January 21, 2010

நிரந்தரம் என்று எதுவுமில்லை

எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு என்கிறது கீதை; மாயை எல்லாம் மாயையாய் இருக்கிறது... நிர்வாணமாய் வந்தேன் நிர்வாணமாய் போவேன் என்கிறது விவிலியம்.

என்னத்திற்கு இந்த வாழ்க்கை! என்னத்திற்கு இந்த ஜீவன்! என்ற உண்மை இன்னமும் புரிந்தபாடில்லை.

வாழ்க்கையை இது போன்ற குழப்பங்களுக்குள்ளேயே இன்னமும் தேடிக்கொண்டிருக்க ஹெய்ட்டி என்ற மிக மிக ஏழ்மையான நாடு ஒன்றில் நிகழ்ந்த நில அதிர்வும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் மேலும் குழப்பங்களையும், பல கேள்விகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

ஹெய்ட்டியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை தொலைக்காட்சியில் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் குவியலாய் புதைக்கப்படுகையில் கண்ணீர் மல்குகிறது. வீட்டை, குடும்பத்தை இழந்தவர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை நினைத்தால் கவலை தான் மிஞ்சுகிறது.

ஹெய்ட்டியின் போர்ட்-அ-பிரான்ஸ் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியை ஒருவர் 'இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அவர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்' என வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி சில மணித்துளிகள் ஆவதற்குள் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்திருக்கின்றன. குழந்தைகளும் ஆசிரியையுமாக உயிரைக் காப்பாற்ற ஓடுயிருக்கிறார்கள். அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானோர் இன்று இல்லை

அந்த ஆசிரியை கரும்பலகையில் எழுதியிருந்த வார்த்தைக்கும் அந்த நிகழ்விற்கும் எத்தனை முரண்பாடு!!! அந்த கரும்பலகை இருக்கின்ற வகுப்பறையை தொலைக்காட்சியில் காண்கையில் இன்னும் பல கேள்விகள் என்னுள்.

மனிதன் ஒருபுறம் மனிதனையும் இயற்கையையும் அழித்துக்கொண்டிருக்க மறுபுறம் இயற்கையே இயற்கையையும், மனிதனையும் பேரழிவுகளால் தொடர்ந்து அழித்துக் கொண்டு வருவது ஏனோ?

உங்களால் சகித்துக் கொள்ளக்கூடியதான வேதனைகளும், சோதனைகளுமே உங்களுக்கு நேரிடும் என்கிறது விவிலியம். பச்சிளம் குழந்தைகள் கரங்களை இழந்து, கால்களை இழந்து உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் நிலையை அவர்களால் சகித்துக் கொள்ள முடியுமா என தெரியவில்லை.


இறைவன், இயற்கை இரண்டும் இன்னமும் எனக்கு புரிந்த பாடில்லை. என்னமோ போங்க :( ஆனா உறவுகளானாலும், உறைவிடமானாலும் நிரந்தரமில்லையென்பது மட்டும் நல்லா புரியுது.

8 comments:

கிறிச்சான் said...

மனிதன் ஒருபுறம் மனிதனையும் இயற்கையையும் அழித்துக்கொண்டிருக்க மறுபுறம் இயற்கையே இயற்கையையும், மனிதனையும் பேரழிவுகளால் தொடர்ந்து அழித்துக் கொண்டு வருவது ஏனோ?////

பகுத்தறிவாளன் ஆயிட்டு இருக்கீங்க போல?
எனக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் எழுகிறது...

எட்வின் said...

பகுத்தறிவாளனா... அப்பிடின்னா என்னாங்க. கேள்விகள் எழுந்தா உடனே பகுத்தறிவாளனா? அட நீங்க வேற!

Radhakrishnan said...

இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் மனதை வலிக்கச் செய்கின்றன.

நடு வீதியில் குழந்தைகள் பிறந்த நிகழ்வுதனை தொலைகாட்சியில் காட்டியபோதும், கை கால்கள் உடைந்து வலிகளால் பலர் அலறியதைப் பார்த்தபோது உலகம்?

ஜீவா said...

அன்பு எட்வின், தங்களின் பதிவை படிக்கும்பொழுது
மனதை மிகவும் வலிக்க செய்கிறது, இதுபோன்ற
நிகழ்வை நேரில் பார்த்தால் மயங்கிவிழுந்துவிடுவோம்,
மனிதனுக்கு வாழ்க்கையே வெறுத்து போய்விடும்.

அன்புடன் ஜீவா.

எட்வின் said...

இந்த கட்டுரைக்கு யூத்புல் விகடனின் "குட் பிளாக்ஸ்" பகுதியில் இடமளித்த விகடனுக்கு நன்றி

எட்வின் said...

வெ.இராதாகிருஷ்ணன், ஜீவா உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி.

நிச்சயம் உலகம் வெறுத்து தான் போய்விடும் போலிருக்கிறது.

Anonymous said...

After seeing all these why are we still selfish thinking only about us.Stop thinking about you for one day and start praying and thanking for everything around you for just one day.You will start loving the world. Think that even your tooth brush has life, thank it in the morning for helping you clean your teeth. We dont know when will our life end, so why worry about that. Live the moment worth fully. It doesnt mean you should enjoy life by partying.Respect Nature and protect Nature as much as you can.Every creation should be respected, as each has its own value. http://pricelesswriting.wordpress.com/2010/01/24/life/

எட்வின் said...

ஷாலினி உங்கள் வருகை சற்றும் எதிர்பாராதது. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்.

Post a Comment

Related Posts with Thumbnails