June 05, 2010

சிசுக்கொலை-மனித இனத்தின் கோர முகம்



















சிசுக்கொலை

மானிட ஜென்மத்தின்

மானங்கெட்ட செயல்


சிசுவை

சிதைக்கும்

சீர்கெட்ட

சிந்தை-குழந்தை

நிந்தை என்பதாலா

அகந்தையாலா-இல்லை

தந்தை எவரென்ற

சந்தேகத்தினாலா!


கருவறை முதல்

கல்லறை வரை

சில்லறை ஆக்கிய

சில சில்லறைகளின்

சில்லறைத் தனம்

சிசுக் கொலை வரை தொடர்வது தான் வேதனை.

இது போன்ற ஈனச்செயல்களைச் செய்பவர்களை "உயிருள்ள சடலங்கள்" என சொன்னாலும் தகும்.

இந்தியா போன்ற நாடுகளில் வறுமையினாலும், ஆண் குழந்தை தான் வேண்டுமென்ற பிடிவாதமும்,நெறிமாறிய தொடர்புகளும், கருக்கலைப்புக்கும், சிசுக்கொலைகளுக்கும் காரணமென்றால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கருக்கலைப்பு (Abortion) இன்று சர்வசாதாரணமாகி வருகின்றது.

இன்று ஒருபுறம் குழந்தைளுக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கையில் குழந்தைகளுக்கு வழியமைந்த பின்னரும் கருக்கலைப்பு, சிசுக்கொலை போன்ற மறுபுறங்களும் தொடர்வது வேதனையளிக்கிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு 24 நொடிகளுக்கு ஒரு கருக்கலைப்பு செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கருக்கலைப்புகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் 39% மரணங்கள் கருக்கலைப்புகளாலேயே ஏற்படுகிறது எனவும் உ.சு.நிறுவனம் தெரிவிக்கிறது. இருதய நோயும்(21%), புற்றுநோயும்(18%) கூட இந்த அளவு மரணங்களை ஏற்படுத்தவில்லையாம். இது குறித்த காணொளியை கீழே இணைத்துள்ளேன்.


அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கும் முயற்சியாக ABORTION BLACKOUT (End Abortion by 2020) என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. http://www.abortionblackout.com/ என்ற இணையதளத்தில் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

------------
குண்டுகளைக் கூட - அணு

குண்டுகளைக் கூட அனுமதிக்கும் உலகம்

குழந்தைகளை மிதிப்பது ஏனோ!!

---------
புகைப்படம் நன்றி:  காயத்ரி சக்ரவர்த்தி & canon

3 comments:

கிறிச்சான் said...

நல்ல பதிவு !

Anisha Yunus said...

அருமையான புகைப்படம். எங்கிருந்து பெற்றீர்கள். ரெம்ப அருமையா படமாகியிருக்கு அந்த நிகழ்வு. உங்க பதிவு, நல்ல கேள்வி, ஆனால், அமெரிக்காவில் அபார்ஷன் என்பது ஒரு பெண்ணின் உரிமை என்று பார்க்கிறார்களே தவிர ஒரு உயிரின் உரிமை என்று பார்ப்பதில்லை. இங்கு அவர்களை பொறுத்தவரை வளர்ந்த உயிர்கள் மட்டுமே உயிர், மற்றதெல்லாம் குப்பைதான்.

எட்வின் said...

@ கிறிச்சான் & அன்னு நன்றி

புகைப்படம் குறித்து எழுத மறந்து விட்டேன்... மன்னிக்கவும். என்னை அதிகம் ரசிக்க வைத்த புகைப்படம் இது. canon தளத்தின் புகைப்படத் தொகுப்பிலிருந்து எடுத்தேன்.

Gayathri Chakravarthy என்பவர் அவரது canon EOS 40D கேமராவால் எடுத்த புகைப்படம் இது.
http://newsletter.canon-europe.com/web/locale/en-gb/2010_01/gallery/galleryviewer.aspx   இந்த சுட்டிக்கு போனா மேலும் பலர் canon கேமராவில் எடுத்த அற்புதமான புகைப்படங்களை பார்க்கலாம்.

ஆனால் நீங்கள் உங்களை அந்த தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

Post a Comment

Related Posts with Thumbnails