January 22, 2010

IPL= I(ncome)PL - பணம் பதினொன்னும் செய்யும்


இரண்டாவது ஐ.பி.எல் போட்டிகளை சொந்த நாட்டில் நடத்தவியாலாமல் வேறொரு நாட்டில் நடத்தியதற்காக இண்டியன் பிரிமீயர் லீக்கை இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக் என சாடியிருந்தேன் சென்ற வருடம்.

சென்ற ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே சலசலப்பு ஏற்பட்டது போன்று இந்த வருடமும் சலசலப்பிற்கு குறைவில்லை.

மூன்றாவது ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆட்டக்காரர்களை தெரிந்தெடுக்க இரு தினங்கள் முன்னர் நடந்த ஏலத்தில் ஒரு பாகிஸ்தான் ஆட்டக்காரர் கூட எந்த அணியினாலும் வாங்கப்படவில்லை என்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ரொம்ம்ம்ப நல்லா இருக்குங்க

நானும் ஆச்சரியப்பட்டு தான் போனேன்.நட்பிற்கு வழிகோலும் விளையாட்டுக்கள் இன்று அரசியல் சாயமேற்றப்பட்டு பணத்தை மட்டுமே மையமாக வைத்து ஆடப்பட்டு வருவது கேலிக்குரியதும்,கவலைக்குரியதுமான விஷயம்.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஏலத்தில் பாகிஸ்தான் ஆட்டக்காரர்களின் பெயர் அடங்கிய அட்டைகள் காண்பிக்கப்பட்ட போதெல்லாம் பணம் கொழுத்த அனைத்து அணிகளின் புரோ(அர)க்கர்கள் எல்லாம் மௌனம் மட்டுமே சாதித்தது நிச்சயமாக நாகரீகமான செயல் இல்லை.

பாக் ஆட்டக்காரர்களை இதை விட அதிகம் யாரும் கேவலப்படுத்தி விட முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்கெனவே அனைத்து அணிகளின் மனதில் இருந்திருக்குமானல் ஏ(ஓ)லமிடும் பி.சி.சி.ஐ இடம் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்திருக்கலாம்.பாக் வீரர்கள் கொச்சைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நிகழ்விற்கு பாக் அணித்தலைவர் அஃப்ரிடியும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மானங்கெட்ட பொழப்புக்கு 'இன்டியன் பிரிமீயர் லீக்'குன்னு பேர் வச்சதுக்கு பதில் 'இன்கம் பிரிமீயர் லீக்'குன்னோ இல்ல 'இன்சல்ட் பிரிமீயர் லீக்'குன்னோ வச்சிருக்கலாம்.

பாகிஸ்தானியரை எடுத்தா ஒருவேளை அவங்க விசா விஷயத்தில ஏதும் பிரச்சினை ஆகி இந்தியாவுக்கு வர முடியாம ஆயிருமாமாம் அதனால அந்த டீம் வச்சிருக்கவங்களுக்கு நஷ்டம் வந்திருமாம். இது நால தான் 'பாக்' காரங்கள எடுக்கலன்னு பேசிக்கிறாங்க

பணம் பத்து மட்டும் இல்ல பதினொன்னும் செய்யும் அப்படின்றது சரிதானே அப்போ.

4 comments:

Unmai said...

உலகத்தில இருக்கிற அவ்வளவு அயோக்கியதனத்தையும் பண்ணீட்டு இந்தியா ஒரு ஜனநாயக நாடு அப்படீன்னு சொல்லிக்கிறதில ஒரு பெருமை.

இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் அமெரிக்கன், "இந்திய ஜனாதிபதியா இருந்தா என்ன?, பாதுகாப்பு அமைச்சரா இருந்தா என்ன? எல்லாத்தையும் அவுத்துக்காட்டீட்டு போ" அப்படீங்குறான்!!

எட்வின் said...

Unmai சூப்பரா சொன்னீங்க போங்க.

பணம் பணம்னு திரியிறானுக. என்னைக்கு அடி வாங்கப் போறானுங்கன்னு தெரியல இந்த அரசியல்வா(வியா)திகளும் கிரிக்கெட் காரனுங்களும். அரசியல்காரன் தான் கிரிக்கெட்லயும் பெரிய பதவில இருக்கான்.

அவனுக வெக்கிறது தான் சட்டமாம்.

எங்கிட்டு போய் சொல்றதுக்கு. இதுல பாக் காரங்கள எடுக்காததுக்கு அரசு ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு ஜால்ரா வேற கவர்ன்மெண்டு கிட்ட இருந்து.

அடத்த்த்த்தூ

ரமேஷ் கார்த்திகேயன் said...

அவங்களுக்கு பிடிக்காதவர்களை ஏலத்தில் எடுக்கல

Thats all

GERSHOM said...

'இன்கம் பிரிமீயர் லீக்'குன்னோ இல்ல 'இன்சல்ட் பிரிமீயர் லீக்'குன்னோ வச்சிருக்கலாம்.
/// சரியா சொன்னீங்க!!!

Post a Comment

Related Posts with Thumbnails