August 15, 2010

சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?


இப்படியான விஷயங்களுக்கு எல்லாம் சுதந்திரத்தை காரணம் காட்டினால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை. இவை சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல :)

சுதந்திரமாக வீட்டில் எஸ்.எம்.எஸ்
செய்ய முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

காதலித்த பெண்ணை
கல்யாணம் செய்ய முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக சீரியலை-டி.வி
சீரியலை பார்த்து
அழ முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக பேஸ்புக்கில் Farm Ville
விளையாட முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

சுதந்திரமாக சுவர்களில்
பாட்டு பாட அனுமதியில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?
(பாட்டு பாடுவது என்னவென்று "வைகாசி பொறந்தாச்சு" திரைப்படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடும்!!)

விளம்பரம் செய்யாதீர் என்றிருந்தும்
சுவரில் போஸ்டரை ஒட்டவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

நிறைவேற்றுகிறோமோ இல்லையோ
சுதந்திரமாக தேர்தல் வாக்குறுதிகளைக் கூட
முழ(ழு)ங்க முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

செத்து மடியும் தமிழனுக்காக நாற்பது பேர்
பதவி விலகுவார்கள் என சொல்லி விட்டு
பதவி விலகாமல் இருப்பதற்கு கூட
சுதந்திரம் இல்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

இப்படி... சுதந்திரமாக வலைப்பூவில்
மொக்கை கூட எழுத முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

9 comments:

Jey said...

இந்த மாதிரி மொக்கைய திட்டி ஒரு பின்னூட்டம் போடமுடியலைனா...
அப்புறம் கிடைச்ச சுதந்திரம் என்னாத்துக்கு....:)

Chitra said...

நிறைவேற்றுகிறோமோ இல்லையோ
சுதந்திரமாக தேர்தல் வாக்குறுதிகளைக் கூட
முழ(ழு)ங்க முடியவில்லை என்றால்
சுதந்திரம் கிடைத்து என்னத்திற்கு?


...... அப்படி போடுங்க அருவாளை! கலக்கல்!

Farmville vivasaayigal sangam said...

Thalaippa paartthuttu ennamo bayangaramaa samoogatthai chaada poreengannu ninachu padikka aarambichom. Enna Saare ippadi sodhappitteenga. Mokkai podavum oru alavu irukkunga. Adhu enna facebookla Farmville vilaiyadaravanga melaye eppavum oru kannu. Vidunga thalaivaa sudhndhiram kidachu 64 varushmayaachu.

Karytthu solla kilambinavanga naanga said...

Thalaivaa sudhandhiram kidaichadha ninaivu padutthinadhukku nandri. Ippalerndhu unga karutthukku edhir karutthu sollaporom. Thappa irundha manninga."ENDHA KARUTTHUM NALLA KARUTTHUNNU EDUTTHUKKARADHUTHAAN EZHUTTHALARUKKU AZHAGU". Saringa thalaivaa indha maasam ezhudhina moonru karutthukkum namma karutthu padhivaagi irukku. tension aagama padinga. kobappada vendam. chumma ululangaattikkuthaan.

எட்வின் said...

வலைப்பக்கம் முன்னர் போல் அதிகம் வர இயலாததால் தான் தாமதாக பதிலளிக்க நேரிடுகிறது. மன்னிக்கனும்

@ Jey... கண்டிப்பாங்க... என்ன திட்டுறதுக்குக் கூட சுதந்திரம் இல்லன்னா வலைப்பூ இருந்து என்னத்துக்கு, கருத்து சுதந்திரம் இருந்து என்னாத்துக்கு இல்ல சுதந்திரம் தான் கிடச்சி என்னாத்துக்கு.

(அவ்வ்வ்வ்வ்வ்வ்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ம்ப நல்லவண்டா)

எட்வின் said...

சித்ரா அக்கா... நெல்லைக்காரங்க அப்படின்றதை சொல்லித்தான் தெரியணுமா? அப்பிடிப் போடுங்க "அருவாளை"ன்னு சொல்லுறதிலயே தெரிஞ்சிப் போச்சே. ம்ம்ம்ம்

எட்வின் said...

சங்கம் வச்சிருக்கிறவங்களுக்கு... உங்க சங்கம் இன்னும் பல சாதனைகளும், அரும்பணிகளும் செய்யவும்; இவை போன்ற மொக்கைகளை தொடர்ந்து படிக்கவும் வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அன்பு நண்பரே...

உங்கள் வலைப்பூ பற்றிய பகிர்வை வலைச்சரத்தில் இன்றைய எனது தித்திக்கும் தமிழ் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன். அந்த பகிர்வை படிக்க...

http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_17.html

நன்றி.

முனைவர்.இரா.குணசீலன் said...

இன்றைய வாழ்க்கை நடைமுறையை அழகாகச் சொல்லியிருக்கீங்க..

Post a Comment

Related Posts with Thumbnails