இருக்கோம்! ஆனா தண்ணில இல்ல!! வண்டிக்க ஸ்டீரிங்க் பின்னாடி இருக்கு. அதான் மலர போற மாதிரி தெரியுது.//சட்டைய அதுக்கு மேலயும் மடக்கினா ஃபிகர் மடக்க முடியாதுன்னு தான்... இப்பிடி (ஆமா இவர் ஃபிகர மடக்கிட்டாலும் அப்படின்னு நினக்கியளோ?)
21 Apr

☆ GÉRSHÕM:

ஓஹோ...அந்த காலத்துல பிகர் மடகதுக்கு சட்டைய மடக்கி எல்லாம் விடணுமோ? இது தெரியாம அரை கை சட்டையா வாங்கி போட்டு ஏமாந்துட்டேனே !!!வடை போச்சே..// ஸ்டீரிங்க் பின்னாடி வச்சிட்டு முன்னால பாத்து எப்பிடி வண்டி ஒட்டுறீங்கய்யா?
21 Apr

CHARLEZZ,:

PANT a மடக்குனா ,???
21 Apr

Arnold எட்வின்:

அது தான்... தண்ணி வண்டி/Pant மடக்கினா... எஸ்கேப்புக்கு ரெடின்னு அர்த்தம்
21 Apr

Arnold எட்வின்:

எப்பிடி எல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கய்யா...இது நாலயே போட்ட படத்த எல்லாம் அழிக்க வேண்டியதாப் போச்சு :(
21 Apr

Stanly:

அப்படி கை மடக்கி தான் நம்மா அழு ரோமன்ஸ் விட்டு இருகரு .c.b.h la
21 Apr

Arnold எட்வின்:

cbh ல ரொமான்ஸ் விட நாங்க மேல் நேழ்சோ, இல்ல சூப்பர்வைசரோ இல்ல அண்ணாச்சி :))
21 Apr

☆ GÉRSHÕM:

Unagalukku kathaila Mutru Pulli vaikathukku CBH thaan kidaichaa?
21 Apr

Stanly:

vera enna chaiya
21 Apr

Arnold எட்வின்:

இந்த ஃபோட்டோக்கு இன்னைக்கு கமெண்டு எழுத ஆரம்பிச்சது யாரோ... அவரே காரணம் CBH அ இழுக்க... நான் இல்லடா சாமிங்களா
21 Apr

Maneksha:

chaos theory நல்ல work out ஆவுது ................
21 Apr

Arnold எட்வின்:

எத்தனையோ நல்ல நல்ல படமா பிடிச்சு போட்டிருக்கோம். அதுல ஒன்னுத்தயும் எழுத காணோம். வீணா வம்ப வில குடுத்து வாங்குராங்கய்யா! நல்லதுக்கு காலமில்லயே... யார குத்தம் சொல்லி என்ன செய்யதுக்கு :(
21 Apr

Maneksha:

தம்பி,நம்மளையும் தெருவுல இழுத்து விடணுமா.....சவத்த போட்டு!!!
21 Apr

CHARLEZZ,:

எத்தனையோ நல்ல நல்ல படமா பிடிச்சு போட்டிருக்கோம். அதுல ஒன்னுத்தயும் எழுத காணோம்,,, அண்ணே,,,,எல்லாம்,உண்டு,,குரு சொல்லிருக்காரு ..ஒரு நாள் ஒரு படம்,,,,,நாளை வேறு ஒரு படத்தோட சந்திப்போமா,,,,வணக்கம்யா
21 Apr

Arnold எட்வின்:

நாளைக்கு படம் இருக்காது டோய் ./

Except Maneksha annan அப்படின்னு போட மறந்திட்டு அண்ணே
21 Apr

CHARLEZZ,:

என்னது எங்களுக்கு நாளைக்கு வேலை இல்லையா?????{ஆச்சர்ய குறி}
21 Apr

CHARLEZZ,:

வேறு யாரவது ,போட்டோ போடுங்கையா,,,நான் செஞ்சது தப்பாய்யா ,நான் செஞ்சது தப்பாய்யா ,,,ஆங்,ஆங்,,ஆங்,
21 Apr

