April 20, 2010

கானாடுகாத்தான் முதல் கெய்ரோ வரை

நேத்து கே டிவி யில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படம் பார்த்திட்டு இருந்தேன். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிகம் படமாக்கப்பட்டிருந்ததால் சரி நம்ம தென்தமிழகத்தோட அழக பாத்து ரொம்ப நாளாச்சே என பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

க.கொ.க.கொ 2000த்தில் வெளிவந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரமது. கண்டுகொண்டேன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே திரைப்படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்ட வந்தது. காரணம் ராஜீவ் மேனன், ஏ.ஆர். ரஹ்மான், மம்முட்டி, ஐஸ்(வர்யா ராய்), தபு, ஷாமிலி என்ற நட்சத்திர பட்டாளத்தினால் தான். 

அப்போது எனது மைத்துனர் காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தான் அடிக்கடி டேய் ஐஸ பாத்தேன், ஷாமிலிய பாத்தேன் அப்படி எடுக்கிறாங்க இப்படி எடுக்கிறாங்கன்னு கடிதம் எழுதிக் கொண்டிருப்பார். தான் தேசிய விருது பெற்ற அஞ்சலி திரைப்படத்திற்கு பிறகு ஷாமிலி நடித்த முதல் படமும் இது தான் என்பதும் இதில் முக்கியமான விஷயம்.

பாரதியார் பாடலான "சுட்டும் விழிச்சுடர்" ரஹ்மானின் இசையில் ஹரிஹரனின் குரலில் அருமையாய் ஒலித்த திரைப்படம் என்பதினாலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெற்றியடைந்த அளவிற்கு திரைப்படம் வெற்றியடையவில்லை. "எங்கே எனது கவிதை" என்ற பாடல் வைரமுத்து அவர்களின் வரியில் , சித்ரா, ஸ்ரீநிவாசின் குரலில் இன்றும் நான் அதிகம் கேட்கும் பாடல்களில் ஒன்று.

சரி விஷயத்திற்கு வருவோம்... கானாடுகாத்தான் முதல் கெய்ரோ வரைன்னு தலைப்ப வச்சிட்டு விஷயத்த சொல்லலன்னா எப்பிடி. படத்தில் ரயில்வே கேட்டை கடப்பதற்காக நிற்கும் தபுவிடம், அஜீத் காதலை சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்ப்பதாக கதை செல்லும் போது "இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்" அப்படின்னு ஒரு பாட்டு வருதுங்க.அந்த பாட்ட அருமையா காரைக்குடியிலயே படமாக்கியிருக்கலாம் இயக்குனர் ராஜீவ்மேனன்.

அதுவரை காரைக்குடியை அருமையாக படமாக்கிய ரவி.கே.சந்திரன் அவர்களின் கேமரா அடுத்த சில நொடிகளில் கெய்ரோவின் பிரமிடுகளின் முன்னர் வைக்கப்படுகிறது. காரைக்குடி, கானாடுகாத்தானிலிருக்கும் ஒருவர் கெய்ரோ வரை கனவு காண்கிறார். இப்படித்தான் இன்று தமிழ் திரைப்படப் பாடல்கள் பலவும் படமாக்கப்படுகின்றன.

கதைக்கும் பாடலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமலோ அல்லது பாடலுக்கும் லொக்கேஷனுக்கும் சம்மந்தம் இல்லாமலோ தான் பாடல்கள் படமாக்கப்படுகின்றன. "சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என எகிப்தின், கெய்ரோவில் பாடினால் சந்தன தென்றல் வராது மண்ணெனும் சூறாவளி தான் வரும்.

இந்த பாடல் ஷங்கர் மஹாதேவனுக்கு தேசியவிருது வாங்கித்தந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தான் வசனகர்த்தா என்பதும் இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

எது எப்படியோ இவை போன்ற பாடல்களினால் தமிழர்கள் உலகைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத ஒன்று.

நல்லா எடுக்கிறாய்ங்கய்யா பாட்ட.

10 comments:

Chitra said...

"சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என எகிப்தின், கெய்ரோவில் பாடினால் சந்தன தென்றல் வராது மண்ணெனும் சூறாவளி தான் வரும்.


..... தமிழ் பட லாஜிக். கண்டுக்காம இருக்கணும். ஹா,ஹா,ஹா.....

கிறிச்சான் said...

நல்லா எடுக்கிறாய்ங்கய்யா பாட்ட!!!

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்-மிக பிடித்தப் பாடல்களில் ஒன்று!

Cable Sankar said...

எட்வின் பாடல்கள் என்பதே நிஜவாழ்க்கையில் இல்லாத ஒன்று. அதனால் பெரிதாய் லாஜிக் பார்பது சரிவராது என்று என் எண்ணம். அது மட்டுமில்லாமல் அதில் வரும் விஷுவல் பியூட்டி என்பது வெகு ஜன ரசிகர்களை கவரும் என்பதால் அந்த முயற்சி.

ராம்ஜி_யாஹூ said...

it is one of the movie with poor picturisation. AR Rahman's all songs were good while listening in audio but very poor when we watch in screen.

Poor costumes, no richness in costumes. Rajeevmenon shows aishwarya rai as a poor girl with poor costumes.

எட்வின் said...

Chitra said...

//தமிழ் பட லாஜிக். கண்டுக்காம இருக்கணும். ஹா,ஹா,ஹா.....//

அப்பிடித்தான் போல :)

எட்வின் said...

@ கிறிச்சான்

நன்றி

எட்வின் said...

@ Cable Sankar

கேபிளாரே நீங்க என் வலை பக்கம் வந்ததே பெரிய விஷயம்.

/அதில் வரும் விஷுவல் பியூட்டி என்பது வெகு ஜன ரசிகர்களை கவரும் என்பதால் அந்த முயற்சி.//

ஒத்துக்கொள்கிறேன் அண்ணே

எட்வின் said...

@ ராம்ஜி_யாஹூ

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.ஒருவேள ரவி.கே.சந்திரனுக்கு பதில் ராஜீவ் மேனனே கேமரா வேலையும் செய்திருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்குமோ?

பிரியமுடன் பிரபு said...

நல்லாதானே இருந்துச்சு?!?!?!?

எட்வின் said...

பிரியமுடன் பிரபு said...

//நல்லாதானே இருந்துச்சு?!?!?!?//

நல்லா தான் இருந்துச்சு. இன்னும் சிறப்பா எடுத்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் :)

Post a Comment

Related Posts with Thumbnails