June 23, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு அவசியம் தான்


உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிச்சயம் அவசியம் தான் தமிழகத்துக்கு.

வறுமைக் கோட்டிற்கு கீழ்(அது என்ன கோடுன்னு எல்லாம் கேக்கப்பிடாது; ஒருநாளைக்கு ஐம்பது ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் என்கிறது விக்கி) இன்னும் தமிழக மக்கள் இருக்கின்ற நிலையில் இந்த மாநாடு நிச்சயம் தேவை தான்.

ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்படும் தமிழன் இன்னும் தமிழகத்தில் இருக்கையில் 350-380 கோடிக்கு ஒரு மாநாடு மிக அவசியமான ஒன்றே.

அரசு தமிழ் பள்ளிகள் பலவற்றில் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கின்ற நிலை இன்னும் தொடர்கையில் தமிழ் மாநாடு கண்டிப்பாக தேவை தான்.

ஒருபுறம் இலவசங்களை வாரியிறைத்து உழைப்பவர்களையும் சோம்பேறி ஆக்கியதை மறைக்க "உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்" என பாடல் எழுதி ஊரை ஏமாற்ற நிச்சயம் மாநாடு தேவை தான்.

ஈழத்தில் இனப்படுகொலையின் போது 39+1 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா நாடகம் நடத்தியதற்கு மாற்றாக இனியவை 40 என நாடகம் ஆட அவசியம் இந்த மாநா(டு)டகம் தேவை தான்.

கிராமங்கள் பலவற்றில் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில், அப்படியே இருந்தாலும் சரியான வசதிகள் இல்லாத நிலையில் இத்தனை கோடிக்கு தமிழ் மாநாடு தேவை தான்.

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும், சூரியன் பண்பலையும் சொல்லாத தமிழின் சிறப்பை இந்த மாநாடு சொல்லும் என்பதால் கூட இந்த மாநாடு நிச்சயம் தேவையான ஒன்று தான்.

பள்ளிக்கு சென்று களைப்பாக இருக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க காரணம் வேண்டுமென்பதால் நிச்சயம் மாநாடு தேவை தான்.

மாநாட்டு சுவாரஸ்யங்கள் சில

மாநாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தவர் ஒருவர், ஹலோ மைக் டெஸ்ட் ஒன்,டூ, த்ரீ டெஸ்ட் என்றார். இதில் எங்காவது தமிழ் இருக்கிறதா!! முதல்ல மைக்குக்கு என்ன தமிழ்னு சொல்லுங்க.

மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தினை இருட்டடிப்பு செய்து தேசிய கீதத்தை பாடவிட்டு இந்திய இறையாண்மையையும் காட்டிவிட்டார்கள் இந்திய தமிழ் விசுவாசிகள். பிரதீபா பாட்டில் அம்மா கோவிச்சிக்கும்னு தமிழ்த்தாய் வாழ்த்தை பாட விடலயோ என்னமோ!! அடச்சீ...

மாநாடு அவசியம் தான். நான் கேட்பதெல்லாம் அதற்கு எதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை? ஏன் இத்தனை கோடி பண விரயம்?

இன்னொரு டவுட்டு... திரைப்படங்களுக்கும், கடைகளுக்கும் தமிழ்ப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்பவர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?!!

8 comments:

Chitra said...

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும், சூரியன் பண்பலையும் சொல்லாத தமிழின் சிறப்பை இந்த மாநாடு சொல்லும் என்பதால் கூட இந்த மாநாடு நிச்சயம் தேவையான ஒன்று தான்.




...... உள் "குத்து" பலமா இருக்கே!

Ajith Bsc MBA said...

தமிழர்களின் மானத்தை வாங்க கருணாநிதியின் குடும்பத்தார் மட்டுமே போதும்

அஹோரி said...

கருணாநிதிக்கு தமிழ் தெரிந்தது தமிழன் செய்த பாவம்.

எட்வின் said...

@ Chitra

//உள் "குத்து" பலமா இருக்கே!
// என்னத்தச் சொல்ல, தமிழனுக்கு தேவையானது தான்

எட்வின் said...

@ Ajith

//தமிழர்களின் மானத்தை வாங்க கருணாநிதியின் குடும்பத்தார் மட்டுமே போதும்//

ம்ம்ம்ம்ம்ம்ம்

எட்வின் said...

அஹோரி said...

//கருணாநிதிக்கு தமிழ் தெரிந்தது தமிழன் செய்த பாவம்.//

எங்க போய் சொல்றதுக்கு இந்த கொடுமய எல்லாம்.

கிறிச்சான் said...

ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்படும் தமிழன் இன்னும் தமிழகத்தில் இருக்கையில் 350-380 கோடிக்கு ஒரு மாநாடு மிக அவசியமான ஒன்றே./////யாரோட அப்பன் வீட்டு பணம்?


கிராமங்கள் பலவற்றில் அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில், அப்படியே இருந்தாலும் சரியான வசதிகள் இல்லாத நிலையில் இத்தனை கோடிக்கு தமிழ் மாநாடு தேவை தான்.////
பள்ளி கூடங்கள கட்டி தமிழ் சொல்லி குடுங்கய்யா...

Anonymous said...

ஏம்பா! இந்த மாநாடு முடிஞ்சதும் நம்ம பசங்க எல்லாம் கோமனத்த கொடுத்துட்டு ஜட்டி வாங்கிக்கிலாமா ?

Post a Comment

Related Posts with Thumbnails