Maneksha:

ayyo.....ayyo.........thaankala sami!!!!
21 Apr

Arnold எட்வின்:

கத எழுதுறவங்க, கமெண்டு எழுதுறவங்க எல்லாம் கட பக்கம் அதாவது வலைப்பூ பக்கம் அதாவது Blog பக்கம் வாங்க. எல்லோரும் இப்படியே ஆர்குட்டிலயே நேரத்த போக்கினா... இருக்கிற கொஞ்ச நஞ்ச புத்தியும் மழுங்கிப் போகப்போகுது பாத்துக்கோங்க. காதுள்ளவன் கேட்கக்கடவன். என்ன நான் சொல்றது கேட்டிருக்கும்னு நினக்கேன். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு (வந்திட்டாருடா கருத்து கந்தசாமி அப்பிடின்னு எல்லாம் சொல்லப்பிடாது)
21 Apr

Arnold எட்வின்:

நீங்க எல்லாம் கமெண்டு எழுதுறதுக்குன்னே சில பல படங்கள் ரெடியாகிட்டு இருக்கு. ரிலீஸ் விரைவில்!
21 Apr

CHARLEZZ,:

நல்ல கருத்து,{எங்களுக்கும் ஆசைதான் ஒரு தமிழன் சார்லஸ் ன்னு blog ஆரம்பிக்க,நேரம் வரட்டும் } அது சரி அங்க வந்தாச்சுன்னா இங்க யாரு சளம்புவா??[நாலு பேரு ரசிகிராங்கன்னா எதுவும் தப்பு இல்ல dialouge courtesy:கமல் }
21 Apr

Arnold எட்வின்:

நடத்துங்க நடத்துங்க
22 Apr

☆ GÉRSHÕM:

என்னவோ ஆர்குட்ட கண் கலங்காம பாத்துகுறது நீ மாதிரி சொல்றியே சார்ல்ஸ்? போய் blog தொடங்கி ஆகவேண்டியத பாருப்போ .///.. arnie அத்தான்...சும்மா இருந்த சங்க ஊதி 25 கமெண்ட் அடிக்குற அளவுக்கு ஆக்கி விட்டு இருக்கேன் ... எதாச்சும் மேல போட்டு தரபிடாதா?
22 Apr

george:

கைய மடக்குவீங்களோ , கால மடக்குவீங்களோ ... ஆனா அத மடக்கி fracture பண்ணிடாதீங்க (ஒரு பழய ஜோக் : a patient admitted in MC down with urethral bleeding...(he might be tried his wife very aggressively) one nurse(female) was asking with Jain ,what happened to the patient,he said #penis...eagerly she questioned him, what will be the treatment ... லண்டன் காரன் சொன்னான் , POP போட்டு reduction பண்ணிருவாங்கன்னு... அதையும் அவ நம்பிஇருக்கா... அதனால உஷார்...
22 Apr

☆ GÉRSHÕM:

////eagerly she questioned Jain, what will be the treatment /// ஓஹோ அவரு தான் CBH மாத்ருபூதமா? இல்ல அந்த கை இந்த மாதிரி சந்தேகம் கேட்டு தெரிஞ்சிருக்குதே ...அதனால கேட்டேன்...
22 Apr

Arnold எட்வின்:

என்ன கொடும அய்யா இது... லண்டன் காரரயும் இழுத்து விடனுமா இதுல... நல்லா இருக்கு.நடத்துங்க.கூட்டி குடுப்பு,போட்டு தரது எல்லாத்தயும் என் தலைல கட்டப்பிடாது. அதுக்குன்னு ஆர்குட்ல ஸ்பெசலிஸ்டுகள் இருக்காவ, அவியள பிடிங்க :)
22 Apr

Arnold எட்வின்:

எய்யா ... இதுல காலேஜ் மேட்ஸ் ஓட Tag எல்லாம் வேற போட்டு வச்சிருக்கேனே :( இந்த படத்த பாக்கிறவங்க என்ன "அழிச்சாட்டியம்" பண்ணப் போறாங்களோ (அழிச்சாட்டியம்-அப்படின்னா என்னன்னு கேக்கப்பிடாது)
22 Apr

☆ GÉRSHÕM:

அந்த ஸ்பெசலிஸ்டு'களோட லிஸ்ட் எனக்கு வேணும் !!!!!!!!
22 Apr

CHARLEZZ,:

எவ்ளோ Feel பண்ணி ஒரு life memorable ,fotto போட்டுருகாறு ,,அந்த இடத்துல பேச வேண்டிய பேச்சா இது,,,,{இந்த மடக்கு matter a ஆர்ம்பிச்சவன்கிற முறையில அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் }
22 Apr

CHARLEZZ,:

இப்புடி நாலு seniors இருந்தா{இப்ப புரியாதா நான் ஏன் இப்டி இருக்கேன்னு }
23 Apr

george:

lei makka charles, nalla vishayatha kathukanum... ketta vishayangala marakkanum... nee seniors kitta kathukittathey , night duty samayathula enna nadathanumnu... vendaam...niraya peroda life naasamaidum... koncham perukku intha commenta padichaley kola nadunguthu... oruthanum paakki illa...nallavan oruvanaakilum illa...purinchikko
23 Apr

☆ GÉRSHÕM:

லே சார்ல்ஸ்...சீனியர் பத்தி பேசப்பிடாது! "ஏன் ஏன் இப்பிடி சார்ல்ஸ்" ன்னு புது Blog ஆரம்பிச்சி கத எழுதுவேன்..."8 வது பக்கம் படிசீங்களான்னு" நீ படிகிட்ட நின்னு கேக்குற மாதிரி கார்ட்டூன்'ம் இருக்கும் அதுல...
23 Apr

Arnold எட்வின்:

"நல்லவன் ஒருவனாகிலும் இல்ல" செம பஞ்ச் அண்ணே. நடத்துங்க.
23 Apr

CHARLEZZ,:

இதுக்கு மேல நான் நாற ,,,,விரும்பல ,,,,{என்ன பத்தி எழுதறதுக்கு blog ன்னா,,அப்போம்,,,,,,,,,,,,,}
10 May

CHARLEZZ,:

யப்பா நல்ல காலம் ,ஒருவழியா ,எல்லோரும் இந்த போட்டோவ மறந்தாச்சு,,
10 May

☆ GÉRSHÕM:

ஆஹா ...நல்லா தானே போய் கிட்டு இருந்து? மறக்க கூடிய படமா டா இது? இது 30'க்கும் மேலான கமெண்ட் வாங்கினனால, ஆர்குட்'ட்டே குழம்பி போயீ 17'னு காணிக்குது !//// போன ரௌண்ட்ஸ்'ல விடுபட்ட கருத்துக்கள்: ஆனாலும் அத்தான் ஷர்ட் சூப்பர் !//// Paul'லோட சோடா புட்டி கண்ணாடி கலக்கிடிச்சு!/// Paul, இப்பவும் வச்சிருக்கீங்களா அந்த கண்ணாடிய?
10 May

CHARLEZZ,:

ஆர்குட் குழம்பி போய் update ,,காணிக்க மாட்டேங்குதே,,
16 Jun

lisha:

nostalgia
13 Jul

CHARLEZZ,:

இந்த படம் ,பாஜி .பிரேம் {லண்டன் } அண்ணன் மார் கண்ணுல படாம தப்பிசிருக்குதே பரவா இல்ல,,
13 Jul

☆ GÉRSHÕM:

21 Apr-23rd Apr வரைக்கும் இந்த போட்டோ தான் Talk of the town,இப்போ மறுபடியுமா? இதுல Follow அடிக்கதுக்கு எத்தன தடவ view more'la கிளிக்'க்க வேண்டி இருக்கு...யே அய்யா..என்னா பெருசு?
13 Jul

CHARLEZZ,:

இன்னும் பாக்கலியோ,??
13 Jul

☆ GÉRSHÕM:

அன்ன்னன்ஸ் சீக்கிரம் பாருங்க இந்த கொடுமைய !!!
13 Jul

Prem:

சகோதரா படம் பார்த்தேன் ...அருமை .....கல்லூரி நாள்கள் .....ஒரு மறக்க முடியாத காலங்கள் ......ஆமா எதை குறித்து எழுதுவது ,புகைப்படம் பற்றியா அல்லது இதில் வந்த விமர்சனம் பற்றியா அல்லது C B H வந்த நோயாளி பற்றியா இல்லை கேள்வி கேட்ட தாதியர் பற்றியா அல்லது பதில் கூறிய நம் மாப்பிள்ளை பற்றியா அல்லது இதை எல்லாம் கேட்டு நமக்கு சொன்ன ( அத மடக்கி # பண்ணாதிங்க என்று புத்திமதி கூறிய )சகோதரன் பற்றி எழுதுவதா அல்லது இந்த புகைப்படத்தை இந்த அளவுக்கு பிரபலம் அடைய செய்த மகான்கள் சார்லஸ் & கெர்ஷோம் உங்கள் இருவர் பற்றி எழுதுவதா ??????? டேய் ஆனா ஏதை பற்றி எழுதுவது என்று நிங்களும் சொல்லவில்லை அதனால ரூம் போட்டு யோசிக்க வேண்டியதா போச்சு டா .............டேய்
14 Jul

☆ GÉRSHÕM:

பரவா இல்ல நீங்க எங்க Arnie அத்தானோட ஷர்ட்'ல ஆரம்பிச்சு, இங்க நடக்குற எல்லாம் அளம்புகளையும் அடிங்க ( எல்லாத்தையும் தொகுத்து ஒரு கட்டுரையே அடிச்சு போட்டு கேக்குற கேள்விய பாருங்கையா?) /// பாஜி அண்ணா...அடுத்த தொகுப்பாளர் நீங்க தான், உங்க பங்குக்கு நீங்களும் லைட்'டா அலம்புங்க பாப்போம்...
14 Jul

CHARLEZZ,:

என்ன ஆச்சு பாஜி அண்ணே,,உங்க கண்ணோட்டத்துல எப்புடின்னு பார்க்க ஆவலோடு இருக்கேன் ,,எழுதுங்கள், இது SECOND INNINGS,,,நீங்கதான் OPENING
14 Jul

CHARLEZZ,:

பெரியவங்க யாராவது HALF CENTURY,,அடிங்க,,,,, இது 49 வது கமெண்ட்,,


[கொய்யால RECORD BREAK}
14 Jul

Arnold எட்வின்:

பின்னூட்டத்த (அதாவது கமெண்ட்ட) 1,2,3.... அப்படின்னு 49 வர எண்ணியிருக்கான் பாருங்க கஷ்டப்பட்டு. என்னத்த சொல்ல. நான் அழுதுருவேன் ஆமா. இதுல ரூம் போட்டெல்லாம் யோசிக்கப் போறாய்ங்களாமில்ல. சரி ரூம நம்ம "கானாடுகாத்தான்" பக்கமா போடுங்க... அப்ப தான் செட்டிநாடு மெஸ்ஸுக்கு போக வசதியா இருக்கும்.
14 Jul

☆ GÉRSHÕM:

எங்க அத்தான் பெரியவருன்னு நிரூபிச்சிட்டார் ... இந்த போட்டோல இருக்குறவங்க எல்லாரோட பிள்ளைகளும் வந்து கமெண்ட் அடிக்குற வரைக்கும் அலம்பல்கள நிறுத்தமாட்டோம் என்று கூறி "நீங்க எல்லாம் படகுல இருந்து விழுந்தே சாகல , உங்களுக்கெல்லாம் நல்ல ஆயுசு உண்டாவட்டும் என்று வாழ்த்தி "முடிக்கல, தொடருகிறேன்"...நல்லாவே இருங்க மக்கா!
12 Aug

☆ GÉRSHÕM:

