June 22, 2010

You Tube ல அடிச்சிட்டோம்ல செஞ்சுரி



காணொளிகளை அதாவது வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ ல் ஒரு நாளில் மட்டும் கோடி கணக்கான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இணையம் குறித்து அறிந்திருப்பவர்களில் இன்று Youtube தளத்தை அறியாதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள் என சொல்லலாம். 2005 ஆம் வருடம் முதல் இந்த தளம் இயங்கி வருகிறது. யூடியுப் வீடியோக்களை அதன் embed code ஆல் எளிதாக பிற தளங்களிலும் இணைக்கவியலுவதும் அதன் தனித்தன்மை.

குறிப்பாக இந்தியர்கள் அதிகம் உலவும் ஆர்குட்டில் குறிப்பிட்ட youtube காணொளியின் சுட்டியை(URL link) அளித்தாலே வீடியோவை சுலபமாக இணைக்க முடிவதால் மேலும் பிரபலமாகியிருக்கிறது யூடியூப்.

அப்படிப்பட்ட youtube தளத்தில் விளையாட்டாக 2008 முதல் வீடியோக்களை இணைக்கத் துவங்கினேன். இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு அன்பரும், புதிய பதிவருமான கெர்ஷோம் @ கிறிச்சானுக்கு உண்டு. http://www.youtube.com/arnoldedwinp இது தான் எனது பக்கம்.

ஆரம்பத்தில் யூடியூப் தளத்தில் இடம்பெறாத பாடல்களை இணைக்கலாம் என்ற ஆர்வம் தான் உத்பால் பிஸ்வாஸ், வைரமுத்து, ஹரிஹரன் கூட்டணியில் உருவான காதல் வேதம் தமிழ் பாப் பாடல்களை இணைக்க தூண்டியது.(copy right யாரும் கேக்காம இருக்கிற வரைக்கும் சந்தோஷம்) அதன் பின்னர் சில கிறிஸ்தவ பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் இணைத்தேன்.

தியாகராஜ பாகவதரின் பூமியில் மானிடன் பாடலையும் புகைப்படங்களைக் கொண்டு காணொளியாக மாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதற்கு காரணமான அண்ணன் அன்பு அவர்களுக்கும், கிறிச்சானுக்கும் நன்றி. அந்த காணொளி, தியாகராஜ பாகவதரின் விசிறிகள் பலரது கவனம் ஈர்த்திருப்பதும் சந்தோஷம் தான். (பலருக்கு பிடிக்காமல் போனது வேறு விஷயம்)

உலகின் பல முனைகளிலிருந்து முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் காணொளிகளுக்கு கருத்துரைக்கும் போது நிச்சயமாகவே இணையத்தைக் குறித்தும். யூடியூபைக் குறித்தும் ஆச்சரியமும் பெருமிதமும் தோன்றும்.

இன்றுவரை 104 அன்பர்கள் யூடியூப் தளத்தில் என்னை பின் தொடருகிறார்கள் என்பது கொசுறு தகவல். இங்கயும் அடிச்சிட்டோம்ல செஞ்சுரி.

நான் அதிகம் ரசித்த "நீ என்பதில் நானும் அடங்கும்" பாடல், காதல் வேதம் ஆல்பத்திலிருந்து இங்கே.

நன்றி: youtube &  விக்கி

6 comments:

Chitra said...

இன்றுவரை 104 அன்பர்கள் யூடியூப் தளத்தில் என்னை பின் தொடருகிறார்கள் என்பது கொசுறு தகவல். இங்கயும் அடிச்சிட்டோம்ல செஞ்சுரி.

... Congratulations! :-)

எட்வின் said...

நன்றி சித்ரா அக்கா... வலைப்பக்கம் வந்தே ஒரு வாரம் ஆகி விட்டது. நேற்று தான் சற்று நேரம் கிடைத்தது.

கிறிச்சான் said...

இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு அன்பரும், புதிய பதிவருமான கெர்ஷோம் @ கிறிச்சானுக்கு உண்டு/////////////////// ஹி ஹி ஹி...நன்றிங்க அர்னீ...////
செஞ்சுரி'க்கு ஒரு 'ஓ' போடு !!!

எட்வின் said...

@ கிறிச்சான்

உண்மைய சொல்லணும்ல... :)

கிரி said...

நானும் வீடியோ ஐ அப்லோட் செய்து கொண்டுள்ளேன். ஆனால் சமீபமாகத்தான்.

வாழ்த்துக்கள்! :-)

eeasy baby said...

நானும் என்னுடைய வீடியோ வை அப் லோட் செய்தேன் , என்ன என்றே தெரியவில்லை , என்னுடைய அக்கௌன்ட் close பண்ணி விட்டார்கள் . எனக்கு என்னுடைய தவறு என்ன என்பதே தெரியவில்லை. தயவு செய்து அப் லோட் செய்ய என்ன செய்ய வேண்டும் , என்ன செய்ய கூடாது என்று தங்கள் அடுத்த பதிவில் தெரிய படுத்தவும் .
நன்றி
சிவா

Post a Comment

Related Posts with Thumbnails