March 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா-JESSIE-நான்

இசை வெளியீட்டின் போதே அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் என்னையும் தீண்டி இருப்பதில் ஆச்சரியமில்லை, அதற்கு காரணங்கள் இல்லாமலுமில்லை. வெளிநாடு ஒன்றில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்பட பாடல்கள் 'விண்ணைத்தாண்டி வருவாயா' விற்காகத் தானிருக்கும்.

ஆஸ்கருக்கு பின்னர் வெளியாகிய ரஹ்மானின் முதல் பாடல்கள் என்பதால் பாடல்களும் அதிகம் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக ஹோசன்னா பலரை முணுமுணுக்கச் செய்திருந்தது. ஏனைய பாடல்களும் ரசிக்கும் படியாகவே இருந்தது.பாடல்களைக் குறித்த எனது எண்ணங்களை முந்தைய பதிவான இங்கே படிக்கலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா என்பதன் ஆங்கில எழுத்து வடிவம், நான் எதிர்பாராத போல/ஆனால் எப்போதும் எதிர்பார்க்கும் விதம் சரியான ஆங்கில எழுத்துக்களுடன் "VINNAITHAANDI VARUVAAYAA" என இருந்தது ஆச்சரியத்தை எற்படுத்தியிருந்தது. 


இதனை VINNAITHANDI VARUVAYA-"விண்ணை தண்டி வருவய" என கூட எழுதியிருக்கக் கூடும்(அப்படித்தான் அனைத்து திரைப்படத் தலைப்புகளும், பாடல்களும், பலரின் பெயர்களும் கூட எழுதப்பட்டு வருகின்றன. உதாரணம் சூப்பர் ஸ்டாரின் SIVAJI-சிவாஜி, இதனை 'சிவஜி' என்று வாசிப்பதா? இல்லை 'சிவாஜி' என்று வாசிப்பதா?)  

திரைப்படத்தில் நான் கவனித்த மற்றுமொரு விஷயம்... TITLE ஓடும் போது திரைப்பட கலைஞர்களின் பெயர்கள் தமிழில் வந்தால் அவற்றின் பிம்பம் ஆங்கிலத்திலும், ஆங்கில பெயர்களின் பிம்பம் தமிழிலும் வரும்படி வடிவமைக்கப்பட்டது.  இது இயக்குனரின் சிந்தனையா இல்லை வேறு எவரின் சிந்தனையா என்பது தெரியவில்லை. எனினும்... ரசிக்க வைத்தது.
த்ரிஷாவும், சிம்புவும், இயல்பாக நடித்திருப்பதாகத் தான் உணர்ந்தேன். குறிப்பாக த்ரிஷா Jessie கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.  காதலினால் வரும் வலிகளையும்; காதலை அடைய ஒரு பெண் எத்தனை விதமான தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கும் விதம் அருமை. உண்மையும் அதுவே. 

Jessie கதாபாத்திரம் என்னை அதிகம் பாதித்திருப்பதற்கு முக்கியமான வேறொரு காரணம் உண்டு. Jessie என்ற அதே பெயரில் இருக்கும் எனது நண்பி தான் அது.

அவரும் கேரளத்தைச் சார்ந்தவர் தான்; அவருக்கும் திரைப்படம் பிடிக்காது. அவள் பாராட்டின, (பாராட்டிவரும்) நட்புக்கு இணை இன்றுவரை ஏதுமில்லை. அவளது வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கிறேன். இன்று கூட அவளது பெற்றோர்கள் கனிவாக இருக்கிறார்கள்

ஏனோ...காதலிக்க வேண்டும் என அப்போது(கல்லூரி நாட்களில்) தோன்றவில்லை. Just Friends ஆ இருப்போம் என்ற விண்ணைத்தாண்டி வருவாயாவின் வசனத்திற்கு ஏற்ப இன்றும் நண்பர்களாக இருந்து வருகிறோம்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. காரணம்... கதாநாயகனும், நாயகியும் ஒன்று சேரவில்லையென்பதே!

எனினும் காதலின் வலியும், அதனை இயக்குனர் சொல்லியிருந்த விதமும், நான் அதிகம் ரசிக்கும் ஆலப்புழையின் அழகும், பின்னணி இசையும், த்ரிஷாவிற்காக ஒலித்த 'சின்மயி'யின் குரலும் எனக்கு பிடித்திருந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் மெல்லிய பின்னணியில் வரும் 'நி ச ரி ச' Humming ற்கு பிறகு ரஹ்மானின் இசையில் நான் அதிகம் மயங்கியது ஹோசன்னா-ஏன் இதயம் உடைத்தாய் Humming ற்குத் தான்.

 ஜீன்ஸ்-'நி ச ரி ச'
ஆலப்புழையின் அழகு
இது JESSY எனக்களித்த அவளது கைவண்ணங்கள்

March 23, 2010

ஐ.பி.எல் அட்டகாசம்

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் ஆட்டங்களின் புகைப்படங்களைக் கொண்டு புனையப்பட்டப் புகைப்பட பதிவு.

எத பாத்தாலும் பாக்கலைன்னாலும் கடைசி படத்த மட்டும் தவறாம பாத்திட்டு போங்க.Mongoose பேட் குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்


March 15, 2010

மன அழுத்தம் தரும் நாகரீக வாழ்க்கை

arஎதுவும் எழுதும் மனநிலையில் இல்லாதிருப்பதால் தற்போதைய மனநிலையை உணர்த்தும் முந்தைய இரண்டு பதிவுகளை மீண்டும் பதிவு செய்கிறேன்.
'கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன், அன்று தூக்கம் வந்ததே அது அந்த காலமே' 'மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கமில்லையே அது இந்த காலமே' என்ற கவிஞ்ர் வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் இன்று எத்தனை பேரின் வாழ்க்கையில் நிஜமாயிருக்கிறது என கேட்டால் பலர் ஆம் எனவே சொல்வார்கள்.

மனித வாழ்க்கை இன்று எத்தனை மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது என்பதற்கு பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும், பொறாமைகளுமே சாட்சி.

சில மாதங்கள் முன்னர் வேலை நிரந்தரமாகாத காரணத்தால் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேரிட்டது.

திருமணமான அன்று இரவே முதலிரவு சரியாக அமையாத காரணத்தால் மாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சமீபத்தில் செய்தியை காண நேரிட்டது.

சிறிய விஷயங்களில் கூட மன நிறைவு அடையவில்லை என்றாலோ, தோல்வியடைந்து விட்டாலோ மீண்டும் அதனை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தற்கொலை, பழிவாங்குதல் என திசைமாறுவது சமூகத்தில் இன்று பெருகி வருவதும் நல்லதல்லவே.

பணம் பெருக பெருக இன்று பலருக்கு குணம் சிறுத்துப் போவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பணம் பெருக தனி மனித தேவைகளும், குடும்பத் தேவைகளும் இன்றைய இயந்திர உலகத்தில் பெருகவே செய்கின்றன.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ஒரு சராசரி மனிதனுக்குத் தான் இன்று எத்தனை commitments,எத்தனை deadlines, எத்தனை stress.

நகரத்தில் பணி செய்பவர்களுக்கு ... சரியான சமயத்தில் பேருந்தையோ, மெட்ரோ ரயிலையோ பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்,போக்குவரத்து நெரிசல் என இன்னும் மேலதிக நெருக்கடிகள்.

சம்பள நாளிலும் அதற்கு அடுத்த சில நாட்களிலும் மட்டுமே நண்பர்களானாலும் உறவினர்களானாலும் சிரித்துப் பேசுவார்கள் என எத்தனை பேர் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கார்கள் என்பதும் உண்மையே.

அயல் நாட்டில் இருப்பவர்களை கேட்டால்... மாதத்தின் முதல் வாரம் மட்டும் (பணம் கேட்டு)வரும் தொலைபேசி அழைப்புகள் எண்ணற்றவையாக இருக்கும் என சொல்வார்கள்

இன்று மனிதம் என்னும் புனிதம் மறைந்து பணம் பெரிதாகிப் போனது மனிதத்தை எங்கே கொண்டு சேர்க்கும் என தெரியவில்லை.

உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா? சந்தேகமாயிருக்கிறது! என இயக்குனர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், அவரின் வரிகளில் தான் எத்தனை உண்மை !

2009 ல் நான் கிறுக்கிய சில வரிகள்

தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!!

ரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்ரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

தில் அளிக்கவே-எதிரொலியால்
தில் அளிக்கவே படைக்கப்பட்ட னை உயர மலைகளும்

ருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்கலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

திலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்


ல்லாத ஒன்றை
ன் தேடுகிறாய் என
.சி அறையின் சுவர்கள்
ளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில்

March 11, 2010

Wayne Rooney என்னமா ஆடுறான்யா

என்னமா form ல இருக்கான்னு கிரிக்கெட்ல சொல்வாங்க, அந்த மாதிரியான ஒரு formல் இருக்கிறார் இங்கிலாந்து மற்றும் மேன்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஆறு வருடமாக கால்பந்து ஆடி வரும் 24வயது மட்டுமே ஆன வேய்ன் ரூனி-Wayne Rooney.

நேற்று ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான இரண்டாவது கட்ட சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அவர் ஆடியதை பார்த்து விட்டு பொடியன் என்னமா ஆடுறான்யா அப்பிடின்னு நேத்து நண்பர் ஒருவர் ஆச்சரியப்பட்டார்.

17 வயதாக இருக்கும் போது ரூனி இங்கிலாந்து club களில் ஒன்றான Everton அணிக்காக ஆடுவதில் இருந்து அவரை கவனித்து  வருகிறேன். கோல் கம்பத்திற்கு வெகு தொலைவில் இருந்து அவர் உதைத்த பந்து கோல் வலைக்குள் பாய்ந்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த 2009-2010 சீசனில் இதுவரை ஆடிய 37 ஆட்டங்களில் 30 கோல்கள் அடித்திருக்கிறார்.  நேற்றைய ஆட்டத்தில் ஏ.சி.மிலனின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் டேவிட் பெக்கம், ரொனால்டினியோ இவர்களை தனது ஆட்டத்தால் ஓரம் கட்டினார் என்றாலும் மிகையல்ல.

மேன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் இங்கிலாந்தின் நட்சத்திரமுமான டேவிட் பெக்காம் ஏறக்குறைய 7ஆண்டுகளுக்கு பின்னர் Old Trafford ல் இருக்கும் மேன்செஸ்டர் யுனைட்டட் கிளப்பின் சொந்த மைதானத்தில், முதன்முறையாக அவர்களுக்கு எதிராக ஆட வந்திருந்தார்.

  
என்றாலும் அவர் இறுதி 25 நிமிடங்கள் தான் ஆடினார். அவர் மைதானத்திற்குள் நுழைகையில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பும், ஆடுகளத்தில் நுழைகையில் மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறப்பான வரவேற்பு அளித்ததும் பெக்கம் பெருமைப்படக்கூடிய விஷயம். (பெக்கம் ஆடுகிறார் என்பதற்காகவே மேன்செஸ்டர் யுனைட்டட் கிளப்பின் ரசிகனானவன் நான்)

ஆட்ட முடிவில் இருக்கையில் அமர்ந்திருந்த ரூனி, எதிரணி வீரராயிருந்தாலும் மூத்த வீரர் என்ற நிலையில் பெக்கமை தேடிச்சென்று கைகொடுத்தது பெக்கம் மீது ரூனி வைத்திருக்கும் மரியாதையை காட்டியது.

இன்னும் இரு மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்கள் துவங்கவிருக்கையில் ரூனியின் இதே ஆட்டம் தொடருமானால், ஜான் டெரி, ஸ்டீவன் ஜெரார்டு, ஃப்ராங்க் லாம்பார்ட், பெக்கம் கூட்டணியுடன் நிச்சயம் சிறப்பாக ஆடும் வாய்ப்புள்ளது.

ரூனியின் சிறந்த கோல்களின் காணொளி

March 09, 2010

நட்பும், சுயநலமும், பின்னே நானும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நட்பு என்ற மூன்று எழுத்துகளுக்குள் அடங்கியிருக்கும் விஷயங்கள், பரிமாற்றங்கள், ஏமாற்றங்கள், விவரிக்கயியலாதவை.

முகமறிந்த நட்பு, முகமறியா நட்பு, பேனா நட்பு என நட்பு பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கூட கூறலாம்.

அதிலும் குறிப்பாக வலையுலக/பதிவுலக நட்பு இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேசங்களில், வேறு வேறு பணிப்பழுக்களில் இருந்தாலும், முகமே தெரியாதவர்களாகக் கூட இருந்தாலும் நலம் விசாரிப்பதும். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சில நேரங்களில் வியப்பாகவே இருக்கிறது.

நட்பு பல நேரங்களில் நலமாக தோன்றினாலும் சில நேரங்களில் சுயநலமாக அது மாறிவிடுகையில் சுலபமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

நட்பிற்கு இணங்காதோர்; நட்பு பாராட்டாதோர் என இவ்வுலகில் எவரும் இருக்கவியலாது. அந்த வகையில் தான் நானும் நட்பை பேணி வந்திருக்கிறேன், வருகிறேன், வருவேன்!

எனக்கு நட்பு, நண்பன்/நண்பி என வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் இரண்டாம் பட்சம் தான்.

நண்பர்கள் கேட்கும் உதவிகளை செய்வதும், பல நேரங்களில் அவர்கள் கேட்காமலேயே உதவிகள் செய்வதும் தான் எனது வழக்கம்.

நான் உதவி கேட்டு எனக்கு செய்யாத நண்பர்களுக்கு கூட அவர்கள் தேவையிலிருக்கும் போது உதவிகள் செய்து வந்திருக்கிறேன்.

இப்படி பலருக்கும் பல உதவிகள் செய்யப் போய் இன்று சில நண்பர்களை இழந்துமிருக்கிறேன். இழந்திருக்கிறேன் என சொல்வதை விட அவர்கள் விலகிச் சென்றிருக்கிறார்கள் என கூறலாம்.

ஒருவருக்கு உதவி செய்யப் போக அதனை பிடிக்காத மற்றவர் என்னுடன் கோபித்து கொண்டு விலகிச் சென்றது சமீபத்திய நிகழ்வு.

இதனை எழுதுகையில்... "அன்பிற்கு பொறாமையில்லை" என்ற விவிலிய வாசகம் நினைவிற்கு வருகின்றது

அவருக்கு நான் சொல்லுவதெல்லாம் நான் அவர்களிடம் பாராட்டும் நட்பை ஏன் பார்க்கிறீர்கள், ஏன் கோபம் கொள்(ல்)கிறீர்கள். நான் உங்களிடம் எப்படி நட்பு பாராட்டுகிறேன் என பார்த்தால் மட்டும் போதுமானதல்லவா! (நட்பை நாடி வா, நான் காத்திருக்கிறேன்)

நீ அவனிடம் பேசினால் நான் உன்னுடன் பேச மாட்டேன். அவன் வந்தால் நான் வரமாட்டேன் என்ற சுயநல எண்ணம் தான் இன்று பல நட்புகள் முறிய காரணமாயிருக்கிறது.