அத்தான் இந்த போட்டோ இருக்கான்னு பாக்க வந்தேன், பாத்தா 60 'க்கும் மேல கமெண்ட் இருக்கு! இந்த போட்டோ'ல நீரு லைட்டா மாதவன் மாதிரி இருக்கீரு!
13 Aug

CHARLEZZ,:

ஆஹா 3 வது இன்னிங்க்சா????
13 Aug

CHARLEZZ,:

அது என்ன ,,லைட்டா மாதவன் மாதிரி ......கொஞ்சம் ஸ்ட்ராங்காவே ,,சொல்லும்,,மொத்ததுல,,,நீறு சொன்னது தப்பு,,அவுரு இவுர மாதிரி இருக்காரு ,,அதான் உண்மை ,,என்ன நான் சொல்றது,,???
13 Aug

☆ GÉRSHÕM:

ஜார்ஜ் அண்ணன்'க்கு போன் பண்ணியாவது கமெண்ட் அடிக்க சொல்லணும்,,,,சார்ல்ஸ் நீ சொன்னது தான் உண்மை...
13 Aug

DENSINGH:

சரி நீங்க இவ்வளவு தூரம் கேட்டதற்காக ஒரு சூடான செய்தி சொல்லுகிறேன் ...இந்த கைகள் (நானும் தான்)படித்த கல்லூரிக்கு அருகில் உள்ள ஊர்(காரிமங்கலம்)ஒரு விஷயத்திற்கு ரொம்ப பேர் போனது....(தம்பி அர்நீ மன்னிக்கவும்)
13 Aug

☆ GÉRSHÕM:

Athu enna vishayam'nu sollunga...wait panrathukkellaam porumai ilaa annae...
13 Aug

DENSINGH:

நீங்க ஸ்டீரிங் முன்னாடி வைப்பீங்களோ ,பின்னாடி வைப்பீங்களோ பிரச்சனை இல்லை ..ஆனா கியர் மட்டும் சைடுல இருந்தா தான் ரொம்ப வசதின்னு நம்ம டிரைவர் நண்பர் சொன்னது தான் நியாபகம் வருது....என்னடா பாபு (லண்டன்)கரெக்ட் தானே
13 Aug

Maneksha:

எல்லாம் சரி தான், அந்த வளையல் போட்டிருக்குற கைய மட்டும் யாரும் கண்டுக்கவே இல்ல..?????
13 Aug

CHARLEZZ,:

கொய்யால அடிச்ச 60 vathu கமெண்டும் waste ,,அடிச்சாரு பாருங்க எங்க அண்ணன் {{வளையல் போட்டிருக்குற கைய மட்டும் யாரும் கண்டுக்கவே இல்ல..????? }}
,,,இதான்,,,சூப்பர் வைசரா இருந்தவருக்கும்,,சும்மா இருந்த மக்களுக்கும்,வித்தியாசம்,,,,,,சரி அது யாரா இருக்கும்,,???
13 Aug

☆ GÉRSHÕM:

அந்த கை நம்ம அத்தான் மடியில தானே இருக்கு...கண்டுக்குடாதீங்கப்பா...
18 Aug

CHARLEZZ,:

அர்னீ,,சார் இந்த போட்டோவ மறந்துட்டாரோ??சரி,,,போட்டு,எங்களால முடிஞ்ச அளவுக்கு நியாபக படுத்துரோம்,,
18 Aug

Arnold எட்வின்:

என்ன கொடும இதெல்லாம். கொஞ்ச நாள் வலைப்பக்கம் வரலன்னா இப்படியெல்லாமா பண்றது. அங்க யாருன்னே வளையல் போட்டிருக்கது?
18 Aug

Arnold எட்வின்:

காரிமங்கலத்தில என்னண்ணே விசேஷம்? இப்பிடி எல்லாமா கவுக்கிறது :(
24 Sep

☆ GÉRSHÕM:

செப்டம்பர்'ல கமெண்ட் போடலன்னு கவலைப்படாதீங்க...போட்டாச்சு போட்டாச்சு !!!
27 Sep

CHARLEZZ,:

