April 18, 2010

மானங்கெட்ட தமிழகத் தலைமை

சென்னை விமான நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மையார் பார்வதி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தமிழனத்தலைவர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட முதியவர் ழகத் தலைவர் என்ன பதிலளித்தாலும் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காது.

இவரையெல்லாம் பதவியில் வைத்த தமிழக மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழன் என்று சொல்வதற்கு நானும் இன்று வெட்கப்படுகிறேன்.

இனிமேல் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதை "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா" எனவும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை "வந்தாரை வீழவைக்கும் தமிழகம்" எனவும் கூறினாலும் தகும்.

மனசாட்சி இல்லாத, இத்தாலி அம்மணிக்கு செவிமடுக்கும் தமிழகத்தலைமை இத்தகைய கடின மனமுடையது தான் என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் இத்தனை கேவலமாக இருக்கும் என்பது எதிர்பாராதது.

மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரைக் கூடவா மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்புவார்கள். அதோடு விமானநிலையத்தில் வை.கோ விடமும், பழ.நெடுமாறனிடமும் காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.


என்ன கொடும இதெல்லாம்.

2 comments:

infopediaonlinehere said...

It is a shame on our tamils...countries are encouraging medical tourism...why don't our government consider it as a great project

Anonymous said...

ஈழத்துத் தமிழரை எம் தானைத் தலைவர் உலகில் தலை நிமிர வைத்தார். ஆனால் ஆறு கோடி தமிழரின் நாட்டில் ஒரு கேடு கெட்ட அரசியல் அசிங்கத்தால் இன்று அத்தனை தமிழினமும் தலைகுனிந்து அவமானத்துடன் நிற்கின்றது. இந்த நிலை தொடர வேண்டுமா? தமிழக தமிழனே என்று நீ விழித்தெழுவாய்? பணத்திற்கும் கோவணத் துண்டிற்கும் உன் தன்மானத்தை அடகு வைப்பதை என்று நிறுத்தப் போகின்றாய் தமிழக உறவே?

யாழ்

Post a Comment

Related Posts with Thumbnails