January 07, 2010

ஆஸ்கர் நாயகனிடம் இத்தனை எளிமையா!

ஜனவரி 6 ஆம் தியதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் ஆதலால் அவரது பேட்டியை CNN ஆங்கில தொலைக்காட்சி talk asia என்ற நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை தற்செயலாக காண நேரிட்டது.

மனிதர் மிக எளிமையாக பேசிவிட்டு போனார், சென்னையிலிருக்கும் இசைப்பள்ளியைக் குறித்தும், அவர் பாடல்களுக்கு எவ்விதம் மெட்டமைக்கிறார் போன்ற விடயங்களையும், ஹாலிவுட் வாய்ப்புகளையும் குறித்து விவரித்தார்.


ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக கிடைத்த இரு ஆஸ்கர்களுக்கு பின்னர் மேற்கத்திய உலகில் பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறார் நம் இசைப்புயல்.

ஆஸ்கருக்குப் பின்னர் அமெரிக்காவின் பிரபல ஓப்ரா மற்றும் ஜே லெனோ நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்; ஆங்கில பாப் இசைக்குழுவான Pussy Cat Dolls உடன் பணியாற்றியிருக்கிறார்; என சொல்லிக்கொண்டே போகலாம்.


(அண்மை காலத்து பேட்டி என்று தான் ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அது மே மாதம் 2009 ல் அவர் அளித்த பேட்டி என்று பின்னர் தான் தெரியவந்தது)

எதுவாயினும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பதே பெரிய விஷயம் அதுவும் மேற்கத்திய நாடுகள் நம்மவர் ஒருவரை திரும்பிப் பார்க்கிறது என்றால் நமக்கெல்லாம் அது பெருமையே

5 comments:

ஹாய் அரும்பாவூர் said...

ரஹ்மான் என்றாலே எளிமை அவரை பற்றி புது தகவல் தந்ததிற்கு நன்றி
சிறப்பான பதிவு நண்பரே

குப்பன்.யாஹூ said...

NIRAI KUDAM TALUMBAATHU, THANKS FOR SHARING

அழகன் said...

\\NIRAI KUDAM TALUMBAATHU//... உண்மை, நிறைகுடம் தளும்பாது. அரைகுறை குடங்களே தளும்பும், ஆனால் நண்பரே, "காலி"க் குடங்களும் தளும்புவதில்லை என்றறிக.

கிறிச்சான் said...

இத்தனை எளிமையாக இருப்பதால் தான் என்னவோ,அவரால் ஆஸ்கார் வரை எட்டமுடிந்தது என் நினைக்கிறேன்.

நாடோடிப் பையன் said...

Very nice interview. Thanks for your post.

Post a Comment

Related Posts with Thumbnails