February 22, 2010

யார்க்கரை யாரேனும் நினைவூட்டுங்கள்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக எப்படியோ தட்டுத்தடுமாறி இந்தியா டெஸ்ட் தொடரை சமன் செய்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தற்போது ஒருதின போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறங்கியுள்ளன.

இந்திய அணியின் மட்டைவீச்சை பத்தில் எட்டு ஆட்டங்களில் நம்பலாம். ஆனால் பந்துவீச்சு என்று வரும் போது பத்தில் ஐந்து ஆட்டங்களில் கூட நம்புவது கடினம் தான்.

மிக எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய பல போட்டிகளை மிகக் கடினமான போட்டிகளாக மாற்றுவதில் இந்திய அணியினருக்கு நிகர் வேறு எந்த அணியினரும் இல்லை என கூறலாம்.

இதற்கு உதாரணமாக கடந்த இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தையும், முதல் ஒருதின போட்டியையும் குறிப்பிடலாம்.

கிரிக்கெட்டில் tail enders என்பதாக குறிப்பிடப்படும் இறுதியில் மட்டை வீச வருகின்றவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு இந்தியர்கள் காட்டும் வேகம் இன்னமும் போதாது.

பலரையும் தோனி மாற்றி மாற்றி பந்து வீசச் செய்தாலும் கடந்த இரு போட்டிகளிலும் இறுதி வரை எந்த பலனும் இல்லை.

எவரும் yorker என்ற பந்துவீச்சு முறையை உபயோகித்ததாக எனக்கு நினைவில்லை. டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மாவும், ஒருதின போட்டியில் நெஹ்ராவும் சிலமுறை முயற்சி செய்திருக்கக்கூடும் அவ்வளவே. மறந்து விட்டார்களோ என்னமோ!

Tail enders ன் விக்கெட்டை எடுக்க yorker ஐ விட சிறந்த பந்துவீச்சு முறை வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

மற்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் yorkers பல நேரம் வியக்க வைக்கும். குறிப்பாக பிரெட் லீ, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷேன் பாண்ட், வால்ஷ் போன்றோர் இதில் கைதேர்ந்தவர்கள்.

இனிமேல், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பள்ளியில் படிப்பிப்பது போன்று யார்க்கர்-சிறுகுறிப்பு வரைக அல்லது யார்க்கர் விரிவான விளக்கமளிக்க என்பது போன்ற தேர்வுகள் அடிக்கடி வைக்க வேண்டியது தான் .

சிறந்த yorker பந்துவீச்சுகளின் காணொளி தொகுப்பு


yorker எவ்விதம் வீச வேண்டும் என்பது குறித்த காணொளி


2 comments:

டக்கால்டி said...

யோர்கர் நல்ல நினைவூட்டல்...
அப்படியே இன் ஸ்விங் பற்றியும் ஒரு இடுகையை போடுங்கள்.
இதையும் நமது பந்து வீச்சாளர்கள் மறந்தே விட்டார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யார்க்கர் போட வேண்டூமானால் வேகமும் நிதானமும் கலந்து இருக்கவேண்டும்.

நூழிலையில் புல் டாசாக மாறும் வாய்ப்பு இருக்கிறது..,

பயிற்சியில் யார்க்கர் முயற்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்..,

Post a Comment

Related Posts with Thumbnails