June 25, 2010

மைக்கேல் ஜாக்சனின் மறுபக்கம்

இன்றோடு (25.06.2009) பாப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் இறந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் காலஞ்சென்று ஒரு வருடமாகிய பின்னும் அவரது மரணத்திற்கான காரணம் சரிவர தெளிவாகவில்லை.பிரபலமானவர்களின் மரணம் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கிறது.

அவர் உயிரோடு இருக்கையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்; சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டன.

அவரது குழந்தையை உயரத்திலிருந்து கீழே போடுகின்ற விதம் பயமுறுத்திய நிகழ்வு ஒன்று அவரது மனநிலையைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

இவைகள் இப்படியிருந்தாலும் MJ வின் நற்பணிகளையும் மறக்க முடியாது. 1991 ல் வறுமையில் வாடும் சிறார்களை மனதில் கொண்டு "Heal The World" என்ற பாடலை அவரே எழுதியிருந்தார். அந்த பாடலைத் தான் அவர் பாடிய பாடல்களிலே சிறந்த பாடலாகக் கருதுவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

I think about the generations and they say we want to make it a better place for our children and our children's children so that they know it's a better world for them and I think they can make it a better place.இப்படித் தான் பாடலுக்கு முன்னர் மைக்கேல் கூறிப்போகிறார்.

Michael Jackson - Heal The World .mp3
Found at bee mp3 search engine

அதன் தொடர்ச்சியாக 1992 ல் "Heal The World Foundation" என்ற அமைப்பை ஏழ்மை மற்றும் வறுமையினால் வாடும் சிறுவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யும் வகையிலும்; மனோ ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லெண்ணத்திலும் ஏற்படுத்தினார்.

பல மில்லியன் டாலர்களையும் இதற்கென்றே செலவிட்டிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

1984 ல் Pepsi Cola வின் விளம்பரம் ஒன்றில் நடிக்கையில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக அவருக்கு பெப்ஸிகோலா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 1.5 மில்லியன் டாலர்கள் முழுவதையும் "Michael Jackson Burn Center" தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக அமெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

"Can You Feel It", "We Are the World" மற்றும் "Man in the Mirror" ஆகியவை உலக அமைதிக்காகவும், பிரிவினைகளுக்கு எதிராகவும் MJ ஆல் பாடப்பட்ட பிற பாடல்கள். இவற்றில் "We Are the World" பாடல் 1985 ல் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 39 இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.  அந்த பாடலை Lionel Richie என்ற மற்றொரு பாப் பாடகருடன் சேர்ந்து MJ எழுதினார். இப்படி MJ செய்த நற்பணிகள் பலப்பல.

ஆனா இன்னைக்கு நம்மூரிலயே பல பேர் கொஞ்சம் காச பாத்திட்டாங்கன்னா கண்ணு மண்ணு தெரியாம ஆடுவாங்க. உதவின்னு வந்தா ஓடி ஒளிவாங்க. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். "மனம் இருந்தா மார்க்கம் உண்டு".

Lionel Richie Stevie Wonder Micheal Jackson - We Are The World.mp3
Found at bee mp3 search engine

அவர் உயிரோடு இருக்கையில் அவர் சம்பாதித்ததை விட அவர் இறந்த பின்னர் இதுவரை அவரது இசை சம்பாதித்தது தான் அதிகமாம்.ஒரு பில்லியன் டாலர்களாம்!!

நன்றி: dailymail & wiki  
Heal The World

6 comments:

Chitra said...

He was indeed a legend. :-)

சுரேகா.. said...

இறந்த முதலாம் ஆண்டில் நல்ல பதிவு!

வாழ்த்துக்கள் அய்யா!

Shafiq said...

சார்,

நீங்கள் அவரின் கடைசி காலத்தில் அனுபவித்த நிற வெறியையும், அதனால் அவர் இஸ்லாமை தழுவியதையும் நீங்கள் குறிப்பிடுங்கள் அப்போதுதான் நீங்கள் அவரது முழு விசிறியாகவும், உண்மையை உலகுக்கு சொல்வதாகவும் அமையும்.

எட்வின் said...

@ Chitra

ஆமாங்க ... நிச்சயமாகவே He was a legend

@ சுரேகா

நன்றிங்க

எட்வின் said...

@ Shafiq

நன்றி.

எனது முந்தைய பதிவொன்றில் அவர் இஸ்லாமை தழுவியதைக் குறித்து எழுதியிருந்ததால் இங்கு குறிப்பிடவில்லை

Meerapriyan said...

mickel jackson padri nallaave ezhuthi irukkinga-meerapriyan

Post a Comment

Related Posts with Thumbnails