February 13, 2010

காதலி(னா)ல் வீழ்ந்தேன்











நம் காதல்

வளர்பிறை போல்

வளரும் என்றாய்

நானும் நம்பினேன்...!


உன் காதல் வளர்பிறை ஆகி
நான் தேய்பிறை ஆகும் வரை.


உன் காதல் வளர்பிறை தான்

நான் தேய்பிறை ஆகியதால்

****

காதல்

நீடூழி வாழும் என்றாய்

நனவென்று மகிழ்ந்தேன்

நான் வீழ்ந்து

நின் காதல் வாழும் வரை

****

காதல் கண்ணாமூச்சி ஆட்டம் என

காதில் நீ கிசு கிசுத்தது

என் கண்களை கட்டி விட்டு
என்னை ஏமாற்றத் தானோ!

***

ஆம்...

காதலில் வீழ்ந்தேன்

காதலி(னா)ல் வீழ்ந்தேன்

[ஆனாலும் காதல் வாழ்ந்தது
அவளிடம் நான் வீழ்ந்ததால் !!! ]

7 comments:

அகல்விளக்கு said...

கவிதை அருமை...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காதல் கண்ணாமூச்சி ஆட்டம் என

காதில் நீ கிசு கிசுத்தது

என் கண்களை கட்டி விட்டு
என்னை ஏமாற்றத் தானோ!//


அசல், வேட்டை, தீ வி பி

அன்புடன் நான் said...

கவிதை நல்லாத்தான் இருக்கு.... இன்னும் கொஞ்சம்... செதுக்கலாம் என்பது என் எண்ணம்....
வாழ்த்துக்கள்.

எட்வின் said...

@ அகல்விளக்கு
நன்றி அன்பரே ; கவிதை என்று சொல்வதிற்கில்லை, கவிதை மாதிரியென்று சொல்லலாம் ;)

@ SUREஷ்
மருத்துவர் அய்யா அது என்னது தீ வி பி... புரியவில்லையே

@ சி.கருணாகரசு
உண்மை தான், சற்று அவசரத்தில் எழுதி விட்டேன்.

மதுரை சரவணன் said...

kaathal kavithaiyaanathu . muyarchchikku nanri vaalththukkal.

Unknown said...

வாழ்த்துக்கள் உங்க சொந்த கதையா

எட்வின் said...

@ Madurai Saravanan நன்றிங்க

@ V.A.S SANGAR கரிக்டா... சொன்னீங்க. சொந்த க(வி)தையே தான் ;)

Post a Comment

Related Posts with Thumbnails