February 24, 2010

சச்சின் எனும் பெருமைமிகு இந்தியன்

அண்மை காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயரச் செய்தவர்களில் நான் அதிகம் வியந்தது ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் மற்றும் லியாண்டரைத் தான்.

இவர்கள் மூவருமே  ஏறக்குறைய ஒரே மாதிரியான உடலமைப்பும், ஒரே மாதிரியான நடவடிக்கைகளும் உடையவர்கள்.ஆர்ப்பாட்டாமோ, அகங்காரமோ இல்லாத அமைதியானவர்கள்.

இந்தியன் என சொல்வதில் மூவருமே அதிகம் மகிழ்ச்சி காண்கிறவர்கள்.

இவர்களில் சச்சின் செய்திருக்கும் சாதனைகளை எளிதில் எண்ணி விட முடியாது. இதோ இன்று பிப்ரவரி 24, 2010 ல் மீண்டும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கிறார். இவரது அனைத்து சாதனைகளையும் தனி ஒரு நபராக எவரேனும் முறியடிக்கவியலுமா என கூட தெரியவில்லை.

ஒருதின போட்டிகளில் இரட்டை சதமடிப்பது அத்தனை எளிதான விஷயமல்லவே. அதுவும் ஒருதின கிரிக்கெட் சரித்திரத்திலேயே முதன்முறையாக இரட்டை சதத்தை அடித்திருப்பது ஒரு இந்தியன் என்பதில் இந்தியருக்கு பெருமை தான்.

இரட்டை சதமடித்த பின் சச்சின் வானை நோக்கி நன்றி கூறியது மறைந்த அவரது தந்தைக்கா இல்லை இறைவனுக்கா என்பது அவருக்கே வெளிச்சம்.

எனினும் ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் அவர் உரைத்த கருத்துக்கள் இந்தியர் அனைவரையும் மீண்டும் பெருமைப்பட செய்த ஒரு விஷயம்.

இரட்டை சதத்தை குறித்து கூற முற்படுகையில், சச்சின் சில வினாடிகள் தாமதித்த போது அவரது தந்தைக்கு சமர்ப்பிப்பார் என நான் கருதினேன் . மாறாக இந்தியர் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக கூறியதில் இருந்து அவரது நன்மனதை இந்தியர் புரிந்திருக்கக் கூடும்.

இருபத்தொரு ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு இத்தனை ஆட்டங்கள் ஆடியதே மிகப்பெரும் சாதனை தான் இந்த சாதனை மன்னன் சச்சினுக்கு.

மன்னர்களுக்கு தான் கவிபாட வேண்டுமா! இதோ கிரிக்கெட் மன்னருக்கு நான் பாடும் சில வார்த்தைகள்!

நீ
உலக அரங்கில்
இந்தியாவின் புகழ்
உயரச் செய்தாய்

இனி
இந்தியா
உன் புகழை
உரக்கச் சொல்லும்
உரிமை கொள்ளும்

கிரிக்கெட் உலகை
உதற சொன்னவர்கள்
உன் கிரிக்கெட் மட்டையின்
பதிலால் - இன்று
பதிலற்று நிற்கிறார்கள்

இந்தியன் என்பதில்
இனிமை காணும் நீ
இன்று போல் என்றும்
(இந்தியனாய்) வாழ்க

"It's the passion of representing INDIA in International Cricket keeps me motivating all the time". இது சச்சின் ஒரு பேட்டியில் சொன்னது.

9 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

Hi. Good post. I like your way of narrating.

முடிஞ்சா இதையும் கொஞ்சம் பாருங்க

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக


சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

எட்வின் said...

தல, நீங்க இங்க லிங்க் போடுறதுக்கு முன்னாடியே உங்க பதிவ பாத்தேன், ஓட்டும் போட்டேன் நேத்தைக்கே

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஒருநாள் போட்டியில் சச்சினின் சாதனைகள் அப்படியே எழுதப் பட்டுவிடும். மற்றவீரர்களுக்கு அது எட்டாக்கனியே..,

அவரது சாதனைகளை எட்டவேண்டும் என்று யாரேனும் நினைக்கக்கூட முடியாது.

பத்து ஆண்டுகள் விளையாடும் உடல்தகுதி வாய்ந்த வீரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள்.

லக்ஷ்மன், டிராவிட் போன்று களத்தில் சுழன்று ஆடும் திறமை குறைவாக இருப்பவர்களால் பெரிய சாதனைகளை எட்டவே முடியாது,

200 என்பதை ஏதாவது ஒரு சிறிய மைதானத்தில் யாராவது எட்டலாம் . ஆனால் 47 சதங்கள், 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மிகசும் சிரமம். சேவக் போன்றவர்கள் இப்போதே ஓய்வைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சச்சின் ஆட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் சக ஆட்டக்காரர் நன்றாக விளையாடினால் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துக்கொண்டு இவர் நான் ஸ்ட்ரைக்கர் நிலைக்கு வந்து கொண்டே இருப்பார். அதுபோன்ற ஒரு மனநிலை யாருக்கும் வராது.

முகிலன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
சச்சின் ஆட்டத்தில் நான் கண்ட ஒரு விஷயம் சக ஆட்டக்காரர் நன்றாக விளையாடினால் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துக்கொண்டு இவர் நான் ஸ்ட்ரைக்கர் நிலைக்கு வந்து கொண்டே இருப்பார். அதுபோன்ற ஒரு மனநிலை யாருக்கும் வராது.

//

குறிப்பாக கங்குலி, லாராவுக்கு வராது, வரவே வராது..

jasmin said...

சச்சின் சாதனை நம் அனைவருக்கும் பெருமைதான் ஆசியான் கண்டத்தில் கிரிக்கட்டில் உலக சாதனை படைத்தவர் இருப்பது நமக்கள்ளம் பெருமை அனால் சச்சின் இந்த சாதனையுடன் தனது வியாட்டில் இருந்து ஓய்வு பெற்று இன்னும் சாதனை செய்ய துடித்துக்கொண்டு எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் வழி விட வேண்டும் சச்சினின் இந்தசாதனையை அவ்வளவு இலகுவில் யாரும் உடைக்க போவதில்லை ...மற்றவர்களுக்கு வழிவிட்டு கொடுப்பது தான் அடுத்து சச்சின் செய்ய வேண்டிய சாதனை

எட்வின் said...

@ SUREஷ்...

சரியாக சொன்னீர்கள். இத்தனை மன உறுதி, உடல் ஆரோக்கியம் உள்ள ஒரு கிரிக்கெட் வீரர் இனிமேல் வருவாரா என்பது சந்தேகம் தான்.

எட்வின் said...

@ முகிலன்...

கங்குலி ரொம்பவே மோசம், அதுவும் இறுதிப் பந்தில் ஒற்றை ஓட்டம் எடுத்து விட்டு அடுத்த ஓவரையும் எதிர்கொள்ள வகை பார்ப்பவர் அவர்.

உங்கள் வருகைக்கு நன்றி

எட்வின் said...

@ jasmin...

நன்றி.

உங்க யோசனையும் நல்லா தான் இருக்கு.

எனினும் அவர் ஓய்வு பெறுமளவிற்கு வயதாகி விட்டதாக தெரியவில்லை. கிரிக்கெட்டையே சுவாசிக்கும் அவர் விளையாட முடியும் வரை விளையாடட்டுமே.

இதுவரை அவர் கையில் கிட்டாத உலகக் கோப்பையை வெல்ல அவர் மீண்டும் ஒருமுறை முயற்சித்து தான் பார்க்கட்டுமே. :)

Post a Comment

Related Posts with Thumbnails