December 07, 2009

இந்தியா மாற வேண்டியது கோப்பன்ஹேகனில் இல்லை இந்தியாவில்

உலக பருவநிலை மாற்றங்களைக் குறித்து விவாதிக்க கோப்பன்ஹேகனில் இன்று நடைபெறவிருக்கும் ஐக்கியநாடுகளின் கூடுகையில் என்ன விதமான முடிவுகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.

இந்தியா ஏற்கெனவே உலக நாடுகளின் பொருளாதார ஆதரவும், நவீன கருவிகளின் உதவியும் இல்லையென்றால் எங்களால் மாசுபடுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்துதலையும், சுற்றுசூசல் மாசுபடுதலை தவிர்க்கின்ற முறைகளையும் சரியாக செயல்படுத்தவியலது என தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டது.

இந்தியா,சீனா,அமெரிக்கா ஆகிய நாடுகளே அதிக அளவில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த நாடுகளின் மீது மற்ற நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தாலும் ஒவ்வொரு நாடும் மாசுபடுதலை குறைக்க தங்களது பங்கை அளிக்க வேண்டியது கட்டாயமே.

ஒவ்வொரு இந்தியனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்கை அளிக்க முன்வர வேண்டும். இந்தியாவில் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும்.

இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டியது இந்தியாவில் தானே அல்லாமல் கோப்பன்ஹேகனில் அல்ல என்பதற்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சி.

நம்மவர்கள் முனைவார்களா...!!!

புகைப்படங்கள் நன்றி: http://beta.thehindu.com/news/international/article60523.ece


மும்பை



கங்கை


ஜம்முவின் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் புகை

3 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

உண்மை. மிகவும் சத்தியமான உண்மை நண்பா !

என் நடை பாதையில்(ராம்) said...

புனிதமான கங்கையையே நாரடிப்பவர்கள்; நாம் எங்கே மற்ற இடங்களை பாதுகாக்கப் போகிறோம்.

கிறிச்சான் said...

பண்டிகை ,மதம் 'னு சொல்லி சுற்று புற சூழல்'ல கெடுத்துகிட்டு இருக்கோம்...ஆறாவது அறிவ உபயோகிச்சோம்'னா கண்டிப்பா வெப்ப மயமாகுதல கண்டிப்பா தடுக்கலாம்.

Post a Comment

Related Posts with Thumbnails