January 14, 2010

ஹெய்ட்டி-எதிர்பாராதது எந்த நேரமும் நிகழலாம்


கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டி (HAITI) தீவில் இரு தினங்கள் முன்னர் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான பூகம்பம் இதுவரை பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்க காரணமாகியிருக்கிறது.

பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் விஞஞானத்தால் கூட பெரும்பாலான நேரங்களில் அடுத்த வினாடி என்ன நிகழும் என்பதை ஊகிக்கவியலாத நிலை தான் இன்று உள்ளது.

இயற்கையை எவராலும் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதும். மனித சக்திகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞானத்திற்கும் மேல் நான் இருக்கிறேன் என இயற்கை சொல்லாமல் சொல்வதையும் பூமியதிர்ச்சியின் உணர்வால் மீண்டும் உணரமுடிந்திருக்கிறது.

உலகம் இவ்வாறிருக்க... மக்களோ இது எனது அது உனது என்கிற வீராப்புகளும்; அது உன் எல்லை இது என் எல்லை என்கிற பிரிவினைகளும்; மொழி, மத, இன வேறுபாடுகளும் இன்னமும் கொண்டிருப்பது வருத்தம் தான் தருகிறது.

எனினும் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹெய்ட்டி தீவிற்கு வந்து குவியும் நிவாரண உதவிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் நல்லெண்ண பணிகளும்... மனிதம் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

ஹெய்ட்டி தீவில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலை இந்த (http://www.cnn.com/SPECIALS/2007/impact/) சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.

இன்னமும் சிறு சிறு அதிர்வுகள்(aftermath) ஹெய்ட்டியில் இருந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

கிறிச்சான் said...

எதிர்பாராதது எந்த நேரமும் நிகழலாம்////////சரியான தலைப்பு...ஹெய்ட்டி (HAITI) தீவு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ahaanandham said...

அருமையான தலைப்பு.ஆழ்ந்த அனுதாபங்கள்

எட்வின் said...

தலையங்கம் உபயம்-சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மின்னல் தொலைக்காட்சி

Post a Comment

Related Posts with Thumbnails