அது சரி ,,நானும் போட்டாச்சு ,ஆமா சுரேஷ் அண்ணே நீங்க ஏன் இன்னும் இதுல கமெண்ட் அடிக்கல ,,,நானும் பாத்துருக்கேன் கொஞ்சம் sensitive phottos ல நீங்க எழுத யோசிக்கிறீங்க ,,,,என்ன BOX OFFICE ல உங்க கமெண்ட் வச்சுதான் ratting fix பண்றாங்க அதான் கேட்டேன் ,,,போடுங்க போடுங்க
27 Sep

☆ GÉRSHÕM:

சென்சார் போர்டு அதிகாரி உங்க கமெண்ட் காக மக்கள் ஆவலோடு எதிர் பாத்திட்டு இருக்கு!!!
15 Oct

☆ GÉRSHÕM:

இல்ல படம் நல்லா இருக்கு... (அக்டோபர்'ல யும் கமெண்ட் அடிச்சிட்டேன் அத்தான் )
15 Oct

CHARLEZZ,:

68 th comment,,,,on october
16 Oct
இன்னும் கடக்காரன் சாயா தறேல்ய
17 Oct

Prem:

இந்த புகைப்படம் மட்டும் இந்த அளவுக்கு பல விமர்சனம் வருவதற்கு யார் கரணம் ? புகைப்படமா , அதில்லுள்ளவர்களா ,இல்லை அந்த இயற்க்கை காட்சியா? எல்லா புகழும் நம்ம கெர்ஷோம் மற்றும் சார்லஸ் இந்த இருவருக்கு மட்டுமே சாரும் ....என்பது யாரும் மறுக்க முடியாது ....இந்த புகைப்படத்தை இந்த அளவுக்கு பிரபலம் அடைய செய்த நல்ல உள்ளங்களுக்கு எங்கள் நன்றி ......நன்றி .......நன்றி
17 Oct

☆ GÉRSHÕM:

Arnie அத்தான் 500௦௦ ௦௦ ரூபா தந்தாரு...கமெண்ட் அடிக்கதுக்கு...நீங்களும் ஏதாச்சும் போட்டு தாங்க...பவுண்ட்'டாவே தாங்க...இப்போ ரூபா நோட்டெல்லாம் கையாள தொடுறது இல்ல...அலர்ஜி பாத்துக்காங்க!
17 Oct

CHARLEZZ,:

பிரேம் அண்ணே நெஞ்ச நக்கிட்டீங்க ,,,உங்களக்கு "லண்டன் வருத்தப்படும் முதியவர் சங்கத்துல"" ஒரு posting நிச்சயம்,,,தப்பா நினக்காதீங்க வாழ்த்த வயசு முக்கியமில்ல ,மனசு தான் ,அது உங்க கிட்ட இருக்கு பெருசாவே இருக்கு,,,, அதனால் நன்றி சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி
3 Nov

DENSINGH:

அந்த வளையல் போட்ட கையும்.... இப்போ குவைத் நாட்டில் தான் இருப்பதாக ஒரு தகவல்!!!!!!.எப்பா அப்படியே நவம்பர்ல பிள்ளையார் சுழி போட்டாச்சி .. தொடருங்கள் உங்கள் கருத்துக்களை .
3 Nov

☆ GÉRSHÕM:

அத்தான்...paul 'க பின்னாடி சிவப்பு T-shirt போட்ருக்க கை'க்கு ரெத்தின புரமா?
3 Nov

Arnold எட்வின்:

மட பறத்து... ஆமாடே! அவருக்கு நாகர்கோவில் தான். பென்சம் பக்கம்
4 Nov

CHARLEZZ,:

77 . {{ கமென்ட் எழுதுபவர்கள் சீரியல் நம்பர் போட மறக்கவேண்டாம்}} இந்த மாசம் பாஜி அண்ணன் கையால ஆரம்பிச்சிருக்கார் ,, கைராசிகாரர்னு சொல்லிக்கிட்டாங்க, பாப்போம் ராசியை ,,
4 Nov

