September 11, 2010

சாம்பியன்ஸ் லீக் T-20 ம் சச்சினும்


ஐ.பி.எல்-3 ற்கு பிறகு சர்வதேச அளவில் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் லீக் T-20 என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 

அதோடு ஐ.பி.எல் T-20 போட்டிகளின் ஆணி வேராக இருந்த லலித் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் புறந்தள்ளப்பட்ட பின்னர் (ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் முதல் போட்டி என்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஆடினார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் இந்த போட்டிகள் துவங்குவதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஐ.பி.எல் T-20 போட்டிகள் பலவற்றின் முடிவு முன்னமே தீர்மானிக்கப்பட்டன என்ற கருத்து ஒருபுறமும் பாகிஸ்தான் வீரர்கள் மீதான புகார் மற்றொருபுறமும் இருக்கையில் இந்த போட்டிகள் பிரச்சினை ஏதுமின்றி நடந்தேறினால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலருக்கும் மகிழ்ச்சியே. 

அரசியலையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது போன்று கிரிக்கெட்டையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிடுமோ என்னமோ!

சச்சினைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவிற்காக ஒருதின போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், மும்பை இன்டியன்ஸ் அணிக்கு தலைமை ஏற்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் களமிறங்கியிருப்பது சரியென படவில்லை.

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கும் சச்சின் 2011 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு அவரை எந்தவிதம் தயார் செய்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சினின் இதே எண்ணம் தொடருமானால் சச்சினின் கரங்களில் உலகக்கோப்பை தவழ்வதை நாம் காண முடியாது என்பதாகவே எனக்கு படுகிறது.  இது வரை 1992 முதல் 2007 வரை ஐந்து முறை உலகக்கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற நிஜத்தை எவரும் மறந்து விட முடியாது. 

-----

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் துவக்க விழாவில் "மையக்கருத்து பாடலுடன்" (Theme Song அப்படிங்கிறதுக்கு இது தான் தமிழாம்ல) நான் அதிகம் ரசிக்கும் Enrique Iglesias பாடிய Be With You பாடலைக் கேட்டு மீண்டும் ஒருமுறை மலைத்துப் போனேன்.



3 comments:

எஸ்.கே said...

நீங்கள் சொல்வது போல எனக்கும் தோன்றியது. இந்திய அணி ஆடும் ஆட்டங்களில் ஆடாமல் இந்த போட்டிகளில் ஆடுவது சரியல்ல.

Unknown said...

சச்சினுடைய எண்ணத்தை பத்தி எல்லாம் தப்பா சொல்லதீங்க .. ஏன் நினைக்ககூட செய்யாதீங்க.. இப்ப இருக்குற டீம்ல attitude(அது தான் எண்ணம் ) நல்ல இருக்குற ஒரே மனுஷன் சச்சின் தான். BCCI தான் ஓய்வு கொடுத்தாங்க. அவர் இருக்குற மும்பை டீம் champions league தேர்வு ஆனதால் வேற வழிஇல்ல்லாமல் சச்சின் போக வேண்டியதாச்சு. எதோ அவரே ஓய்வு வாங்கிட்டு T20 விளையாட போனது மாதிரி நீங்க சொல்லுறது சுத்தமா சரி இல்லை.

எட்வின் said...

@ Mohan

சச்சின் நல்லவரு தான், சச்சின் என்னும் பெருமை மிகு இந்தியன் என்று பதிவும் எழுதியிருக்கிறேன். ஆனால் 20-20 போட்டிகள் ஆட அதிக உடல் உழைப்பு தேவை என்பதால் ஆடுவதில்லை என்று சொன்ன சச்சின் ஏன் ஆடுகிறார் என்பது தான் எனக்கு புரியவில்லை.

Post a Comment

Related Posts with Thumbnails