January 25, 2010

ஆர்குட் ஆறாவது ஆண்டில்

ஜனவரி 22ஆம் தேதியுடன் ஆர்குட் தனது ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்கினைப்போல் ஆர்குட் இன்றி இன்றைய இளைஞர்களின் உலகம் அமையாது என்று கூட கூறலாம்.

அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் நாட்டினர் தான் ஆர்குட்டை அதிகம் பயன்படுத்துவதாக விக்கி தெரிவிக்கிறது.

தற்செயலாக இன்று ஆர்குட்டை திறக்கையில் வண்ணமயமான பலூன்களுடன் ஆறு என்ற எண் மின்னியது. இந்தியாவின் குடியரசு தினத்திற்கான இருபத்தாறில் ஆறு மட்டுமாக இருக்குமோ என எண்ணினேன் ஆரம்பத்தில்.

அதன் பிறகு தலையின் மேல் பல்ப் எறியவே விக்கிபீடியாவில் ஆர்குட்டை சொடுக்கினேன். பின்னர் தான் ஆர்குட்டின் சரித்திரம் தெரியவந்தது.

ஆர்குட் பழைய பள்ளி நண்பர்களையும், (ஏன் எதிரிகளையும் கூட) பல புதிய நண்பர்களையும் கண்டறிய வகை செய்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஆர்க்குட்டிற்கு அடிமைப் பட்டு கிடக்கிறார்கள் என கூட கூறலாம். அதனைக் குறித்து சென்ற வருடம் எழுதிய கட்டுரை ஒன்றை இங்கே படிக்கலாம்.

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆர்குட்டிற்கு வாழ்த்துக்கள்.

ஆர்குட் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

1. கூகுளில் பணிபுரியும் 'ஆர்குட்' என்பவர் ஆர்குட்டை உருவாக்கியதால்(2004ல்) அவரின் பெயரே இந்த தளத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

2. ஆர்குட் இதுவரை 100 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால் மற்றொரு சமூக தளமான ஃபேஸ்புக்கோ 350 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

3. மிக அதிக உறுப்பினர்களை பிரேசில் கொண்டுள்ளது அதற்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது

4. ஆர்குட்டை ஆரம்பித்தவர் துருக்கியைச் சார்ந்தவர்.

5. ஆர்குட் ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவில் என்றாலும் அமெரிக்காவில் ஆர்குட்டை பயன்படுத்துபவர்கள் வெகு குறைவே

ஆர்குட்டிற்கு பூங்கொத்தும் நன்றியும்.

3 comments:

ஹாய் அரும்பாவூர் said...

ஆர்குட் பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள் என்ன செய்வது துபாய்ல ஆர்குட்டுக்கு தடை
ஆர்குட்டை போல் உங்கள் ப்ளாக் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

எட்வின் said...

மிக்க நன்றி அன்பரே.

ஆர்குட் துபாயில் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து நண்பர்கள் சிலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

சில பேர் முழிக்கிறதே ஆர்குட்ல தான்.

எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் காலைல பல்ல கூட விளக்காம ஆர்குட் முன்னால உக்காந்து இருப்பார்னா பாத்துக்கோங்களேன்! :)

கிறிச்சான் said...

எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் காலைல பல்ல கூட விளக்காம ஆர்குட் முன்னால உக்காந்து இருப்பார்னா பாத்துக்கோங்களேன்! :) ////யாருக்கு இந்த உள்குத்து ?

ஆர்குட்டை போல் உங்கள் ப்ளாக் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!-வழி மொழிகிறேன்!

Post a Comment

Related Posts with Thumbnails