CHARLEZZ,:

78 .{{ஒண்ணுமில்ல இப்புடி கரெக்டா நம்பர் போடனும்னு சொல்ல வந்தேன் }}
5 Nov

☆ GÉRSHÕM:

79 .திடீர்னு நம்மடிசிட்டு இருக்கொம்போதே வேற யாராச்சும் அடிச்சாங்கன்னா.. நம்பர் குழம்பீராது???
5 Nov

☆ GÉRSHÕM:

80௦. ஹி ஹி ஹி குழம்பல !!!
6 Nov

CHARLEZZ,:

81. good follower
9 Nov

DENSINGH:

81 ... ஆஹா என்ன number சரியா....மொத்ததுல இவ்வளவு தண்ணியிலும்!!!!!!! boat steady யா நல்லாத்தான் போகுது.....கவலைபடாதே சார்லி இந்த மாசமே இங்க செஞ்சுரி போட்டுறலாம்
9 Nov

☆ GÉRSHÕM:

83 . நம்பர் எல்லாம் சரி தான். செஞ்சுரி போடுறது சரி தான்...அதுக்குள்ளே அர்னீ'ய போட்ற போறாய்ங்க யா !
2 Dec

CHARLEZZ,:

84. யப்பா ,,டிசம்பர்ல என் பங்குக்கு போட்டாச்சு ,,,,எப்படம் யார் போட்டாலும் இப்படம் போல் வராது
3 Dec

☆ GÉRSHÕM:

85.டேய் அந்த சில நாட்'கள் மாதிரி மாசம் தவறாம பின்னூட்டம் போடுறனால இந்த படத்திற்கு "மாத விடாய் புகைப்படம்'னு" பேரு வைப்போமா?
3 Dec

Stanly:

it will be their how many days in a month
3 Dec

CHARLEZZ,:

வச்சாலும் கொள்ளாம் தான்....உம்மா அத்தான்{ஸ்டான்லி} எதோ ரெட்டை -----பேசுற மாதிரி இருக்கே?
3 Dec

CHARLEZZ,:

88.மன்னிக்கணும் நம்பர் போட மறந்துட்டேன் ...--அண்ணன் பாஜியின் ஆதரவு இந்த மாதமும் எதிர் பார்க்கிறேன்...!!!
4 Dec

Kavita Iyapillai:

90. vaikalam gershom.. i guess everybody must b so eagerly waiting for a new month to begin just to c what gersh and charlz r up to!!! i am waiting for the 100th comment. century yaaru adika porangalo.. let it b in the new year..
4 Dec

Sundar:

91 . ஒரு foto வுக்கு 90 கமெண்ட் ஆ ?
4 Dec

DENSINGH:

92.. ஆஹா gee என்னா ஒரு கண்டுபிடிப்பு ...ஆமா வைச்சிரலாம் ...புது மாப்பிளை (ஸ்டான்லி ) ஒரு முடிவோட தான் இருக்கான் போல இருக்கே ...
15:17

Prem:

93.மாப்பிள்ளை தம்பிமார் சொல்லுவது போல பெயர் வைக்க வேண்டாம் ஏன் என்றால் சில மாதம் விமர்சனம் எழுதாமல் இருந்துவிட்டு பத்து மாதம்( பிரசவத்துக்கு ) விடுமுறை என்று சொல்லிவிடுவார்கள் இந்த கெர்ஷோம் மற்றும் சார்லஸ் மணிக்கவும் கெர்ஷோம் நீ சொல்லாததை சொல்லியதுபோல எழுதியதற்கு பின் குறிப்பு : இதை படிப்பவர்களுக்கு தெரியும் ஏது உண்மை என்று .......... தம்பி நீ அவன் வஞ்சத்து போல என்னை வைய மாட்டல்ல ....டே.......டே......டே........
15:20

Prem:

94 ஏன் ?
15:21

Prem:

95 எப்படி ?
15:21

Prem:

96 இப்படி ?
15:22

Prem:

97 இந்த
15:23

Prem:

98 படத்துக்குமட்டும்
15:23

Prem:

99 இத்தனை விமர்சனம் வந்தது ??
15:25

Prem:

100 இதற்க்கு காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி முக்கியமாக கெர்ஷோம் ,சார்லஸ் ,பாஜி ,ஸ்டான்லி மற்றும் எங்கள் அன்பு நண்பர்களுக்கு நிக்க நன்றி
15:27

Prem:

மணிக்கவும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ,எல்லாம் அவன் செயல் என்ன பாக்குறிங்க அவன் என்றால் கெர்ஷோம் மற்றும் சார்லஸ்தான் வேற யார இப்படி உரிமையாக அவன் என்று சொல்ல முடியும் ......வாழ்க வளமுடன்
16:11

CHARLEZZ,:

102. ஹா ஹா ஹா ஹா ...MISSION COMPLETED----அசாத்தியம் ,,பறத்தல் --பிரேம் அண்ணே ரொம்ப நன்றி வாழ்த்தியதற்கு,, ரொம்ப எதிர் பார்த்துட்டே இருந்தேன் ,இப்புடி ஒரு RESPONSE நம்ம கைகள்ட்ட !!!! ...,,,நூறாவது அடித்த நீங்கள் நூறாண்டு வாழ்க .. இந்த நூறாவது வெற்றிக்கு துணை நின்ற எங்கள் சிங்கங்கள் ஷா,ஸ்காட் அண்ணன்களுக்கு நன்றி,,மேலும் எல்லா மாசமும் முதல் கமெண்ட் நான் அடிப்பேன்னு சொல்லி கொள்கிறேன்,, .
16:44

☆ GÉRSHÕM:

103.நூறு comment ஆனனால உண்மைய சொல்லுறேன், இந்த படம் ஒரு ஷள்ள படம்...எடுபடவே இல்ல...
16:50

☆ GÉRSHÕM:

104.Baji Annan,thanks for the comment,you are sportive ...I like U.Prem annan congrats-centuryபோட்டது நீங்க தானே . Arnie athaan hats off-ஒரு ஷள்ள படத்துக்கு 100 comment.(மன்னிச்சுக்காரும் ,உம்ம nostalgic படம்). Charles, you did it man.
16:51

Stanly:

அது உமக்கு இப்போ தான் தெரியுமா நீ ஒரு மரண கை
19:33

DENSINGH:

mappu babu tis is 2 bad...v all r waiting 4 dat number..but silently u did dat ,,,,dat 2within a hr...thambi gee ithu thaan kaththirunthavan pondatiya.....ha ha feel so sorry 4 charli...don't worry v'll try 4 d double century....thanks guys 4 ur support
19:35

DENSINGH:

hmmm ini neenga number potta yenna podaati yenna...
22:05

Oliver:

108.Congrats Arnie
01:12

Arnold எட்வின்:

109.அனைவருக்கும் நன்றி. வலைப்பதிவுகளில் தான் இந்த அட்டகாசம் என்றால்; ஆர்குட்டில் அட்டகாசம் அதற்கும் மேலிருக்கிறது. ஆர்குட்டில் நீங்கள்(பிற புகைப்படங்களுக்கும்) எழுதும் ஒவ்வொரு கருத்துக்களும் வலைப்பூவில் (BLOG) ஏற்றப்பட்டிருக்குமானால் இதுவரை ஒவ்வொருவருக்கும் 100 கட்டுரைகளுக்கு மேலேயே ஆகியிருக்கக்கூடும் !!
01:33

Arnold எட்வின்:

110. Having more than 100 Comments on a picture which has no value at all is indeed shows the craziness. ஆக்கப்பூர்வமான விஷயங்களில் இன்னும் உற்சாகமாக பங்கு கொள்ளுங்களேன். இதுவரை கருத்துரைத்தவர்கள் Charlez-30,Gershom-27,Baabee-11,Baji-7,Stanly-4,Maneksha-4,George-2,Paul-1,Lisha-1,Sundar-1,Kavi-1,Balmar-1,Oliver-1,Arnie-19
Related Posts with Thumbnails