January 14, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா-ஓசன்னா/ஹோசன்னா

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்பட பாடல்கள் இசைப்புயல் ரஹ்மானின் பாதையில் மற்றுமொரு மைல்கல் எனலாம்.

கவிஞர் தாமரையின் வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே கட்டிப்போடுகின்றன. குறிப்பாக ஹோசன்னா பாடலின் ஆரம்ப வரிகளான ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே! என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என்ற வரி என்னை வெகுவாகவே கவர்ந்தது.

(ஈழத்திற்காக கவிஞர் தாமரை பேசிய பேச்சைக் கேட்டு மிரண்டு போயிருந்தேன். அந்த புயலிடமிருந்து மீண்டும் இப்படி ஒரு தென்றல் போன்ற வரிகளா என்பது ஆச்சரியப்பட வைக்கிறது)

ஹோசன்னா பாடலை பாடியிருக்கும் விஜய் பிரகாஷ் என்பவரின் குரலை இதற்கு முன்னர் இசைப்புயலின் yuvraaj (2008) என்ற இந்தித் திரைப்படத்தின் Manmohini Morey பாடல் மூலம் கேட்டிருக்கிறேன்.

அந்த பாடலும் ஏறக்குறைய இதே சுருதியில் அமைக்கப்பட்ட பாடல் தான். அந்த பாடலில் கர்நாடக சங்கீத ஆலாப்களால் மனதை ரீங்காரமிடுவார் விஜய் பிரகாஷ். அதே போன்று ஹோசன்னாவிலும் கலக்கியிருக்கிறார்.

Manmohini Morey


உடன் பாடியிருக்கும் Suzanne வையும், Blaaze வையும் குறித்து சொல்லவே தேவையில்லை. Blaaze வை குறித்து தனி பதிவே போடலாம்.

yuvraaj திரைப்படத்தின் பாடல்கள் அத்தனையும் அத்தனை அருமையாக இருக்கும். அதில் பீத்தோவனின் இசையையும் சேர்த்திருப்பார் நம் ஆஸ்கர் நாயகன். கேட்காதவர்கள் நிச்சயம் கேளுங்கள்

'ஓமனப் பெண்ணே' பாடலில் பென்னி தயாளும், கல்யாணி மேனனும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மலையாள வாசம் ரொம்பவே வீசுகிறது. நாதஸ்வரத்தின் சேர்க்கை 'ஓமனப் பெண்ணே' வில் வித்தியாசமாக இருக்கிறது.

'மன்னிப்பாயா' பாடலில் ஷ்ரேயா கோஷலும், ரஹ்மானும் வாழ்ந்திருக்கிறார்கள். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" அன்பிலார் எல்லாம் தமக்குரியர்" என திருக்குறள்களையும் கவிஞர் தாமரை சேர்த்து விட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது, பாராட்டுக்குரியது.

'ஆரோமலே' பாடலின் ஆரம்பத்தில் Guitar ன் ஆக்கிரமிப்பு நம்மை ஆக்கிரமிக்கிறது. பாடலின் பிற்பகுதியில் வரும் சுலோகங்கள் சரிவர பிடிபடவில்லையென்றாலும் வித்தியாசமாகவே இருக்கிறது.

'அன்பில் அவன்' துள்ளலிசை பாடல் வகை. ரஹ்மானின் ஆஸ்தான பாடகி சின்மயி தேவனுடன் இணைந்து பாடியிருக்கிறார். எப்போதும் போல் சின்மயியின் குரல் சில்லென ஒலிக்கிறது. இடையிடையே வரும் மிருதங்கம், organ மற்றும் பிற இசைக்கருவிகளின் சங்கமம்(fusion) வியக்கவைக்கிறது.

கண்ணுக்குள் கண்ணை பாடலில் அ... ஆ வின் மரங்கொத்தியே சாயலும் ரங் தே பசந்தியின் சாயலும் சற்றே தெரிகிறது.

Title Song விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்கின் மெல்லிய குரலில் வசீகரிக்கிறது.

ஹோசன்னா பாடலில் கவிஞர் தாமரை சொல்ல வந்தது விவிலியத்தில் கூறப்படும் ஓசன்னாவா இல்லை வேறு ஹோசன்னாவா இல்லை ஓ... சனா வா என்பது தான் நான் இப்போது எனக்குள்ளேயே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

5 comments:

ahaanandham said...

அருமையான விமர்சனம் பாடல்களை பார்த்தது போல் ஒரு உணர்வு ,இளைய சூப்பர் ஸ்டார் எப்படி நடித்திருக்கிறார் என்பதை காண ஆவலாக உள்ளேன் ., ரஹ்மான் இந்த நூற்றாண்டின் பொக்கிஷம் .

கிறிச்சான் said...

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" அன்பிலார் எல்லாம் தமக்குரியர்" என திருக்குறள்களையும் கவிஞர் தாமரை சேர்த்து விட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது, பாராட்டுக்குரியது.///////////
பாடல்களுக்கு நன்றி...
இனிமையான இசை....
ரொம்பவே ரசிச்ட்டீங்க போல?

சரவணன். ச said...

நல்ல விமர்சனம்
எனக்கு பாடலை கேட்கும் போது உள்ள உனர்வும் உங்களுக்கும் சரியாக இருக்கிறது.

priyamudanprabu said...

நல்ல விமர்சனம்

எட்வின் said...

விவிலியத்தின் ஓசன்னா தான் பாடலிலும் சேர்க்கப்பட்டுள்ளதை இயக்குனர் கவுதம் மேனனே சொல்லியிருப்பதை இந்த youtube காணொளியில் கண்டுகொள்ளலாம்.

சுட்டியை அளித்த சகோதரர் சுந்தருக்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails