March 09, 2010

நட்பும், சுயநலமும், பின்னே நானும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நட்பு என்ற மூன்று எழுத்துகளுக்குள் அடங்கியிருக்கும் விஷயங்கள், பரிமாற்றங்கள், ஏமாற்றங்கள், விவரிக்கயியலாதவை.

முகமறிந்த நட்பு, முகமறியா நட்பு, பேனா நட்பு என நட்பு பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று கூட கூறலாம்.

அதிலும் குறிப்பாக வலையுலக/பதிவுலக நட்பு இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேசங்களில், வேறு வேறு பணிப்பழுக்களில் இருந்தாலும், முகமே தெரியாதவர்களாகக் கூட இருந்தாலும் நலம் விசாரிப்பதும். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சில நேரங்களில் வியப்பாகவே இருக்கிறது.

நட்பு பல நேரங்களில் நலமாக தோன்றினாலும் சில நேரங்களில் சுயநலமாக அது மாறிவிடுகையில் சுலபமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

நட்பிற்கு இணங்காதோர்; நட்பு பாராட்டாதோர் என இவ்வுலகில் எவரும் இருக்கவியலாது. அந்த வகையில் தான் நானும் நட்பை பேணி வந்திருக்கிறேன், வருகிறேன், வருவேன்!

எனக்கு நட்பு, நண்பன்/நண்பி என வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் இரண்டாம் பட்சம் தான்.

நண்பர்கள் கேட்கும் உதவிகளை செய்வதும், பல நேரங்களில் அவர்கள் கேட்காமலேயே உதவிகள் செய்வதும் தான் எனது வழக்கம்.

நான் உதவி கேட்டு எனக்கு செய்யாத நண்பர்களுக்கு கூட அவர்கள் தேவையிலிருக்கும் போது உதவிகள் செய்து வந்திருக்கிறேன்.

இப்படி பலருக்கும் பல உதவிகள் செய்யப் போய் இன்று சில நண்பர்களை இழந்துமிருக்கிறேன். இழந்திருக்கிறேன் என சொல்வதை விட அவர்கள் விலகிச் சென்றிருக்கிறார்கள் என கூறலாம்.

ஒருவருக்கு உதவி செய்யப் போக அதனை பிடிக்காத மற்றவர் என்னுடன் கோபித்து கொண்டு விலகிச் சென்றது சமீபத்திய நிகழ்வு.

இதனை எழுதுகையில்... "அன்பிற்கு பொறாமையில்லை" என்ற விவிலிய வாசகம் நினைவிற்கு வருகின்றது

அவருக்கு நான் சொல்லுவதெல்லாம் நான் அவர்களிடம் பாராட்டும் நட்பை ஏன் பார்க்கிறீர்கள், ஏன் கோபம் கொள்(ல்)கிறீர்கள். நான் உங்களிடம் எப்படி நட்பு பாராட்டுகிறேன் என பார்த்தால் மட்டும் போதுமானதல்லவா! (நட்பை நாடி வா, நான் காத்திருக்கிறேன்)

நீ அவனிடம் பேசினால் நான் உன்னுடன் பேச மாட்டேன். அவன் வந்தால் நான் வரமாட்டேன் என்ற சுயநல எண்ணம் தான் இன்று பல நட்புகள் முறிய காரணமாயிருக்கிறது.

நட்பைப் பாராமல் சுயநலத்தை மட்டுமே பார்க்கிறவர்களும் வெறுப்பை விதைக்கிறவர்களும் அதன் பலனை அறுவடை செய்தே வந்திருக்கிறார்கள் என்பது தான் நான் எனது வாழ்க்கையில் கண்டு கொண்டிருக்கும் நிஜம்.

நண்பனை சிநேகியுங்கள், நண்பனின் நண்பனையும் சிநேகியுங்கள். நல்மனிதனாக வாழுங்கள். நட்பை வாழ்த்துங்கள். மனிதம் வாழட்டும்.

5 comments:

Chitra said...

நீ அவனிடம் பேசினால் நான் உன்னுடன் பேச மாட்டேன். அவன் வந்தால் நான் வரமாட்டேன் என்ற சுயநல எண்ணம் தான் இன்று பல நட்புகள் முறிய காரணமாயிருக்கிறது.


......... வேதனையான விஷயம். நட்பின் ஆழத்தை புரிந்து கொள்ளாதவர்களின் செயல். அதை conditional love or possessiveness or jealousy என்று என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், வேதனை தான்.

பழமைபேசி said...

நன்றி!

டக்கால்டி said...

சிலவேளை அதீத எதிர்பார்ப்பும் கூட நட்பு முறிய காரணமாகி விடுகிறது.
நான் இப்போதெல்லாம் நண்பர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் உதவி கேட்க தயங்குவதும் இல்லை. உதவுவதும், முடியாமல் போவதும் அவரவர் சூழ்நிலைகளைப் பொருத்து என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

காதலுக்கு மட்டுமே மரியாதை தரும் இந்த காலத்தில்...
நட்பிற்கும் மரியாதை தரும், உங்களை போன்ற நல்ல இளைஞர்களுக்கு..
என் வாழ்துக்கள் ....

Post a Comment

Related Posts with Thumbnails