April 18, 2010

இப்படியும் சில மனிதர்கள்

காலங்கள் கடந்தாலும், காட்சிகள் மாறினாலும், கணினி மயமானாலும் மனிதர்கள் நாங்கள் இன்னமும் காட்டானாகவே இருப்போம் என வரிந்துக் கட்டிக்கொண்டு இருப்பவர்களை என்னன்னு சொல்றது.

மனுஷன் கணினி உலகத்திற்கு மாறிய பின்னரும்,கணினிய வைக்கிறதுக்குக் கூட வாஸ்து பாத்து தான் வைக்கிறான் இன்னைக்கு.

இப்படித்தான் கடந்த வருடம் நண்பர் ஒருவர் அவரது கடையிலிருக்கும் கணினியை வாஸ்துப்படி வேறு இடத்தில் வைத்தார். அதன் பின்னர் இரண்டே மாதங்களில் கடையை மூடுமளவிற்கு வந்ததில் இருந்து வாஸ்து என்றால் இப்போதெல்லாம் வாயே பேசாமல் இருக்கிறார்.

பூனை குறுக்கே வந்தால் நல்ல சகுனமில்லை; பதிமூன்றாம் தேதியோ சனிக்கிழமைகளிலோ விழா ஏதும் எடுத்தால் நல்லதில்லை; நல்ல விஷயத்திற்கு கிளம்பும் முன்னர் விதவைப்பெண் வந்தால் ராசியில்லை; இப்படி எத்தனை இல்லை இல்லைகள் தான் நம்மவர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறை தான் குருட்டு நம்பிக்கைகளுக்கும், மூட பழக்கவழக்கங்களுக்கும் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்றால் இன்றைய தலைமுறை நவீன யுக்திகளின் மூலம் அதே குருட்டு நம்பிக்கைகளில் தான் மீண்டும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ அனுப்பிவிட்டு இதனைக் குறைந்தது பத்து பேருக்காவது அனுப்பினால் நல்லது அல்லது கேட்டது நிகழும் எனவும் அப்படி அனுப்பவில்லையென்றால்   கெட்டது நிகழும் எனவும் வரும் தொல்லைகள் தினம் தினம் பெருகி வருகின்றன.

அப்படியென்றால் அனைவரும் மின்னஞ்சலையோ அல்லது குறுந்தகவலையோ மட்டும் பிறருக்கு (forward) அனுப்பிவிட்டு சும்மா இருந்தால் செலவச்சீமான்கள் ஆகிவிடலாம் போல. ஒவ்வொரு கிராமத்திலும் கணினி வசதியும் இணைய வசதியும் செய்து கொடுத்தால் போதுமானது; வறுமை ஒழிப்பு திட்டமெல்லாம் தேவையே இல்லை. இத யாரும் செய்யமாட்டேன்றாங்கப்பா.

இப்படியும் சில மனிதர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில என்பதை விட பல என்று கூட கூறலாம். தினம் தினம் மின்னஞ்சலும் குறுந்தகவலும் செய்யும் நம் சக ஜீவிகளே இதற்கு உதாரணம்.

2 comments:

கிறிச்சான் said...

இப்படியும் சில காட்டான்கள்!!!

13 ஆம் தேதி நல்லதில்லன்னு சொல்றவங்களுக்காக தான் நீங்க அந்த தேதில கல்யாணம் பண்ணுணீங்களா சார்? உங்க முற்போக்கு சிந்தனை பிடிச்சிருக்கு!!!

////ஒவ்வொரு கிராமத்திலும் கணினி வசதியும் இணைய வசதியும் செய்து கொடுத்தால் போதுமானது; வறுமை ஒழிப்பு திட்டமெல்லாம் தேவையே இல்லை. இத யாரும் செய்யமாட்டேன்றாங்கப்பா. ////

நானும் நொந்து கொண்ட விஷயம் இது!!!

Chitra said...

மனுஷன் கணினி உலகத்திற்கு மாறிய பின்னரும்,கணினிய வைக்கிறதுக்குக் கூட வாஸ்து பாத்து தான் வைக்கிறான் இன்னைக்கு.


....... இருங்க, இந்த இடுகைக்கு நல்ல நேரம் பார்த்து விட்டு வந்து கமென்ட்றேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
உங்கள் கருத்துக்கள் சரியானதே!

Post a Comment

Related Posts with Thumbnails