March 11, 2010

Wayne Rooney என்னமா ஆடுறான்யா

என்னமா form ல இருக்கான்னு கிரிக்கெட்ல சொல்வாங்க, அந்த மாதிரியான ஒரு formல் இருக்கிறார் இங்கிலாந்து மற்றும் மேன்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஆறு வருடமாக கால்பந்து ஆடி வரும் 24வயது மட்டுமே ஆன வேய்ன் ரூனி-Wayne Rooney.

நேற்று ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான இரண்டாவது கட்ட சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அவர் ஆடியதை பார்த்து விட்டு பொடியன் என்னமா ஆடுறான்யா அப்பிடின்னு நேத்து நண்பர் ஒருவர் ஆச்சரியப்பட்டார்.

17 வயதாக இருக்கும் போது ரூனி இங்கிலாந்து club களில் ஒன்றான Everton அணிக்காக ஆடுவதில் இருந்து அவரை கவனித்து  வருகிறேன். கோல் கம்பத்திற்கு வெகு தொலைவில் இருந்து அவர் உதைத்த பந்து கோல் வலைக்குள் பாய்ந்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த 2009-2010 சீசனில் இதுவரை ஆடிய 37 ஆட்டங்களில் 30 கோல்கள் அடித்திருக்கிறார்.  நேற்றைய ஆட்டத்தில் ஏ.சி.மிலனின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் டேவிட் பெக்கம், ரொனால்டினியோ இவர்களை தனது ஆட்டத்தால் ஓரம் கட்டினார் என்றாலும் மிகையல்ல.

மேன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் இங்கிலாந்தின் நட்சத்திரமுமான டேவிட் பெக்காம் ஏறக்குறைய 7ஆண்டுகளுக்கு பின்னர் Old Trafford ல் இருக்கும் மேன்செஸ்டர் யுனைட்டட் கிளப்பின் சொந்த மைதானத்தில், முதன்முறையாக அவர்களுக்கு எதிராக ஆட வந்திருந்தார்.

  
என்றாலும் அவர் இறுதி 25 நிமிடங்கள் தான் ஆடினார். அவர் மைதானத்திற்குள் நுழைகையில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பும், ஆடுகளத்தில் நுழைகையில் மைதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறப்பான வரவேற்பு அளித்ததும் பெக்கம் பெருமைப்படக்கூடிய விஷயம். (பெக்கம் ஆடுகிறார் என்பதற்காகவே மேன்செஸ்டர் யுனைட்டட் கிளப்பின் ரசிகனானவன் நான்)

ஆட்ட முடிவில் இருக்கையில் அமர்ந்திருந்த ரூனி, எதிரணி வீரராயிருந்தாலும் மூத்த வீரர் என்ற நிலையில் பெக்கமை தேடிச்சென்று கைகொடுத்தது பெக்கம் மீது ரூனி வைத்திருக்கும் மரியாதையை காட்டியது.

இன்னும் இரு மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்கள் துவங்கவிருக்கையில் ரூனியின் இதே ஆட்டம் தொடருமானால், ஜான் டெரி, ஸ்டீவன் ஜெரார்டு, ஃப்ராங்க் லாம்பார்ட், பெக்கம் கூட்டணியுடன் நிச்சயம் சிறப்பாக ஆடும் வாய்ப்புள்ளது.

ரூனியின் சிறந்த கோல்களின் காணொளி

2 comments:

Chitra said...

என்னமா பதிவு போட்டுருக்காங்கயா!

எட்வின் said...

வந்ததுக்கு நன்றிங்க Chitra அக்கா. ரூனி குறித்தும் பெக்கம் குறித்தும் பகிர வேண்டுமென கருதி தான் இந்த பதிவு. மீண்டும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails