January 18, 2010

சேவாக் ஆல்(ள்) அவுட் சச்சின் நாட் அவுட்

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு அப்புறம் சச்சின் நிலைத்து நின்று ஆடுவதும் மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழப்பதும் நிகழ்ந்திருக்கிறது.

இந்திய அணி சமீப காலங்களில் அனைத்து வீரர்களின் பங்களிப்பினால் தான் பெரும்பான்மையான ஆட்டங்களில் வெற்றிகளை ஈட்டி தர வரிசையில் கூட முதலிடத்தைப் பெற்றிருந்தது.

பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்திருப்பதன் மூலம் சச்சின் தனது டெஸ்ட் சதங்களில் 44 ஆவதை நிறைவு செய்திருக்கிறார்.

அவரது சதமும் அணித்தலைவர் சேவாக்கின் அரை சதமும் இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் எண்ணிக்கையை இருநூறை கடக்கச் செய்திருக்கிறது.


இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் 184 ஓட்டங்கள் பின் தங்கி இருக்கிறது.மூன்றாவது நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் இந்திய அணியின் ஓட்டங்களை விட 100 ஓட்டங்கள் அதிகம் குவித்தால் கூட ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்புள்ளது.

பங்களாதேஷ் அணி பலவீனமான பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கிறது என்ற சேவாக்கின் தேவையற்ற பேச்சுக்கு அவர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுத்து விட்டதாகவே கருதுகிறேன்.

சச்சினிடம் அதையே பத்திரிக்கையாளர்கள் மீண்டும் கேட்ட போது அதை சேவாக்கிடமே கேளுங்கள், கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; ஆட்டம் முடியும் வரை எந்த அணி வெற்றி பெறும் என்பதை எவராலும் கணிக்கவியலாது என வெகு கண்ணியமாக பதிலளித்திருக்கிறார் நம்ம கிரேட் சச்சின்.

(தமிழன்னு சொல்லிட்டு தலையங்கமே ஆங்கிலத்தில் இருப்பது அநியாயமா தெரியலயான்னு நீங்க கேக்கிறது காதில விழாம இல்ல... மன்னிச்சிருங்க)

2 comments:

கிறிச்சான் said...

தலையங்கமே ஆங்கிலத்தில் இருப்பது அநியாயமா தெரியலயான்னு நீங்க கேக்கிறது காதில விழாம இல்ல... மன்னிச்சிருங்க///////கிரிக்கெட்'அ தமிழ்'ல மொழி பெயர்த்தா படு கேவலமா இருக்குது,அதனால நீங்க தலைப்பு ஆங்கில'த்துல வச்சத மன்னிச்சிடுறோம் .

priyamudanprabu said...

தல தலதான்

Post a Comment

Related Posts with Thumbnails