நட்பைப் பாராமல் சுயநலத்தை மட்டுமே பார்க்கிறவர்களும் வெறுப்பை விதைக்கிறவர்களும் அதன் பலனை அறுவடை செய்தே வந்திருக்கிறார்கள் என்பது தான் நான் எனது வாழ்க்கையில் கண்டு கொண்டிருக்கும் நிஜம்.

நண்பனை சிநேகியுங்கள், நண்பனின் நண்பனையும் சிநேகியுங்கள். நல்மனிதனாக வாழுங்கள். நட்பை வாழ்த்துங்கள். மனிதம் வாழட்டும்.

'சாமி'யாருங்க!!!

சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு பதில் சந்தேகம் தான், என்பதே.

இத்தனை சாமியார்கள், கள்ளப்போதகர்களைக் கண்ட பின்னர் கூட தமிழகமும், தமிழனும், தமிழினமும் இன்னமும் அதே மதமென்னும் சாக்கடையில் வீழ்ந்து கிடக்கத்தான் செய்கிறது.

சில தினங்கள் முன்பு வரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை.

நல்லது எது! கெட்டது எது! என வேறுபிரிக்க தெரிந்த நம் மகா ஜனங்கள் ஏன் மனிதர்களை கடவுளாக உருவகம் செய்தனர் என்பது தான் கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயம்.

இவ்வுலகில் நல்லவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை என்ற விவிலியத்தின் ஒரு வாக்கு தான் நினைவிற்கு வருகிறது.

ஒருவர் ஒரு விஷயத்தை செய்த உடன் அது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் பிற மனிதர்களை நாடித் தேட வேண்டும்; ஏன் சாமிகளாக அவர்களை கருத வேண்டும்?அவர்களிடமிருந்து வாழும் வழிக்கான நெறிமுறையை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்; பின்னர் எதற்காக கூப்பாடு போட வேண்டும்?

நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே.

பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது தான் எனக்கு சரியெனப் படுகிறது.

மனிதனுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது தான், ஆனால் அவனை கடவுளென்றோ, சாமியென்றோ உருவகப்படுத்துவது கடவுள் என ஒருவர் இருப்பாரானால் அது அவருக்கு ஏற்படுத்தும் இழுக்கு என்பதாகவே பொருள் கொள்ள தோன்றுகிறது.

இன்னொரு விஷயமும் இந்த நேரத்தில் கேட்கத் தோன்றுகிறது, கடவுள் எந்த மதத்தை சார்ந்தவர்?!?


March 04, 2010

என்று தணியும் இந்த இலவச மோகம்

தேர்தல் வந்திட்டா போதும் உடனே இந்தியா ஒளிர்கிறது, India Shines, இந்தியாவ ஒளிர வைப்போம் அப்பிடி இப்பிடின்னு இந்த அரசியல்வா(வி)யாதிகள் சொல்ல ஆரம்பிச்சிருவானுக.

மத்த நேரங்கள்ல எப்பிடி எங்க இருந்து எத கறக்கலாம் இல்ல யார எப்போ கவுக்கலாமுன்னு யோசிக்கிறது மட்டும் தான் பொழப்பா இருக்குது இன்றைய பெரும்பாலான அ.வியாதிகளுக்கு.

ஆமாய்யா ஆமா இந்தியா நல்லாவே ஒளிருது, இனியும் ஒளிரத்தான் போகுது இன்னைக்கு உத்திரபிரதேசத்தில நடந்தத பாத்தா.

வறுமையால் இந்தியா ஒளிர்வதும், இலவசங்களுக்காக மக்கள் மடியும் அவலமும் வாடிக்கையாகி போய் விட்டது இந்தியாவில்.

இன்று உத்திரப்பிரதேச ஆஸ்ரமம் ஒன்றில் நடைபெற்ற சமய விழாவில் இலவச துணிமணிகளையும், பாத்திரங்களையும் பெறச்சென்றவர்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 26 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 70 பேர் மடிந்திருக்கிறார்கள்.

இலவசமாக இது தான் மிஞ்சியிருக்கிறது இறுதியில்

ஒவ்வொரு வருடமும் இந்த இலவச விநியோகம் அந்த ஆஸ்ரமத்தில் நடைபெற்று வருவதாகவும் ஆனால் இந்த ஆண்டைப் போல் ஜனக்கூட்டத்தை எந்த வருடமும் பார்த்ததில்லை என விழா ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் இந்தியா எந்த அளவிற்கு ஒளிர்கிறது, வறுமையை ஒழிக்கிறது என்பது நன்கு புரியும்.

இலவசங்களை நம்பியே எத்தனை காலம் இந்தியர்கள் காலங்களை ஓட்டுவார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் இலவசத்திலும் காசு பார்க்கும் கயவர்கள் தான் அதிகம்.

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சியை அளித்து விட்டு கேபிள் இணைப்பை மட்டும் காசு கொடுத்து வாங்க வைக்கும் வியாபார யுக்தி திராவிட முதியவர் ழகத்தை நடத்துபவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

இலவசங்களைக் குறித்து பெயர் தெரியாத ஒருவர் கவிதை வடிவில் இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் எழுதியிருந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இதனை எழுதியவர் எவர் என்று எவரேனும் கூறினால் பெரும் உதவியாக இருக்கும்.

----

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்

1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா?

தமிழ் நாட்டுக் குடிமகன்

நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,

எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக சிரித்தபடி உரைத்தார்,

மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,

பெண் பருவமடைந்தால் திருமண
உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,

நான் எதற்கு உழைக்க வேண்டும்!!

வியந்து போனேன் நான்,

என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்
இலவசம் நின்று போனால் உன் நிலை!!

உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!

March 03, 2010

விக்கிபீடியாவும் நானும்

வழக்கமாக கட்டுரைகள் எழுதும் முன்னர் அதற்கு ஆதாரமான தகவல்களைத் திரட்டுவது எனது வழக்கம்.

ஆங்கில கட்டுரைகளைத் தான் பெரும்பாலும் மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த வகையில் கிரிக்கெட் குறித்த எனது அனைத்து கட்டுரைகளுமே cricinfo அல்லது wikipedia தளத்தின் மேற்கோள்களோடு தான் இருக்கும்.

2008 ல் சச்சின் தனது 19 ஆண்டு கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்த போது எனது அனுபவங்களையும் ஆங்கில wikipedia மற்றும் cricinfo வின் தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு சச்சின் டெண்டுல்கரின் 19ஆண்டு கால கிரிக்கெட் பயணம் என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.

சமீபத்தில் அந்த கட்டுரையின் பெரும்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை என்ற தலையங்கத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

அதோடு மேற்கோள்களில்  rediff, cricinfo என்ற வரிசையில் மூன்றாவதாக எனது வலைப்பூவின் சுட்டியையும் அளித்திருக்கிறார்கள்.

வழக்கமாக விக்கிபீடியாவில் எவர் வேண்டுமானாலும் தகவல்களைத் தொகுக்க முடியும். அந்த விதத்தில் எந்த புண்ணியவாளனோ எனது மொழிபெயர்ப்பை இணைத்திருக்கிறார் எனவும் இதற்கு பொருள் கொள்ளவியலும்; அல்லது விக்கிபீடியாவினரே கூட தொகுத்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.

விக்கிபீடியாவிலிருந்து எனது வலைப்பூவிற்கு சிலரின் வருகை இருக்கவே என்னவென்று அலசியதில் சிக்கிய விஷயம் இது.

ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை தமிழ் விக்கி இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

விக்கிபீடியாவிற்கும், எனது மொழிபெயர்ப்பை இணைத்தவருக்கும் நன்றிகள்.
----

பி.கு:

விக்கிபீடியா நடுநிலையின்றி செயல்படுகிறது என்றும் தகவல்களை சரிவர ஆராயாமல் இணைக்கிறது என்றும் பல கருத்துகள் நிலவி வருகின்றன. அது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

அது ஒருபுறம் இருந்தாலும், ஆங்கிலத்தை ஒப்பிடுகையில், இணையத்தில் கல்வி சம்பந்தமான தமிழ் கட்டுரைகள் வெகு சிலவே என வலைப்பதிவரும், எழுத்தாளருமான பத்ரி அவர்கள் கடந்த வருடம்  http://thoughtsintamil.blogspot.com/2009/06/blog-post_5808.html என்ற பதிவில் ஆதங்கப்பட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்தகைய குறையை போக்க வலைப்பதிவர்களும், எழுத்தாளர்களும் முன்வந்தால் இன்னும் சிறப்பான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்க வாய்ப்பாக அமையும்.

March 02, 2010

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்-ஒரு பார்வை


வேன்கோவர், கனடாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 28 உடன் முடிவுக்கு வந்திருக்கின்றன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில நாடுகள் குறிப்பாக ரஷ்யா முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் போல அதிகம் பதக்கங்கள் பெறவில்லையாம்(நமக்கு இதெல்லாம் புதுசு). அதற்காக அந்த நாட்டு ஒலிம்பிக் பயிற்சாளர் உள்ளிட்ட பெருந்தலைகளை பதவி விலகவும் கோரியிருக்கிறார் ரஷ்ய பிரதமர். இந்தியாவில் இப்படி செய்வார்களா!!!

இந்த வருட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே சரியான பனிப்பொழிவில்லாமை; சரியான முன்னேற்பாடுகள் இல்லாமை;  Luge எனப்படும் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, ஜியார்ஜியா நாட்டைச் சார்ந்த  Nodar Kumaritashvili என்ற வீரரின் மரணம் என பிரச்சினைகளும் ஆரம்பித்து விட்டன.

Luge சறுக்கும் போட்டியில் இந்தியரான சிவா கேசவன் என்பவரும்; Cross-country எனும் போட்டியில் Lundup, Tashi என்பவரும்; Alpine Skiing ல் Namgial, Jamyang என்பவரும் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது (எனக்கு :)) புதிய தகவல்.

Nodar Kumaritashvili விபத்தின் காணொளி
இந்தியாவின் சார்பாக மூன்று பேர் மட்டுமே பங்கு கொண்ட இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை

இந்தியாவும் இதில் பங்கேற்றிருந்தது என்பது பதக்கப்பட்டியலைப் பார்த்த பின்னர் தான் அறிய முடிந்தது. இந்திய ஊடகங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அளித்த முக்கியத்துவம் மிகக் குறைவே!

பதக்கப்பட்டியலுக்கு இங்கே க்ளிக்குங்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் புகைப்படங்கள் மற்றும் நிறைவு விழா புகைப்படங்களுக்கு இந்த புகைப்பட பதிவை பார்க்கவும் அல்லது Yahoo ன் இந்த தளத்தைப் பார்க்கவும்

Vancouver குளிர்கால ஒலிம்பிக்கும் கூகுளும்,புகைப்படங்களும்


வேன்கோவர், கனடாவில் பிப்ரவரி 12 ஆம் தேதி துவங்கிய  குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 28 உடன் முடிவுக்கு வந்திருக்கின்றன.

கனடாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னரே கூகுள் அதன் முதல் பக்கத்தில் ஒலிம்பிக் சம்பந்தமான புகைப்படங்களைக் கொண்டு Google என வண்ணமயமாக எழுதியிருந்தது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டைக் குறிக்கும் விதமாக Google ன் முதல் பக்கம் அமைந்திருந்தது.

அந்த படங்களையும் ஒலிம்பிக்கின் மற்ற சில படங்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

Related Posts with Thumbnails